Posts Tagged ‘Literature’

தஞ்சாவூர்க்கவிராயர், சுந்தர்ஜி – தனி இதழ்கள்

Posted in இலக்கியம், புதிய இதழ் on September 16th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
புதிய இதழ்கள் எப்போதுமே மகிழ்ச்சி தருவன. அது பெரிய வெகுஜன இதழாகட்டும், சிறு பத்திரிகையாகட்டும், புது முயற்சிகள் எப்போதுமே உற்சாகமானவை. மாலனை ஆசிரியராகக் கொண்ட  ‘புதிய தலைமுறை’ விஜயதசமி அன்று வெளியாகும் என்று நினைக்கிறேன். விகடனில் முன்னர் ஆசிரியராக இருந்த ராவ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘சூரியக் கதிர்’ என்ற புதிய இதழ் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னுடைய நீண்ட நாள் நண்பர் பொன். வாசுதேவன், ‘அகநாழிகை’ என்ற இருமாத இதழை அக்டோபர் 2009ல் இருந்து கொண்டு வர இருக்கிறார்.
சென்ற வாரம் ‘சுந்தர்ஜி’ இதழ் எனக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன்னரே ‘தஞ்சாவூர்க்கவிராயர்’ இதழ்களும் வந்து சேர்ந்தன. இந்த இரண்டு இதழ்களும் விசேஷமானவை. இரண்டுமே தனி ஆசிரியர்களின் சொந்த இதழ்கள். இதில், அந்தந்த ஆசிரியர்களின் சொந்தப் படைப்புகள் மட்டுமே வெளிவரும். ‘நேசமுடன்’ மடல் இதழைத் தொடங்கியபோது, இதே கருத்தைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன். இப்போது அது இவ்விரு கவிஞர்களின் தனி இதழ்களாக உருவாகி இருக்கின்றன.
முதலில் தஞ்சாவூர்க்கவிராயர். மூன்று இதழ்கள் வந்துவிட்டன. பல ஆண்டுகளாக கவிதைகள் எழுதுபவரும் மொழிபெயர்ப்புகள் செய்பவருமான தஞ்சாவூர்க் கவிராயரான கோபாலகிருஷ்ணனின் தனி இதழ். சமீபத்தில் கல்கி இதழில் 13 வாரங்கள் கவிதைத் தொடர் ஒன்றை எழுதி முடித்தார். கணையாழியில் தொடர்ந்து இவரது கவிதைகளை நான் படித்திருக்கிறேன். இப்போது இந்த இதழில் (24 பக்கங்கள்) ஏராளமான கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கடைசியில் குழந்தைகளுக்காக இவர் எழுதியுள்ள மழலைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடைசி இரண்டு பக்கங்களில் ராஜாஜியின் ஜெயில் டைரியை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.
சுந்தர்ஜி. தஞ்சை மண்ணில் இருந்து வந்த மற்றொரு கவிஞர். தஞ்சை பிரகாஷ்தான் இவர்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன். இவருடைய கவிதைகளையும் நான் சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். கோபாலகிருஷ்ணன் நேரில் பழக்கம் உண்டு. இவர் யாரென்று நேரில் பார்த்து அறியேன். ஆனால், சுந்தர்ஜி இதழ் மொத்தமும் இவர் கவிதைகள் இவருடைய பல்வேறு ஆர்வங்களை எனக்கு எடுத்துக் காட்டியது. ரசனை மிக்க கவிதைகள்.
எப்படி எனக்கு இவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றவனவோ, அப்படியே இவர்களின் இந்த தனி இதழ் கருத்தும் மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், சிறுபத்திரிகைகளில் வெளிவரும் பல கவிதைகளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு கவிஞரைப் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்கிக்கொள்ள, ஒரு சில தனிக் கவிதைகள் போதுமானதாக இருப்பதில்லை. அதற்கு அவர்களின் கவிதைத் தொகுதிகளைத் தேடிக்கொண்டு போகவேண்டும். புத்தகம் என்றவுடனே அதன் விலையும் கிடைக்குமிடங்களும் பெரிய இடர்களாக மாறிப்போய்விடுகின்றன. இந்த தனி இதழ்கள், கவிதைத் தொகுதிக்கான வேலையையும் சேர்த்துச் செய்கிறது.
இதில் உள்ள பல கவிதைகள், வேறு சிறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஏனெனில், ஒவ்வொரு இதழும் தமக்கான அளவுகோல்களைக் கொண்டே ஒரு கவிதையைத் தேர்வு செய்யும். அந்தந்த ஆசிரியர்களின் பார்வையில் ஒரு சில, கவிதைகளாகவே தோன்றாமல் போகலாம். ஆனால், பல நுட்பமான கவிதைகள் வெளியிடப்படும் வாய்ப்பே இல்லாமல் காகிதத்திலேயே சமாதி அடைந்துவிடக்கூடும். இந்த தனி இதழ்கள், அப்படி காணாமல் போய்விடக்கூடிய கவிதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தனி இதழ்கள், இவ்விதழ்களை உருவாக்குவோரின் ஆளுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. தஞ்சாவூர்க் கோபாலி, முக்கியமான மொழிபெயர்ப்பாளரும் கூட. அவர் மழலைப் பாடல்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் என்பதை இந்த இதழைப் பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். இந்த இதழ்களில் அவர்களின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த இதழ்களில் மற்றொரு விஷயமும் உள்ளூர நடக்கிறது. கவிஞர்களே இதழ்களின் ஆசிரியர்களாகவும் ஆகும்போது, நல்ல கவிதைகளைத் தேர்வு செய்வதும், அது வாசகர் மத்தியில் போய்ச் சேருவதாக இருக்கவேண்டும் என்பதையும் இந்த ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சுயதேர்வு. சுய மதிப்பீட்டை மேம்படுத்தும் தேர்வு இது.
இந்த இதழ்களின் உள்ளடக்கத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. வெரைட்டி இல்லாமல் போய்விடக் கூடிய பாதிப்பு ஏற்பட்டுவிடலாம். இன்னொரு சிக்கல், இதன் வாழ்நாள். கவிஞர்களால் தம் சொந்தப் பணத்தைப் போட்டு, எத்தனை இதழ்கள் கொண்டு வர முடியும்? தெரியவில்லை. அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.
படிப்பதற்கு இந்த இதழ்கள் சிறப்பாக இருக்கின்றன. அதுதான் வாசகனாகிய எனக்கு முக்கியம்.

வலி ஏன்?

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள் on September 16th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

சமீபத்தில் மலேசியாவின் இளம் எழுத்தாளர்கள் நடத்தும் வல்லினம் வலைஇதழைப் படித்துக்கொண்டு இருந்தேன். ஏற்கெனவே அச்சு இதழாக வெளிவந்தபோது ஓன்றிரண்டு இதழ்களை வாங்கிப் படித்திருக்கிறேன். சமீபத்திய இதழில், மலேசிய இளைய எழுத்தாளர்களில் பலர் குமுறித் தள்ளியிருக்கிறார்கள். காரணம் இதுதான்: மலேசியாவின் முந்தைய தலைமுறை எழுத்தாளரான சை.பீர் முகம்மது அங்கே ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். தலைமை ஏற்றவர் மலேசிய இந்தியக் காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு. விழாவிலேயே 61,000 மலேசிய வெள்ளிகள் திரட்டப்பட்டு, சை.பீர்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. சை.பீர். பேசும்போது, அடுத்த ஜென்மத்திலாவது சாமிவேலுவின் அணுக்கத் தோழர்கள் கூட்டத்தில் தான் இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான், இளைய எழுத்தாளர்கள் கொதித்துப் போய்விட்டார்கள். Are you so cheap? என்று கேட்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

நம்பிக்கையின் வீழ்ச்சி இது. பெரிய எதிர்பார்ப்போடும் கரிசனத்தோடும் அண்ணாந்து பார்த்து வந்த ஒரு எழுத்தாளர் சட்டென சரிந்து மண்ணில் வந்து நிற்கும்போது ஏற்படும் அதிர்ச்சி இது. இது நாள் வரை அந்த மூத்தவர் பேசிய பேச்சு, வாழ்ந்த வாழ்வு அத்தனையும் இப்போது கேள்விக்குள்ளாகிறது. அவரது நோக்கமும் ஈடுபாடும் சந்தேகத்துக்கு உள்ளாக்கிறது. அதைவிட, தேவதா விசுவாசத்துடன் பார்த்த ஒரு நபர், சரியும் போது, அவரின் வாசகர்களுக்கும் தோழர்களுக்கும் ஏற்படும் வலி சொல்லில் வடிக்க முடியாதது.

தமிழகத்தில் இந்தச் சரிவு மிகவும் சகஜம். நான் பல எழுத்தாளர்களின் சரிவைப் பார்த்து மனம் நொந்து போயிருக்கிறேன். அரசியல் தலைவர்களின் சரிவைப் பார்த்து வலி அடைந்திருக்கிறேன். சின்ன வயதில் அப்படித்தான் ரியாக்ட் செய்ய முடியும் போலிருக்கிறது. பலரை அப்பா ஸ்தானத்திலும் அண்ணன் நிலையும் வைத்துப் பார்த்திருக்கிறேன். சீக்கிரம் பலர் அந்த இடத்தைக் காலிசெய்துவிட்டுப் போய்விடுவார்கள். தப்பு அவர்கள் மேல் இல்லை. எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்ட என்மேல் தான் தப்பு என்பதைப் புரிந்துகொண்ட போது, எனக்கு லேசாக தலைமுடி நரைக்கத் தொடங்கியிருந்தது.

ஒருவகையில் லட்சியவாதம், கருத்துகளை முதன்மைப்படுத்துவது எல்லாமே அபத்தங்கள். எழுத்தைப் போலவே வாழ்வை அமைத்துக்கொள்வது சாத்தியமில்லை போலும். எழுத்தையும் எழுத்தாளனின் வாழ்வையும் அவனது குணங்களையும் நேர்க்கோட்டில் வைத்துப் பார்ப்பதால் வரும் வினை இது. இந்த மூன்றுமே மூன்று வேறு வேறு திசைகளில் பயணிக்கக் கூடியவை என்பதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் காலம் ஆயிற்று.

நோக்கங்கள், கருத்துகள், இலக்குகள் எல்லாமே மாறக்கூடியன. எதுவுமே நிலையானது இல்லை. ஏன் மாறின, எப்படி மாறின என்று ஆயிரம் கேள்விகள் எழுப்பி, குதர்க்கக் காரணங்கள் கற்பித்துக்கொண்டு, மனத்தை ரணப்படுத்திக்கொள்வதால் ஏது பலனுமில்லை. வாசகன் தனி மனிதன். எழுத்தாளன் இன்னொரு தனி மனிதன். தனிப்பட்ட வகையில் வாசகனின் எதிர்பாப்புகளை நிறைவு செய்யவேண்டும் என்ற எழுத்தாளனுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. வாசகன் கண்டுபிடிக்கும் காரணங்கள், உண்மையான காரணங்களாக இருக்கவேண்டும் என்றும் அவசியமில்லை. இதையெல்லாம் மீறி, தன் கருத்துகளை, நோக்கங்களை, நடத்தைகளை ஒரு எழுத்தாளன் மாற்றிக்கொள்ள எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

நேற்று வரை இப்படி பேசினாயே, இன்று இப்படித் தடம் புரண்டு பேசுகிறாயே என்று அவனைக் கேட்பதிலும் அர்த்தமில்லை. பேசுவது அவன் உரிமை. அவன் பேச்சை நம்பியது வாசகனான உன் தப்பு. அல்லது, அது நேற்று வரை பேசினது, இன்று நான் பக்குவமடைந்துவிட்டேன், வேறு குரலில், வேறொரு புரிதலில், வேறொரு கோணத்தில் பார்க்கக் கத்துக்கொண்டு இருக்கிறேன். அதனால், இப்படிப் பேசுகிறேன் என்று எழுத்தாளன் சொல்லக் கூடும். நீ அந்த இடத்துக்கு வந்து சேரவில்லை என்பது உன் குற்றமே அன்றி, என் பிழையல்ல.

அடிப்படையில், எழுத்தாளன் x வாசகன் உறவு என்பது லவ் ஹேட் ரிலேஷன்ஷிப் மாதிரியானது. எழுத்தாளனுக்கு ஒரு சமயம் வாசகன் வேண்டும், இன்னொரு சமயம் அவன் வேண்டாம். வாசகனுக்கும் இதே நிலைதான். எந்த சமயத்தில் வேண்டும், வேண்டாம் என்பதைப் புரிந்துகொள்வதில்தான் சிக்கல் பிறக்கிறது.
என் வரையில், நான் பின்பற்றும் ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. படைப்புகளைப் படிப்பேன். பாராட்டுவேன். கொண்டாடுவேன். படைப்பாளர்களைப் படிப்பதில்லை. அவர்கள் மேல் என் அபிமானக் கோபுரத்தைக் கட்டுவதில்லை. நம்பிக்கைச் சிகரத்தை ஏற்றுவதில்லை. நாளைக்கு இந்தக் கோபுரம் சரியும்போது, அந்த வலியை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.

சொல்லப்போனால், இந்த வலி, அந்த எழுத்தாளருக்குத் தன்னால்தான் ஏற்பட்டது என்று தெரிய வாய்ப்பே கிடையாது. எதற்கு என் கற்பனை கொண்டு, நானே எனக்குச் சூடு வைத்துக்கொள்ள வேண்டும்? அர்த்தமில்லைதானே?

வழி சொல்லுங்க.. – கடிதம் 1

Posted in கடிதங்கள் on August 27th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
மனத்தைத் தொடும் நிகழ்வு….
எத்தனையோ பேர் இப்படி தமிழ் ஆர்வம், தமிழ் மேதைமை, எழுத்து, பத்திரிகை ஆசை என்று எதிர்காலத்தை சற்றும் யோசிக்காமல் என்னிடமும் பேசியதுண்டு. இயல்பிலேயே வைஷ்ணவத்தன்மை எனும் இரக்க சுபாவம் உள்ள எனக்கு ஒன்றும் சொல்லத்தோன்றாது. ஏதாவது உதவணும் என்று தோன்றும். ஆனால் தனிப்பட்ட வகையில் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?! ஆனால் இப்படி ஆர்வக்கோளாறோடு பேசியிருக்கும் ஓரிரண்டு இளைஞர்களை வேறு திசைக்கு திருப்பி விட்ட நல்ல காரியத்தை செய்திருக்கிறேன். அனுபவம் அப்படி! என்ன செய்ய? இப்போது இருகும் பெரிய ஆள்களிடம் பழகியிருப்பதால் அவர்களின் வாழ்க்கையை உற்று நோக்கியிருக்கிறேன்… இவ்வளவு சாதனைகள் செய்தும் வாழ்க்கையில் என்ன பார்த்துவிட்டார்கள்… என்று தோன்றும்.
ஆனாலும் நம் நிலைமை … சேற்றுக் குளத்தில் பூத்த தாமரையைப் பறிக்க காலை விட்டு, முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட கஜேந்திரன் நிலைமைதான்… பரந்தாமன் எப்போது வருவது?
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்

மனனம் – இ.பா. கடிதம்

Posted in கடிதங்கள் on August 17th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
Dear Venkatesh,
Incidentally my new Email ID is parthasarathyindira@gmail.com I don’t use yahoo much.
Re. ‘yAthum UrE yAvarum kelir’  Avvai’s interpretation is totally wrong. It is ‘kelir’ and not ‘kElir’. ‘kelir’ means ‘kin’.
This poem is a ‘rebel poem’ (‘Kalakak kavithai) during the Sangam period. The Sangam Tamils lived an epicurean life enjoing their wine and women. Kanian Pookunranar, the author of this poem spells out his existential philosophy that one is responsible for his own life. For whatever happens to him  he cannot put the blame on others.In this context ‘Death is no news’.( ‘Birth is an accident and death a certainty’- Existentialism) If you live like a float in the river stream witha kind of disinterested interestedness in life(Gita) you would not look anyone as greater than you and you would not look down on another as inferior to you.Where is the tragic sentimentality in this poem? On the other hand it helps you develop optimism and a positive attitude toward everything
IP

மனனம் – எதிர்வினை 1

Posted in கடிதங்கள் on August 17th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
அன்பு வெங்கடேஷ்
வணக்கம்.
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.
மனனம் குறித்து நீங்கள் எழுதியது பல்வேறு சிந்தனைகளை நினைவுபடுத்திவிட்டது.
செய்யுள்களும், வாய்ப்பாடும், இலக்க‌ணமும், சூத்திரங்களும் சிறுவயதிலேயே பொருள் தெரிந்தோ தெரியாமலோ மனனம் செய்துவிட்டால் எத்தனையோ வருடங்களுக்குப் பின்பும் ஒருமுறை நினைவுகூர்ந்துவிட்டால் போதும் சுவிட்ச்சைத் தட்டிவிட்டதுபோல எல்லாம் அப்படியே நினைவுக்கு வரும். (ஆமாம் சுவிட்சுக்கு தமிழ் என்ன) பின்னே அயல்தேசங்களில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மவுசு எப்போதும் இருப்பதன் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள். இந்த மனனமும் ஒரு காரணம்.
அய்ய்ய்ய்யோ வெங்கடேஷ்
கேள்விகள் குறித்தும் எழுதிவிட்டீர்களா
கேள்விகளாலேயே செய்யப்பட்ட தலையா உனக்கு என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ளும் அளவில் கேள்விகள் எனக்குள் தோன்றும்.
நீங்கள் முன்வைப்பது அடிப்படையில் நியாயமான கேள்விகள். இந்தக் கேள்விகள் போன்று பதிலில்லா கேள்விகள் அணிவகுத்து என் முன்னே நிற்கும்போது கஷ்டப்பட்டு உறங்கச் செல்வேன்.
மறுப‌டி நேசமுடன் ஆரம்பித்தமைக்கும் வாழ்த்துகள். அன்று விருது விழாவில் பேச இயலவில்லை. நீங்கள் வந்திருந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
அன்புடன்
மதுமிதாஅன்பு வெங்கடேஷ்

மதுமிதா

மாயவித்தை செய்யும் மனனம்

Posted in நேசமுடன் on August 14th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments
சின்ன வயதில் இருந்து எந்த ஒரு பாடத்தையும் செய்யுளையும் கணித சூத்திரத்தையும் மனப்பாடம் செய்யக்கூடாது என்று மனத்தில் தோன்றிவிட்டது. எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது என்றெல்லாம் ஞாபகமில்லை. ஆனால், பாடத்தைப் புரிந்து படித்துக்கொள்வதும் கணித சூத்திரத்தை விளங்கிககொள்வதும் முக்கியமே தவிர, மனப்பாடம் செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்துவிட்டேன். இதே முனைப்புடன் கல்லூரிக் காலத்தையும் ஓட்டிவிட்டேன்.
கல்லூரிக் காலத்தில் மனப்பாடம் செய்பவர்களை மிகவும் இளக்காரமாக பார்த்ததும் உண்டு. சுயசிந்தனை அற்றவர்கள், மதிப்பெண் வாங்குவது மட்டுமே குறிக்கோள், புரிந்துகொள்வது அல்ல என்பது அப்போது என் எண்ணம். பல மாணவர்களிடம் அது உண்மையாகவும் இருந்தது. முதலாண்டு படித்தது எதுவும் அடுத்த ஆண்டில் ஞாபகம் இருந்ததில்லை. எல்லாம் அந்த ஆண்டு எழுதும் தேர்வோடு முடிந்து போய்விட்டவர்களும் உண்டு.
ஒவ்வொரு விஷயத்தையும் ஊன்றிப் படிக்க திறனற்றவர்களே, மனனம் செய்வார்கள் என்ற ஒருவித தப்பான எண்ணமும் இருந்தது. தேர்வும் மதிப்பெண்ணும் அதனால் பெறப்படும் உயர் உத்யோகமும் மட்டுமே முக்கியமாகக் கருதப்படும் காலகட்டத்தில், மாணவர்கள் மனனம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நமது அமைப்பில் உள்ள குறையிது. மாணவர்கள் என்ன செய்வார்கள்? இதெல்லாம் இப்போது தோன்றும் எண்ணங்கள். அன்று, மனனம் செய்து எழுதுபவர்களை, “வாந்தி”, “டப்பா” என்றெல்லாம் கேலி பேசியது உண்டு.
படிப்பு என்றில்லை, இலக்கியத்திலும் இதே அளவுகோலைத்தான் நான் பயன்படுத்தினேன். சந்த நயத்தோடு, மீட்டரோடு எழுதப்பட்ட செய்யுள்களை புறமொதுக்கிவிட்டேன். பாவகைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேனே தவிர, அதைக் கொண்டு எழுதுவதை கவிதை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. இது என் தப்பு மட்டுமல்ல. நான் படித்த பல சமகாலக் கவிதைத் தொகுதிகள், உள்ளடக்கமே இல்லாமல் வெறும் செய்யப்படும் கவிதைகளாக இருந்தன. நிறைய பேருக்கு மீட்டர் பிடிபட்டுவிட்டது, மேட்டர் பிடிபடவில்லை. மரபுக் கவிதையில் எனக்குப் போதுமான பயிற்சி இல்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
ஆனாலும் படித்ததில்  ஏராளமானவை குப்பைகள். புதுக்கவிதையும் நவீன கவிதையும் தான் என்னைக் காப்பாற்றின. கவிதையை அனுபவிக்கும் ரசனை எனக்குப் புதுக்கவிதை வழியேதான் பிடிபட்டது. ஆங்கிலக் கவிதை வழியே இந்த ரசனை இன்னும் கொஞ்சம் மேம்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வேறு வகையான அனுபவங்களுக்கு ஆட்பட்டு வருகிறேன். ஹரிகிருஷ்ணன், சுதா சேஷய்யன், அவ்வை நடராஜன் வழியே கம்பனையும் திருவள்ளுவரையும் ஆழத் தோய்ந்து வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாலாயிர திவ்யப் பிரபந்தம், சைவப் பாடல்கள் ஆகியவற்றையும் தொடர்ந்து வாசிக்கிறேன். பழம் இலக்கியச் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
இப்போது ஒரு விஷயம் புரியத் தொடங்கியது. இலக்கியச் சொற்பொழிவுகள் செய்பவர்கள், பல முக்கியப் பாடல்களை முழுவதும் மனனம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்பாடல்களுக்கு எழுதப்பட்ட பல்வேறு உரைகளையும் வரி பிறழாமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பிறகு, அதன் மேல் ஒரு வேல்யூ அடிஷன் நடக்கிறது. அது இரண்டு தளங்களில் நடக்கிறது. சமகால பொருத்தப்பாட்டில் இருந்து, இப்பழைய பாடல்களுக்குத் தக்க பொருள் அல்லது விளக்கம் அல்லது நீட்சி வழங்குகிறார்கள். திருக்குறளுக்கு இப்படி எழுதப்பட்ட பல உரைகளைப் படித்தேன். ஒவ்வொருவரின் மனச்சாய்வுக்கும் கருதுகோள்களுக்கும் ஏற்ப, விளக்கங்கள் இருக்கின்றன. இது இயல்பான ஒன்று. இது ஒருவகை வேல்யூ அடிஷன்.
அடுத்த வகை வேல்யூ அடிஷனை அவ்வை நடராஜனிடம் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல பாடல்களில் உள்ள சொற்களைத் தட்டி தட்டி பொருள் சொல்கிறார் அவர். எண்ணற்ற பாடல்கள் அவர் ஞாபகத்தில் இருப்பதால், ஒரு பாடலின் சொற்களை வேறொன்றோடு தொடர்பு படுத்தவும், முற்றிலும் வேறொரு அனுபவத்தைத் தீட்டித் தரவும் அவரால் முடிகிறது. மேலும் அவ்வையோடு, பேராசிரியர் வைத்தியலிங்கன் என்பவர் இருக்கிறார். அவர் பாடல்களைப் பண்ணோடு பாடிகாட்டவும் தெரிந்தவர்.
சென்ற வாரம் அவ்வையோடு பேசிக்கொண்டு இருந்தபோது, இந்த ‘யாதும் ஊரே, யாவரு கேளீர்’ என்ற வரி எப்படித் தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது என்பதை விளக்கினார். அந்த முழுப்பாடலையும் ஏற்ற இறக்கங்களோடு சந்தத்தோடு சொல்லக் கேட்டபோது, அதன் பின்னே இருக்கும் தொனி முற்றிலும் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அது ஒரு வித சோக, தத்துவக் கவிதை. சாவைப் பற்றிய கவிதை. அவலச் சுவை. வாழ்வின் மேல் துளியும் நம்பிக்கை இல்லாத கவிதை. ஆனால், தமிழனின் பரந்த மனப்பான்மை, தாராள எண்ணம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகவே இந்த வரியை தப்பாக Out of contextல் பயன்படுத்தும் நமது போக்கை எடுத்துச் சொன்னார்.
எனக்கு அப்போதுதான் மனனம் செய்வதின் முக்கியத்துவம் விளங்கியது. பாடல்கள் மனத்துக்குள் வளையவந்து ரீங்கரிக்கும்போது, ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருளை மட்டுமல்ல, அதன் பின்னே உள்ள தொனி, லயம் ஆகியவற்றையும் சேர்த்து உள்ளே வாங்கிக்கொள்ள முடிகிறது. அதுவும் கம்பனின் பல பாடல்களில் உள்ள இசை நயம், பாடல் தரும் பொருளை பன்மடங்கு உயர்த்திக்காட்டுகிறது.
முன்பொருமுறை பேராசிரியர் நாகநந்தி அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அயோத்தியின் உயர்ந்த வெளிப்புற வாயில்களில் கட்டப்பட்டுள்ள கொடிகள் ஆடிய விதத்தை கம்பன் எழுதிய நடையிலேயே எடுத்துச் சொன்னார். கவிதை அங்கே சட்டென காட்சி வடிவம் கொள்வதும் சொற்கள், பொருள் என்ற தம் எல்லை தாண்டி வேறொரு மாயவித்தை செய்வதும் எனக்குப் புரிந்தது. கவிதைகள் மனப்பாடமாக தெரிந்தால் அன்றி, இந்தச் சுவைகளை உணர முடியாது, மற்றவர்களுக்கு வெளியே எடுத்துச் சொல்லவும் முடியாது.
நவீன உரைநடைக்குள்ளும் பழம்தமிழ் பாடல்கள் இணங்கி வரலாம் என்பதை நான் அ.முத்துலிங்கத்திடம் பார்த்தேன். அவருடைய வம்சவிருத்தி தொகுதியில் உள்ள கதைகளில் மிகவும் பொருத்தமான இடங்களில் செய்யுள்கள் வருகின்றன. சட்டென எழுத்தின் தளத்தை இக்கவிதைகள் உயர்த்தி நிறுத்துகின்றன.
குறைந்தபட்சம் 100 நல்ல கவிதைகளையாவது மனனம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். வாழ்க்கை முழுவதும் அதை மென்று சுவைத்தாலே போதும்!