நேசமுடன் » மலேசியா

வலி ஏன்?
சமீபத்தில் மலேசியாவின் இளம் எழுத்தாளர்கள் நடத்தும் வல்லினம் வலைஇதழைப் படித்துக்கொண்டு இருந்தேன். ஏற்கெனவே அச்சு இதழாக வெளிவந்தபோது ஓன்றிரண்டு இதழ்களை வாங்கிப் படித்திருக்கிறேன். சமீபத்திய இதழில், மலேசிய இளைய எழுத்தாளர்களில் பலர் குமுறித் தள்ளியிருக்கிறார்கள். காரணம் இதுதான்: மலேசியாவின் முந்தைய தலைமுறை எழுத்தாளரான சை.பீர் முகம்மது அங்கே ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். தலைமை ஏற்றவர் மலேசிய இந்தியக் காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு. விழாவிலேயே 61,000 மலேசிய வெள்ளிகள் திரட்டப்பட்டு, சை.பீர்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. சை.பீர். பேசும்போது, அடுத்த ஜென்மத்திலாவது சாமிவேலுவின் அணுக்கத் தோழர்கள் கூட்டத்தில் தான் இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான், இளைய எழுத்தாளர்கள் கொதித்துப் போய்விட்டார்கள். Are you so cheap? என்று கேட்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

நம்பிக்கையின் வீழ்ச்சி இது. பெரிய எதிர்பார்ப்போடும் கரிசனத்தோடும் அண்ணாந்து பார்த்து வந்த ஒரு எழுத்தாளர் சட்டென சரிந்து மண்ணில் வந்து நிற்கும்போது ஏற்படும் அதிர்ச்சி இது. இது நாள் வரை அந்த மூத்தவர் பேசிய பேச்சு, வாழ்ந்த வாழ்வு அத்தனையும் இப்போது கேள்விக்குள்ளாகிறது. அவரது நோக்கமும் ஈடுபாடும் சந்தேகத்துக்கு உள்ளாக்கிறது. அதைவிட, தேவதா விசுவாசத்துடன் பார்த்த ஒரு நபர், சரியும் போது, அவரின் வாசகர்களுக்கும் தோழர்களுக்கும் ஏற்படும் வலி சொல்லில் வடிக்க முடியாதது.

தமிழகத்தில் இந்தச் சரிவு மிகவும் சகஜம். நான் பல எழுத்தாளர்களின் சரிவைப் பார்த்து மனம் நொந்து போயிருக்கிறேன். அரசியல் தலைவர்களின் சரிவைப் பார்த்து வலி அடைந்திருக்கிறேன். சின்ன வயதில் அப்படித்தான் ரியாக்ட் செய்ய முடியும் போலிருக்கிறது. பலரை அப்பா ஸ்தானத்திலும் அண்ணன் நிலையும் வைத்துப் பார்த்திருக்கிறேன். சீக்கிரம் பலர் அந்த இடத்தைக் காலிசெய்துவிட்டுப் போய்விடுவார்கள். தப்பு அவர்கள் மேல் இல்லை. எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்ட என்மேல் தான் தப்பு என்பதைப் புரிந்துகொண்ட போது, எனக்கு லேசாக தலைமுடி நரைக்கத் தொடங்கியிருந்தது.

ஒருவகையில் லட்சியவாதம், கருத்துகளை முதன்மைப்படுத்துவது எல்லாமே அபத்தங்கள். எழுத்தைப் போலவே வாழ்வை அமைத்துக்கொள்வது சாத்தியமில்லை போலும். எழுத்தையும் எழுத்தாளனின் வாழ்வையும் அவனது குணங்களையும் நேர்க்கோட்டில் வைத்துப் பார்ப்பதால் வரும் வினை இது. இந்த மூன்றுமே மூன்று வேறு வேறு திசைகளில் பயணிக்கக் கூடியவை என்பதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் காலம் ஆயிற்று.

நோக்கங்கள், கருத்துகள், இலக்குகள் எல்லாமே மாறக்கூடியன. எதுவுமே நிலையானது இல்லை. ஏன் மாறின, எப்படி மாறின என்று ஆயிரம் கேள்விகள் எழுப்பி, குதர்க்கக் காரணங்கள் கற்பித்துக்கொண்டு, மனத்தை ரணப்படுத்திக்கொள்வதால் ஏது பலனுமில்லை. வாசகன் தனி மனிதன். எழுத்தாளன் இன்னொரு தனி மனிதன். தனிப்பட்ட வகையில் வாசகனின் எதிர்பாப்புகளை நிறைவு செய்யவேண்டும் என்ற எழுத்தாளனுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. வாசகன் கண்டுபிடிக்கும் காரணங்கள், உண்மையான காரணங்களாக இருக்கவேண்டும் என்றும் அவசியமில்லை. இதையெல்லாம் மீறி, தன் கருத்துகளை, நோக்கங்களை, நடத்தைகளை ஒரு எழுத்தாளன் மாற்றிக்கொள்ள எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

நேற்று வரை இப்படி பேசினாயே, இன்று இப்படித் தடம் புரண்டு பேசுகிறாயே என்று அவனைக் கேட்பதிலும் அர்த்தமில்லை. பேசுவது அவன் உரிமை. அவன் பேச்சை நம்பியது வாசகனான உன் தப்பு. அல்லது, அது நேற்று வரை பேசினது, இன்று நான் பக்குவமடைந்துவிட்டேன், வேறு குரலில், வேறொரு புரிதலில், வேறொரு கோணத்தில் பார்க்கக் கத்துக்கொண்டு இருக்கிறேன். அதனால், இப்படிப் பேசுகிறேன் என்று எழுத்தாளன் சொல்லக் கூடும். நீ அந்த இடத்துக்கு வந்து சேரவில்லை என்பது உன் குற்றமே அன்றி, என் பிழையல்ல.

அடிப்படையில், எழுத்தாளன் x வாசகன் உறவு என்பது லவ் ஹேட் ரிலேஷன்ஷிப் மாதிரியானது. எழுத்தாளனுக்கு ஒரு சமயம் வாசகன் வேண்டும், இன்னொரு சமயம் அவன் வேண்டாம். வாசகனுக்கும் இதே நிலைதான். எந்த சமயத்தில் வேண்டும், வேண்டாம் என்பதைப் புரிந்துகொள்வதில்தான் சிக்கல் பிறக்கிறது.

என் வரையில், நான் பின்பற்றும் ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. படைப்புகளைப் படிப்பேன். பாராட்டுவேன். கொண்டாடுவேன். படைப்பாளர்களைப் படிப்பதில்லை. அவர்கள் மேல் என் அபிமானக் கோபுரத்தைக் கட்டுவதில்லை. நம்பிக்கைச் சிகரத்தை ஏற்றுவதில்லை. நாளைக்கு இந்தக் கோபுரம் சரியும்போது, அந்த வலியை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.

சொல்லப்போனால், இந்த வலி, அந்த எழுத்தாளருக்குத் தன்னால்தான் ஏற்பட்டது என்று தெரிய வாய்ப்பே கிடையாது. எதற்கு என் கற்பனை கொண்டு, நானே எனக்குச் சூடு வைத்துக்கொள்ள வேண்டும்? அர்த்தமில்லைதானே?