Posts Tagged ‘அரசியல்’

வளர்ச்சியின் வலி

Posted in அரசியல், பொருளாதாரம் on September 16th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

ஞாயிறு மதியம், எங்கள் வீட்டுக்குப் பழைய பேப்பர் வாங்குபவர் வந்தார். பல ஆண்டுகளாக இதுதான் அவர் தொழில். நேர்மையானவர். தொலைபேசியில் கூப்பிட்டவுடன் வீட்டுக்கே வந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எடை போட்டு பணம் கொடுத்துவிட்டுச் செல்வார். படிப்பதில் ஆர்வமுடையவர். பணம், பொன், மண் ஆகிய துறைகளில் முதலீடு செய்யவேண்டும் என்று ஆர்வமுடையவர். பங்குச் சந்தையில் நிறைய ஆர்வம். அன்றும் பங்குச் சந்தையில் இருக்கும் டிரைவேட்டிவ் மார்க்கெட் பற்றித்தான் கேட்டார். ஃபூச்சர்கள் மற்றும் ஆப்ஷன்கள் பற்றி எனக்குத் தெரிந்ததை மிக எளிமையாகச் சொல்லிக்கொண்டு வந்தேன். பேச்சு அப்படியே ஷார்ட் டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ், லாங்க டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ், வருவான வரி என்று வளர்ந்துகொண்டே போனது.

‘நான் வரி கட்டறா மாதிரி சம்பாதிக்கலை. எனுக்குப் பிரச்னை இல்லை. ஆனா அனாவசியமா எதுக்குப் போய் வரி கட்டணும்?’

‘வரி கட்டறதுல என்னப்பா பிரச்னை?’

‘ஒரு நாளைக்கு பதினஞ்சு பதினாறு மணிநேரம் வேலை செஞ்சி சம்பாதிச்சுட்டு, இவனுக்கு எதுக்கு சார் போய் வரியை அழுவணும்.’

‘அப்ப ஏன் இந்தியாவுல இருக்கீங்க? எங்கயாவது வெளிநாடு போக வேண்டியதுதானே?’ இது நான்.

‘நான் ஏன் வெளிநாடு போவணும்?’

‘சரி, நீங்க வீட்டுல கேஸ் வெச்சிருக்கீங்களா?’

‘இருக்கு. எங்கம்மா பேர்ல.’

‘பஸ்சுல போவீங்களா?’

‘எங்க போனாலும் பஸ்ஸுதான்.’

‘ஆவின் பால் வாங்கறீங்களா?’

‘வாங்கறேனே?’

‘இங்க எல்லாம் நீங்க முழுசா பணம் கொடுக்கறீங்களா?’

‘அப்படின்னா?’

‘கேஸுக்கு நீங்க குடுக்கறது ரூ.320. அதனுடைய உண்மையான விலை கிட்டத்தட்ட 400 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 49 ரூபாய். அதன் உண்மையான விலை கிட்டத்தட்ட 60 ரூபாய். நீங்கள் குடுக்கற பணத்துக்கு மேல ஆகும் செலவை யார் ஏத்துக்கறாங்க? யார் மானியமா தராங்க? கவர்மெண்ட்டுதானே. உங்களுக்கு எதுக்கு கவர்மெண்ட்டு இதெல்லாம் செய்யணும்..?’

‘என்ன சார்.. அவனவன் கோடி கோடியா ஏமாத்திகினு இருக்கான். அரசியல்வாதிங்க எத்தன வீடு வெச்சிருக்காங்க. அவங்க வரி கட்டறாங்களா என்ன?’

‘இங்கதான் தப்பு பண்றீங்க சார். அவன் கொடுக்கலை, இவன் கட்டலை, நான் ஏன் கட்டணும்னும் கேக்கறது தப்பு. நீங்கள் இந்தியாவுல தானே இருக்கீங்க. நீங்கள் இந்தியாவுக்கு என்ன செஞ்சீங்க? இந்தியாவோட எல்லா வளத்தையும் வசதிகளையும் பயன்படுத்திப்பீங்க. அதை வெச்சுதான் உங்கள் வாழ்க்கையே இருக்கு. ஆனால், அதுக்கு ஒண்ணும் திருப்பித் தரமாட்டேன்னு சொல்றது நியாயமா?’

‘மத்தவனெல்லாம் செய்யலையே சார். நான் ஏன் செய்யணும்?’

‘மத்தவன் செய்யலைங்கறதால நாம செய்யாமல் இருப்பதுல அர்த்தமில்லை. நம்ம கடமை, நாம இந்தியாவுக்கு மனத்திருப்தியோட, மகிழ்ச்சியோட வரியைக் கட்டணும். மத்தவன் கட்டலைங்கறது அவனோட பிரச்னை. நீங்க ஏன் அவனைப் பார்த்து சூடு போட்டுக்கணும்னு நினைக்கிறீங்க?’

‘இந்த வரிப்பணத்தைத் தானே சார் வாரி உடறாங்க. கலர் டிவி என்ன? சுனாமி நிவாரணம்ங்கற பேர்ல சும்மா இருக்கறவனுக்கு எல்லாம் மாசாமாசம் உதவித் தொகை என்னா? வயிறு எரியலையா சார்?’

‘நீங்க தப்பா இடத்துல தப்பான கேள்வியைக் கேக்கறீங்க. அரசுக்கு வரி கட்டறதுங்கறது உங்க கடமை. அது தனி. ஆனால், அந்த வரிப்பணத்தை சரியா பயன்படுத்தலை, ஏமாத்தறாங்க, ஊழல் செய்யறாங்கனு நினைச்சீங்கன்னா, அதைக் கேக்க வேண்டிய இடம் வேற. அதுதான் தேர்தல். இந்தத் தேர்தல்ல எப்படி ஓட்டு போட்டீங்க? பணம் கொடுத்தாங்களா?’

‘எங்க பக்கத்து ஊட்டுல எல்லாம் கொடுத்தாங்க. எங்க வீட்டுக்கு வரலை. கொடுத்தா கூட வாங்கியிருக்க மாட்டேன். என் மனச்சாட்சிப் படிதான் சார் ஓட்டு போடுவேன்.’

‘அதுதான் வேணும். அதுதான் முக்கியம். தனி மனித ஒழுக்கங்கறது அதுதான். அடுத்தவனை எப்போதும் மாத்தவே முடியாது. நம்மால மாற முடியும். நாமதான் நம்மை மாத்திக்கணும்.’

‘ஆனா சார், வரி கட்டறதால நமக்கு நேரடியா என்ன சார் பிரயோஜனம். கஷ்டப்படும் போது கவர்மெண்ட்டா வந்து காப்பாத்தபோவுது?’

‘இது சரியான கேள்வி. எப்படி கேக்கணும்னா.. நான் சம்பாதிச்சபோது, உனக்கு சந்தோஷத்தோட வரி கட்டினேன். நான் இப்போ வேலை இல்லாமல், உடம்பு சரியில்லாமல் படுத்து கெடக்கறேன். நீ என்ன காப்பாத்த வேண்டாமான்னு கேக்கணும். இதுதான் சோஷியல் செக்யூரிட்டி நெட்டின் ஆரம்பம்.’

‘அப்படின்னா?’

‘அமெரிக்காவுல வேலை போயிடுச்சுன்னா, வேலை போனவன் முதல்ல போய் கவர்மெண்ட்டுக்கிட்ட உதவிப் பணத்துக்கு அப்ளை பண்ணுவான். நான் சம்பாதிச்சபோது, உனக்குத்தானேப்பா எல்லாம் கொடுத்தேன், இப்போ என்னைக் காப்பாத்த வேண்டியது உன் கடமைன்னும் சொல்றது இது. கவர்மெண்ட்டும் கொடுக்கும். பல வளர்ந்த நாடுகள்ல இந்த சோஷியல் செக்யூரிட்டி உண்டு. நாம வளரும் நாடு. இன்னும் இங்கே வரலை.’

‘இங்கதான் ஊழல் செய்யறதுக்கும் புடுங்கித் திங்கறதுக்கும்தான் நேரம் சரியா இருக்கு, எவன் சார், நீங்க சொல்ற செக்யூரிட்டி எல்லாம் கொடுப்பான்?’

தெரியவில்லை. நாம் அப்படியே இருந்துவிட முடியாது. சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு துறைக்குள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் வருகின்றன. சிந்தனை ரீதியான மாற்றங்கள், உலக நாடுகளோடு ஒன்றிணைந்து வாழும்போது பெறும் பாடங்கள், படிப்பினைகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்கள் என்று பல முன்னேற்றங்களைப் பெற்று வந்திருக்கிறோம். ஆனால், மக்களின் அடிமனத்தில், இந்தியாவைப் பற்றிய, அதன் நிர்வாகிகளைப் பற்றிய, நிர்வாகம் பற்றிய ஐயங்கள் மிகுதியாக இருக்கின்றன.

நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் தனிமனித லாபங்களுக்காக அரசியலாளர்கள் செய்யும் இழிசெயல்களைப் பற்றி நிறைய பேசுகிறார்கள், அங்கலாய்க்கிறார்கள். இதெல்லாம் இந்தியாவையே ஒரு இழிவுநிறைந்த நாடாகத் தொடர்ந்து சித்திரித்தும் வருகிறது. இதில் உண்மையில்லாமல் இல்லை. அதேசமயம் இதுவே முழுமையான உண்மையும் இல்லை. ஒவ்வொரு வளரும் நாடும் சந்திக்கும் மிகப் பெரிய இடர்கள் இவை. ஊழல், தனிமனித பொருள் குவிப்பு, அதற்கு சமூகத்தைக் கெடுக்கும் மனப்போக்கு என்பவை எந்த வளரும் நாட்டிலும் காணக்கிடைக்கும் காட்சிகள்தான்.

இதுபோன்ற நாடுகளில், வளர்ச்சி அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடுவதில்லை. அல்லது வளர்ச்சி வருவதை எவ்வளவு தூரம் தள்ளிப்போட முடியுமோ அதைச் செய்யவும் செய்வார்கள். ஆனாலும் வளர்ச்சி வந்துவிடும்.

தவிர்க்க இயலாமல் அமெரிக்காவைத்தான் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுடைய இன்றைய வளர்ச்சிக்குப் பின்னே நானூறு ஆண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. அங்கேயும் இதுபோன்ற வளர்ச்சித் தடைகள் இருந்திருக்கிறது. எதிர்கருத்துகள் என்ற பெயரில் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைகள் இருந்திருக்கின்றன, ஊழல், சொத்துக்குவிப்பு, அடுத்தவர் மேல் தீராத கட்டுப்பாடு, அடிமைமுறை என்று எல்லா துன்பங்களும் அங்கே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னேற்றம் அங்குலம் அங்குலமாகத்தான் நடந்திருக்கிறது. பெரும் பாய்ச்சல்கள் தோன்றியதில்லை.
இந்தியாவிலும் இப்போது அதேபோன்ற நோய்கள்தான் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. சாதாரணர்கள் ஒரு பக்கம் அன்றாட வாழ்வுக்குத் துன்பப்பட, இன்னொரு பக்கம், தம் பேராசைக்கு முக்கியத் திட்டங்களை வளைத்துப் பெரும் பொருளைத் திரட்டிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

வளர்ச்சி வலி நிரம்பியது. குழந்தைகள் வளரும்போது, பின் இரவுகளில் கால்கள் வலிக்கும். உளைச்சல் எடுக்கும். ஓடியாடி விளையாடுகிறான், அதனால் வலிக்கிறது என்று நாம் நினைப்போம். உண்மையில், அது வளர்ச்சியின் வலி (Growing Pains). அந்த வலி, உள்ளுக்குள்ளே எலும்புகள் வளருவதை, கெட்டியாவதைக் குறிக்கும் வலி என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இந்தியா இப்போது இப்படிப்பட்ட வலியைத்தான் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.
இந்த வலிகள் இல்லாமல் வளர்ச்சி இல்லை. யாரும் சுலபமாக, இலக்கை அடைந்துவிட முடியாது. அதற்கான முனைப்பும் ஈடுபாடும் வேண்டும்.

இன்னும் ஐம்பது ஆண்டுகள், நூறாண்டுகள் கழித்து, இன்று நாம் குறை பேசும் பல விஷயங்கள், சரித்திரமாகி இருக்கும். இன்றைக்கு எப்படி நமக்கு காந்தியின் சுதந்திரப் போராட்ட வலி தெரியவில்லையோ, அப்படி, நமது சந்ததியினருக்கு இன்று நாம் அடைந்த வலிகள், வளர்ச்சிக்குக் கொடுத்த விலை, எதுவுமே தெரியாது. எல்லாமே தன்னால் இயற்கையாக வந்துவிட்டதாக அவர்கள் நம்பவே ப்ரியப்படுவார்கள். தம் முன்னோர்கள் பற்றிய அவர்களுடைய கற்பனைகள், மிகவும் கவர்ச்சிகரமாகவே இருக்கும். உயர்வாக இருக்கும்.

அந்த முன்னேற்றமும் கவர்ச்சியும் உயர்வும் சாத்தியப்பட வேண்டும் என்றால், இன்றைக்கு நம்மால் ஆனது, வளர்ச்சியின் வலிகளைப் பொறுத்துக்கொள்வதுதான். தனிமனித ஒழுக்கத்தைப் பேணுவதுதான். முடிந்த இடங்களில் எல்லாம் முன்னேற்றங்களை இருகை நீட்டி அணைத்துக்கொள்வதுதான். நாம் போகும் பாதை கரடுமுரடாகத்தான் தெரிகிறது. ஆனால், தூரத்தில் வெளிச்சப் புள்ளி நமக்காகக் காத்திருக்கவே செய்கிறது.

கேலிக்கூத்தாகும் சிக்கனம்

Posted in அரசியல் on September 16th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments
நம் நாட்டில் எல்லாவற்றையும் மதிப்பிழக்கச் செய்வதில் நாம் வல்லவர்கள். அதுவும் நம் அரசியல்வாதிகள் செய்யும் செயல்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் இதையெல்லாம் புரிந்துதான் செய்கிறார்களா, புரியாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்தியா முழுக்க வறட்சி. அடுத்து வரும் மாதங்களில், பருவ மழை முழுமையாகப் பொய்த்துப் போனால், பல மாநிலங்களில் விவசாயமே இருக்காது. மக்கள் பஞ்சத்தால் திண்டாடிப் போவார்கள். அவர்களுக்கு பிரதமரின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் எப்படியேனும் வேலை கொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்ற நிலை. உடனே நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய அளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செலவுகளில் 10 சதவிகிதம் மிச்சப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாநில அரசுகளையும் அதைப் பின்பற்ற கேட்டுக்கொண்டார். இப்படி மிச்சமாகும் பணம், நாளைக்கு பசி, பஞ்சம், பட்டினி வரும்போது, நிவாரணத் திட்டங்களை உருவாக்கவும் அதற்குச் செலவழிக்கவும் உதவியாக இருக்கும் என்பது எண்ணம். நல்ல எண்ணம். இங்கே வேறு சில கேள்விகள் பிறக்கின்றன. அதை அப்புறம் கேட்போம். முதலில், இதுவரை நடந்தது எல்லாம் சரி.
இங்கிருந்துதான் மதிப்பிழக்கச் செய்யும் வழி ஆரம்பிக்கிறது. சோனியா பெங்களூரூவுக்கு எகானமி வகுப்பில் விமானத்தில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கன நடவடிக்கை. தில்லியில் இருந்து லூதியானாவுக்கு ராகுல் காந்தி ஷதாப்தி ரயிலில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கனம். காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் வழிகாட்டுகிறார்களாம், எப்படிச் சிக்கனமாக இருப்பது என்பதற்கு. கேலிக்கூத்தாக இல்லை?
மத்திய அரசு உண்மையிலேயே சிக்கனமாக நடந்துகொண்டு, செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால், அது பின்பற்ற வேண்டிய வழி இது அல்ல. இது மற்றவர்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை.
உலகெங்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொருளாதார தேக்கம். ஒவ்வொரு நிறுவனமும் தம்மளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஒவ்வொரு நிறுவனமும், தத்தமது துறைத் தலைவர்களை அழைத்து, தேவையற்ற உற்பத்தியற்ற செலவுகளை முதலில் நிறுத்து என்றது. தேவையற்ற பயணங்களை நிறுத்து என்றது. ஒரு துறைக்கு ஆகும் செலவினங்களில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்று, பட்ஜெட்டையே புரட்டிப் போட்டது. விளைவு, இவ்வளவு மோசமான பொருளாதாரச் சரிவிலும் பல நிறுவனங்கள் நாணல்போல் வளைந்துகொடுத்து நிமிரத் தொடங்கிவிட்டன.
இதுதானே வழி. இதை விட்டுவிட்டு, ஓரிருவர் எகானமி வகுப்பில் பயணம் செய்வதால் என்ன லாபம்?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மத்தியில் இருக்கும் 30 கேபினட் அமைச்சர்களும், குட்டி முதலமைச்சர்கள். ஒவ்வொரு துறையும் ஒரு மாநில அரசுக்கான வரவு செலவு அளவுக்கு வருவாயும் செலவுகளும் கொண்டது. ஒவ்வொரு துறையும் ஒரு குட்டி யானை. வருவாயைவிட செலவினங்கள் அதிகமுள்ள துறைகளே அதிகம். எல்லாமே மக்கள் நலத் திட்டங்கள்தான். இதில் எங்கிருந்து சிக்கனம் சாத்தியம்?
சரி அப்படியே சிக்கனத்தை இந்தத் துறைகளில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அது முழுக்க முழுக்க நிர்வாக நடைமுறை சார்ந்த விஷயம். அலுவலக ரீதியான செலவுகளை உயர் அதிகாரிகள் கட்டுப்படுத்த முனைந்தால், மாற்றம் தன்னால் வரும். அமைச்சர்கள் தேவையற்ற சலுகைகளை நிறுத்தினாலே மாற்றம் தன்னால் வரும். இதெல்லாம் தனிமனிதர்களின் மனம் சம்பந்தப்பட்டது. என்ன ஒரு பிரச்னை என்றால், இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, தம் சலுகைகள் பறிக்கப்படுவதாக ஒரு கூட்டம் எப்போதும் கொடி பிடிக்கும். தம்முடைய உரிமைகளே பறிக்கப்படுவதாக இவர்கள் கொதித்துப் போவார்கள்.
இவர்களையும் உள்ளடக்கி சிக்கனத்தைக் கொண்டு வருவது அவசியம். செலவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ, அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ்ஸாக வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். சிக்கனத்தை சலுகைப் பறிப்பாக அல்லாமல், கூடுதல் வருவாய்க்கான வாய்ப்பாக மாற்றித் தரவேண்டும்.
அதை விட்டுவிட்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்து, ரயிலில் பயணம் செய்து என்ன செய்தியை இந்த அரசியல்வாதிகள் நமக்கு வழங்குகிறார்கள்? ஒன்றுமே இல்லை. அவர்களுடைய பயணம் மக்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதில், அவர்களுடைய போலி முகங்களைத்தான் தோல் உரித்துக் காட்டுகின்றன. இது நாள் வரை நீங்கள் எப்படி பயணம் செய்தீர்கள், வருங்காலத்தில் எப்படியெல்லாம் பயணம் செய்வீர்கள் என்றெல்லாம் மக்களுக்குத் தெரியாமலா இருக்கும்?
ஒரு வகையில், சிக்கனம் என்பதை நடைமுறைப்படுத்துவதை விட, அதை ஒரு விளம்பரமாக மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் புகழ்போதைதான் இந்தப் பயணங்களில் தெரிகிறது. உண்மையில், அவர்கள் சொல்ல வேண்டிய செய்தியின் நேர் எதிர் செய்தியைத்தான், அவர்களுடைய செயல்கள் நமக்குச் சொல்லுகின்றன.
மக்கள் விவரமானவர்கள். மக்கள் நீங்கள் செய்வதைப் படிப்பதில்லை, நீங்கள் செய்வதின் பின்னுள்ள அரசியலைத்தான் படிக்கிறார்கள். நீங்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்பதில்லை, அதற்குப் பின்னே ஒலிக்கும் உள்நோக்கங்களைத்தான் கேட்கிறார்கள்.
இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன? தெரியும். தெரிந்தும் இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். எல்லாம் ‘வளர்ச்சியின் வலி’ என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சராசரிகளின் உலகம்

Posted in அனுபவம், பொது on September 2nd, 2009 by வெங்கடேஷ் – 1 Comment
நாவல் அரசி ரமணி சந்திரனின் ஒரு சில நாவல்களைப் படித்திருக்கிறேன். என்ன எழுதுகிறார், எப்படி எழுதுகிறார் என்று தெரிந்துகொள்ளவதற்காகப் படித்தது. அவ்வப்போது வார இதழ்களில் வரும் தொடர்கதைகளின் அத்தியாயங்களைப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் லட்சுமி எழுதிய காலத்தில் இருந்து ‘ஒரு பெண் துன்பப்படுகிறாள்’ என்பதுதான் எவர்கிரீன் சப்ஜெக்ட். ரமணி சந்திரனும் அதைத்தான் எழுதுகிறார். தனி மொழிக்கான முயற்சியோ, எழுத்துக்கான செறிவோ, இன்னபிற அழகுகளோ இல்லாத தெளிவான எழுத்து. உரையாடலில் இயல்புத்தன்மை குறைவு. ஆனால், அவர்தான் இன்றும் தமிழ் பத்திரிகை உலகில் சூப்பர் ஸ்டார். வாசகியரின் பேராதரவைப் பெற்றவர். அவர் தொடர்கதையை வெளியிட்டால், பத்து பதினைந்து ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்பனை ஆகிறது என்கிறார்கள் பத்திரிகையுலக நண்பர்கள்.
சராசரித் தமிழ் பெண்ணின், ஆணின் எண்ணங்களோடு அவர் எழுத்துக்கள் ஒத்துப்போகின்றன. அவர்கள் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களைத்தான் இவர் தொடர்கதைகளாக எழுதி வருகிறார். அந்தச் சராசரி மனிதனின் தேவைகளை இவரது எழுத்துக்கள் நிறைவு செய்கின்றன. இந்தச் சராசரி மனிதர்களின் தேவைகள்தான் இன்று மிகப் பெரும் சந்தையை இந்தியாவில் உருவாக்கியிருக்கிறது.
இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில், 50% – 65% மதிப்பெண்கள் வாங்கக்கூடிய சராசரிகள்தான் அதிகம். நம் பத்திரிகைகளுக்கும் இன்னபிற சமூக அங்கீகாரங்களுக்கும் 90 – 95%க்கு மேல் வாங்குபவர்கள்தான் கண்ணில் படுகின்றனர். மொத்த ஜனத்தொகையில் இவர்கள் 5% இருந்தால் அதிகம். ஆனால், மீதமுள்ள 95 சதவிகிதத்தினர் இந்தச் சராசரிகள். இந்தியா என்று மட்டுமில்லை, எந்தப் பெரிய ஜனத்தொகை அதிகமுள்ள நாட்டிலும் இந்த சராசரிகள் தீர்மானிப்பதுதான் தீர்மானம். எடுத்துவைப்பதுதான் பொதுக் கருத்துகள். சொல்வதுதான் வேதவாக்கு.
ஏன் இவர்களை ரசனை ரீதியாக, நுண்ணுணர்வு ரீதியாக, கருத்துகள் ரீதியாக, அரசியல் ரீதியாக முன்னேற்றக் கூடாது என்ற கேள்வி அவ்வப்போது எழும். வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல், இன்னபிற காரணிகளால், இவர்கள் பல்வேறு அடுக்குகளில் நிற்கிறார்கள். ஒரு அடுக்கு அடுத்த அடுக்கைவிட உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ பேசுவதில் பொருளில்லை. அந்ததந்த அடுக்கில் இருப்பவர்களுக்கு, அவர்களுடைய உலகமே உலகம். வேறு உலகங்கள் இருப்பதே அவர்களுக்குத் தெரியாது. வேறு விழுமியங்கள் இருப்பதே அவர்களுக்குப் புரியாது. வேறு வகை ரசனை, உணர்வுகள் இருப்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அவசியமும் ஏற்படவில்லை.
நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு துறையும் இந்தச் சராசரிகளுக்கு சேவை செய்யவே உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் புத்திசாலிகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். சராசரிகளுக்குக் கீழே இருக்கும் ஏழை எளிய வசதி வாய்ப்பற்றவர்கள், தங்கள் உடல் உழைப்பை நம்பியே வாழ்ந்துவிட முடியும். ஆனால், சராசரிகள், இரண்டுங்கெட்டான்கள்.
இவர்களை நீ ஏன் புத்திசாலியாக இல்லை, உன் திறமைகளை ஏன் வளர்த்துக்கொள்ளவில்லை என்று கேட்பது மிகவும் அபத்தம். அதே சமயம், அவர்களுக்குப் போதிய திறன்கள் இல்லை என்பதற்காக வாழுவதற்கான் உரிமை இல்லாமல் போய்விட்டார்களா என்ன? எல்லா போட்டிகளிலும் அவர்கள்தான் முட்டி மோதுகிறார்கள். குறுக்கு வழிகளில் புகுந்தேனும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறார்கள். வாழுவதற்கான போராட்டம் அது.
சமீபத்தில் உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். உள்ளாட்சித் தேர்தல்களில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவு செய்து ஜெயித்தவர்கள் உண்டு என்றார் அவர். இவர்களுடைய நோக்கம் என்ன? பணம் சம்பாதிப்பது. தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிக்காரர்களும் பணம் சம்பாதிப்பதில் வேறு வேறு டெக்னிக்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்களும், அதிகாரிகளும் சம்பாதித்தது போகத்தான், உள்ளாட்சிப் பணிகளுக்கு பணம் வந்து சேரும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் தரும் பணம் கோடிக்கணக்கில் இருக்கிறது. ஒவ்வொருத்தரும் எவ்வளவு சாமர்த்தியமாக இருக்கிறார்களோ, அவ்வளவு விரைவாக, அதிகமாகப் பணத்தைச் சேர்க்க முடியும்.
அவர் பேச்சினிடையே சில விஷயங்களைச் சொன்னார். அதுதான் எனக்கு முக்கியமாகத் தோன்றியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்திருக்கும் பலரும் நீண்ட நாள் கட்சிக்காரர்கள், வேறு தொழில் தெரியாதவர்கள், அதிகம் படிப்போ, வாசனையோ இல்லாதவர்கள். ஆனால் கட்சிக்கு விசுவாசமானவர்கள். வெட்டிக்கொண்டு வா என்றால், கட்டிக்கொண்டு வருபவர்கள். அவர்களுடைய வாழ்வுக்கும் ஏதேனும் வழி செய்து ஆகவேண்டுமல்லவா? அவர்களும் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? நேர்மை, அறம் போன்ற கூறுகள் அடிமனத்தில் இருந்தாலும், நாளையைப் பற்றிய பயம், அடுத்த முறை வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற தவிப்பு ஆகியவை இவர்களைச் செலுத்துகின்றன.
இவர்களுக்கு அரசியல் ஒரு தொழில். மக்களுக்குச் சேவை செய்கிறார்கள். சேவையை இலவசமாகச் செய்ய முடியாது அல்லவா? அதற்கு ஒரு சம்பளம் வேண்டுமலலவா? சம்பளம்தான் கொடுக்கிறார்களே? உண்மைதான். அது செய்யும் வேலைக்கு. ஆனால், மக்கள் சேவையில் நாளெல்லாம் செலவு செய்கிறேனே? அந்த முனைப்புக்கு, ஈடுபாட்டுக்கு ஒரு பிரிமியம் வேண்டுமல்லவா? சேவையைச் செய்து, அதற்கு உரிய கட்டணம் பெறலாம், பிரிமியமும் கோரலாம் என்று நமக்கு ஐடி துறை சொல்லிக்கொடுத்திருக்கிறது, அமெரிக்கா சொல்லிக்கொடுத்திருக்கிறது. There is no free lunch. அதைத்தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து ஆரம்பித்து, நாடாளுமன்றம் வரை செய்கிறார்கள்.
சராசரிக்கும் ஸ்மார்ட்னெஸுக்கும் சம்பந்தமில்லை. பணம் சம்பாதிப்பது, செளகரியங்களை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்வது, சரியான சொற்களைப் பேசுவது போன்றவை எல்லாம் இயற்கையாகவே கைவரப் பெற்றவர்கள் உண்டு. சராசரித் தன்மை என்பது அகம், புறம் என்று இரண்டு உலகங்களிலும் உண்டு. புற உலகில் எப்படியாவது தமது நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், மனத்தில் உயர்வு கோருவது கொஞ்சம் பழக்கமற்ற விஷயம்.
ஒருவிதமான ஜாக்கிரதை உணர்வு, தன்னை யாரும் சீண்டிவிடக் கூடாதே என்ற பாதுகாப்பு உணர்வு, தான் எங்கும் வெட்டவெளிச்சமாகிவிடக் கூடாதே என்ற பதற்றம், தனக்குத் தெரிந்ததை அடுத்தவர் அறிந்துவிடக் கூடாதே என்ற துடிப்பு, அதே சமயம் இருக்கும் நாலு சுவருக்குள் ஒருவித சுகமான ராஜாங்கம் நடத்திக்கொண்டு இருப்பதில் செளகரியம் ஆகியவை இவர்களின் பொதுவான குணாதிசயங்கள்.
தன்னை யாரும் சராசரி என்று குறிப்பிட்டு அடையாளப்படுத்திவிடக் கூடாது என்பது அதிதீவிர கவனம் இவர்களுக்கு உண்டு. சராசரிகளோடு மட்டுமே புழங்கும்போது, யாரும் யாருக்கும் உயர்வோ தாழ்வோ இல்லை. ஒப்பிட்டுப் பார்க்கும் பிரச்னையே இல்லை. அப்படியே உயர்வாக இருக்கும் ஒருவரோடு ஒப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டால், அங்கே முடிந்தவரை தமது ஈகோவைத் தற்காத்துக்கொள்ள முனைவது, இல்லையெனில், ஒன்று ஏதேனும் ஒரு குறையைச் சுட்டிக்காட்டித் தன் மேதமையைச் சொறிந்துவிட்டுக்கொள்வது, அல்லது, உயர்வானவரை உயர்வானவர் என்று சொல்லியே தள்ளிவைத்து, பூஜைக்குரியவராக்கிவிடுவது. இதெல்லாம் சாமர்த்தியமாகச் செய்யவேண்டிய விஷயங்கள். அதைப் பலர் திறமையாகச் செய்கிறார்கள்.
பெரும்பாலும் பிரச்னை வருவது, சராசரிகளின் அளவுகோல்களிலும் விழுமியங்களிலும்தான். அதைக் கட்டிக் காப்பதில்தான் இன்னும் அதிகம் பிரச்னை. சுற்றி நாலு பேர் எப்போதும் கற்பனையாக நின்றுகொண்டு இருப்பார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லியே, இவர்கள் வாழ்க்கை முடிந்து போகும்.
சராசரிகளின் பங்கு பற்றி நான் முழுமையாக உணர்ந்துகொண்டது, நான் பணியாற்றிய் நிறுவனம் ஒன்றில் ஆட்களை எடுத்தபோதுதான். அந்த நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறைத் துணைத் தலைவர் என்னிடம் நான் கோரும் ஆட்களுக்கான மிக விரிவான ஜாப் டிஸ்கிரிப்ஷன் எனும் தேவைகளின் பட்டியலை எழுதச் சொன்னார். ‘எதையும் கற்பனையாக நினைத்துக்கொள்ளாதீர்கள். தெளிவாக கருப்பு வெள்ளையில் எழுதிவிடுங்கள்’ என்றார் அவர். ஆறு பதவிகளுக்கான ஜாப் டிஸ்கிரிப்ஷன்களை எழுதினேன். அவரிடம் அனுப்பினேன். அதை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்த அந்த ஹெச். ஆர். துணைத்தலைவர்,
‘இவ்வளவுதானா? இன்னும் மனத்தில் ஏதேனும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?’
‘இப்போதைக்கு இவ்வளவுதான்’ இது நான்.
‘அப்படிச் சொல்லாதீர்கள். உங்கள் தேவைகளை நீங்கள் தெளிவாக்கினால்தான், ஆட்களைத் தேர்வு செய்ய முடியும்.’
‘எல்லாவற்றையும் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை’
‘சொல்லிவிடுவது நல்லது. ஏனெனில், இதுதான் ஒரு குறிப்பிட்ட வேலைத் தேவை என்று நீங்கள் வகுக்கும் எல்லைகள். இந்த எல்லைகள் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம்.’
‘ஆனால், கிடைக்கும் நபரின் திறமைகளை இன்னும் உபயோகித்துக்கொள்ளலாமே?’
‘அப்படி நடக்காது வெங்கடேஷ். எப்படி நடக்கும் என்று சொல்கிறேன் கேளுங்கள். இந்தத் தேவைகளை நிறைவு செய்யும் ஓர் அற்புதமான நபர் கிடைக்கலாம். அல்லது இதை அப்படியே செய்து முடிக்கும் சராசரியான நபர் கிடைக்கக் கூடும். மூன்றாவது, இதையெல்லாம் செய்யக்கூடியவர், ஆனால், உற்சாகமற்றவர் கிடைக்க்க் கூடும். நமது தேடல், இந்த அற்புதமான நபரை நோக்கித்தான் இருக்கும். ஆனால், பல சமயங்களில், சொன்ன வேலையைச் எந்த ஒரு வில்லங்கமும் இல்லாமல் செய்துமுடிக்கும் சராசரியே கிடைத்தால் போதும் என்ற அளவில்தான் வந்து நிற்போம்.’
நான் யோசிக்கத் தொடங்கினேன்.
‘அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சரியான வழி, எதிர்பார்ப்புகளை வரையறை செய்துகொள்ளுவது. வரையறை என்பது கால்பந்தாட்ட மைதானம் மாதிரி. அதற்குள் விளையாடத் தெரிந்தால் போதும். வெளியே போய் அதே நபர் கிரிக்கெட்டும் விளையாட வேண்டும் என்று எதிர்பாப்பதெல்லாம், நடக்காத விஷயம்.
’ஏம், கால்பந்தோடு கிரிக்கெட்டும் விளையாடத் தெரிந்தவன் இருக்கமாட்டானா? அவனை நாம் தேடக் கூடாதா?’
‘முதலில், நாம் கண்ணைக் கட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். பள்ளியில் இருந்து தொடங்கி, நமது மாணவர்களை ஒரே விதமாகத்தான் வளர்த்திருக்கிறோம். இது சராசரிகளை உற்பத்தி செய்யும் கல்வி முறை. சராசரிகளைப் பேணும் சமூக வாழ்க்கை. இங்கே சராசரிகளால்தான் சகஜமாக வாழ முடியும். தேவையில்லாமல் எதிர்ப்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு துன்பப்படக் கூடாது.’
தெரியவில்லை. இதுதான் உண்மை நிலைமை போலும்.

மாற்றத்துக்கான மொழி

Posted in அரசியல், தேர்தல் on August 19th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

இது உங்களில் எத்தனை பேர் கவனத்துக்கு வந்ததோ தெரியவில்லை. தமிழகத்தில் நாளை ஆகஸ்டு 20 ஆம் தேதி முதல் இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கை முடிந்தபின்னர் மாநில அளவில் இளைஞர் காங்கிரஸுக்கு நிர்வாகிகள் தேர்தல் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடந்து அகில இந்திய காங்கிரஸை 2011க்கு பலப்படுத்துவதுதான் ராகுல் காந்தியின் எண்ணம். திட்டம். ஏற்கனவே ஹரியானா, குஜராத், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்வாகியிருக்கின்றனர்.

இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பற்றி, கூகுளில் தேடினீர்கள் என்றால் எண்ணற்ற புதிய, சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும். படித்துக்கொள்ளுங்கள். நான் பேச வந்தது வேறு.

மக்களவை தேர்தலுக்கு முன்பு அஇஅதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை என்ற அமைப்புகளைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் இளைஞர்களைக் கட்சிக்குள் சேர்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்களைச் சேர்க்கும் காட்சி ஜெயா தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தார்கள். இப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறையின் கூட்டங்கள் நடந்துவருகின்றன.

யார் போய் சேர்ந்தார்கள்? எப்படிச் சேர்ந்தார்கள் என்றெல்லாம் கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால், உங்களுக்குப் பல விஷயங்கள் புரியும். மிடில்கிளாஸ் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. சேர்ந்தவர்கள், பெரும்பாலும் ஏழை எளிய இளைஞர்கள். இவர்கள் எல்லோரும் விருப்பப்பட்டு சேர்ந்தார்களா? நிச்சயம் இல்லை. சேர்க்கப்பட்டார்கள். ஒவ்வொரு வட்டத்திலும் இருக்கும் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆள்பிடித்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள். லோக்கல் கட்சிக்காரர்களின் வாரிசுகளும் இதில் அடக்கம்.

அடுத்த கேள்வி: இவர்களுக்கு எல்லாம் அரசியல் உணர்வு, கொள்கைத் தெளிவு, ஈடுபாடு எல்லாம் உண்டா? யார் சொன்னது? கட்சியின் அடையாள அட்டை அரசு அலுவலகங்களுக்குள் போய்வருவதற்கும், ஏதேனும் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லவும், நாளை தாம் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும் பயன்படும் என்ற தெளிவு இவர்களுக்கு உண்டு.

ஒருவகையில் கட்சிக்கு ஆள்பிடிப்பது என்பது மிகப் பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது.

அப்படியானால், இன்றைக்கு இளைஞர்களுக்கு அரசியலே பிடிக்கவில்லை. அவர்கள் அ-பொலிட்டிக்கலாக இருக்கிறார்கள், அரசியலில் இருந்து தள்ளியே இருக்க விரும்புகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? நான் அப்படி நினைக்கவில்லை. இன்றைய இளைஞர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நமது அரசியல் கட்சிகள்தான் இன்னும் மெளடீகமாக இருக்கின்றன. இதுதான் பிரச்னை. இதைக் கொஞ்சம் விளக்கினால், இன்னும் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு அரசியல் கட்சியின் முக்கியத்துவம் அது முன்வைக்கும் கோஷம், எடுத்துப் பேசும் செய்திகள், வகுத்துக் கொடுக்கும் கொள்கைகள் மற்றும் அதன் உள்ளர்த்தத்தில்தான் அடங்கியிருக்கிறது. இந்தக் கோஷமும் செய்தியும் கொள்கைகளும் அந்தந்தக் காலகட்டத்துகான பொருத்தப்பாட்டோடு இருக்கவேண்டும். அப்போதுதான் அதனால் ஈர்க்கப்பட்டவர்கள், அந்தக் கோஷத்தோடு, கொள்கையோடு அதைப் பேசும் கட்சியோடு அணிதிரள்வார்கள்.

நாம் வேறு எங்கேயும் போகவேண்டாம். நான் மகாத்மா காந்தியை கொஞ்சம் சிரத்தையோடு படித்தவன். அவர் பிறவித் தலைவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அவருக்கு யாரேனும் அரசியல் சொல்லிக்கொடுத்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர் மக்களைத் திரட்டிய விதத்தை யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கோஷம். ஒத்துழையாமை இயக்கம், வெளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு என்று வரிசையாக கோஷங்கள், இயக்கங்கள். ஒவ்வொரு இயக்கமும் மக்களின் மனத்தைப் படம்பிடித்துக் காட்டும் இயக்கங்கள். எதை மக்கள் எதிர்பார்த்தார்களோ, பேச வேண்டும், போராட வேண்டும் என்று நினைத்தார்களோ, அதைத்தான் காந்தி இயக்கங்களாகக் கட்டி எழுப்பினார். மக்கள் கோடிக்கணக்கில் அவர் பின்னால் அணிதிரண்டார்கள்.

நம்ம தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்ளுங்களேன். 1967ல் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட என்ன காரணம்? இந்தி எதிர்ப்பு. அது ஒரு கோஷம். அதை வெகுமக்கள் இயக்கமாகக் கட்டி எழுப்பியது தி.மு.க. அன்று இளைஞர்கள் லட்சக் கணக்கில் வந்து தி.மு.க பின்னே நின்றார்களே. அவர்களெல்லாம் நிச்சயம் ஆள்பிடித்து, லாரிகளில் ஏற்றிவந்த கூட்டம் அல்ல.

இதெல்லாம் அந்தக் காலம், இன்றைக்கு அப்படிப் பேச எதுவுமே இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள்தான் கண்ணை மூடிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அமெரிக்காவில் ஒபாமா பேசியது என்ன? அவர் முன்வைத்த கோஷங்கள் என்ன? மக்கள் அவர் பின்னால் அணிதிரளாமலா போய்விட்டார்கள்? அவர் அப்படி என்னதான் பேசினார்: அ) சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கவேண்டும், தடுக்க வேண்டும். வண்டிகளிலிருந்து பிற தொழில்களில் இருந்தும் வெளியேறும் புகை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். ஆ) பங்குச் சந்தையில் பணம் சம்பாதித்தவர்கள் மீது, அவர்கள் சம்பாதித்த தொகை மீது போடப்படும் வரியை உயர்த்த வேண்டும். பணக்காரர்கள் (ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிப்பவர்கள்) இன்னும் அதிகமாக வரி கட்ட வேண்டும். இ) போரில் ஈடுபடும் நாடுகளோடு முன்நிபந்தனை இல்லாமல் சமாதானம் பேச வேண்டும். ஈ) நாடு முழுவதும் எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் உ) ஆயுத கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க, ஆயுதங்கள் மீதான சட்டங்கள் இன்னும் கடுமையாக வேண்டும்.

இப்போது அமெரிக்காவை யோசித்துப் பாருங்கள். அதன் மேல் நடந்த பயங்கரத் தாக்குதலை யோசித்துப் பாருங்கள். இன்ன பிற பிரச்னைகளையும் யோசித்துப் பாருங்கள். மேலே ஒபாமா முன்வைத்த கோஷங்களை அதனோடு இணைத்துப் பாருங்கள். ஒபாமாவுக்கு ஏன் ஓட்டு விழுந்தது உங்களுக்கே புரியும்.

விஷயம் இதுதான்: ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு கட்சியும் மாற்றத்துக்கான மொழியைப் பேச வேண்டும். அது அந்தக் காலகட்டத்தின் மொழியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கவேண்டும்.

ஆனால், இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் இன்னும் பழைய மொழியையே பேசிக்கொண்டு இருக்கின்றன. தனிமனித துதி, தனிமனித சாகசம், நூற்றாண்டு பாரம்பரியம் என்ற பழம் பெருமை, அதிகபட்சம் ஒன்றிரண்டு சாதனைகள் என்று மட்டுமே இவை பேசுகின்றன. மிச்சுவல் பண்டு விளம்பரங்களில், கீழே சின்ன எழுத்தில் ஒரு டிஸ்கிளைமர் வரி போட்டிருப்பார்கள்: Past performance may or may not be sustained in future. அதுதான் இங்கேயும் உண்மை. நேற்று நீ என்ன செய்தாய் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

முதலில் நீ நாளைக்கான மொழியைப் பேசு. ஒபாமா பேசினார். இன்றைக்கு அவருடைய மொழிதான் அவருக்கு முகம் கொடுத்திருக்கிறது. அவருடைய கரிசனம்தான், மக்கள் மத்தியில் தலைவராக ஆக்கியிருக்கிறது. அவரால், சாதாரண அமெரிக்கனின் வலியோடு தன்னைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிந்தது. அவர் பின்னே மக்கள் அணிதிரண்டதில் ஆச்சரியமே இல்லை.

ராகுல் காந்தி செய்யவேண்டியது இதுதான்: இன்றைக்கு இந்தியா சந்திக்கும் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, சாதாரண மனிதனின் வலியோடு கனவுகளோடு எதிர்பார்ப்புகளோடு கோபங்களோடு எரிச்சல்களோடு தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளத் தெரிய வேண்டும். அதில் இருந்து விடுதலைக்கான கோஷங்களை உருவாக்க வேண்டும். கோஷங்களை செயல்படுத்திக் காட்டத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதைச் செயல்படுத்தும் அணியை, தனிநபர்களை கண்முன்னே காட்டவேண்டும். அது போதும். அப்புறம் மக்கள்வெள்ளம் தன்னால் அணிதிரளும்.