Posted in சமூகம், சிறுதொழில் on November 25th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
நம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ஒரு சின்ன வாசலைத் திறந்து வைத்தால், அதில் ஒவ்வொருவராக உள்ளே நுழைய நமக்குத் தெரியாது. முட்டி மோதி, அடித்துப் பிடித்துக்கொண்டு, கதவையே உடைத்துக்கொண்டு, துவம்சம் செய்துவிட்டு உள்ளே போகத்தான் முற்படுவோம். மக்கள்தொகை அதிகம் உள்ள, வாய்ப்புகள் குறைவாக உள்ள ஜனநாயக நாட்டின் பிரச்னை இது. முன்பு, சென்னையில் ஹோர்டிங்குகள் வைக்க சென்னை கார்ப்பரேஷன் அனுமதி வழங்கியபோது, ஊரையே ஹோர்டிங்குகளால் மறைத்த புண்ணியவான்கள் நாம். ஒரு சுபயோக சுபதினத்தில் உயர்நீதிமன்றமும் உச்சநீதி மன்றமும் அதற்கு மங்கலம் பாடியது. இப்போது பஸ் விளம்பரங்களுக்கு உயர்நீதி மன்றம் மங்கலம் பாடியிருக்கிறது.
Posted in அரசியல், சமூகம், பொது on November 18th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
போராட்டம் என்பது ஒருவகை வலியுறுத்தல். பணியாளர்களின் வலி அதிகமாகும்போது, அது உரியவர்களின் கவனத்தில் பதியாதபோது, வலியுறுத்தல் அவசியமாகிறது. ஆனால், இன்று நமக்குத் தெரிந்த எந்தப் போராட்ட வடிவமும் வலிமையானதாக இல்லை. பிரச்னை இங்கேதான்.
Posted in இதழியல், புதிய இதழ் on November 18th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments
இதழ் முழுவதும் கலர்ஃபுல் விஷயங்கள். நேற்றைய இன்றைய பிரபலங்கள், எல்லா பக்கங்களில் அணிவகுத்திருக்கிறார்கள். 80 பக்கங்கள். நிறைய கட்டுரைகள். இதழ் முழுவதும் features அம்சங்கள் கூடுதல். வெகுஜன இதழுக்கான அத்தனை அம்சங்களும் இங்கே ஆஜர்.
Posted in இதழியல் on November 18th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
இன்றைக்கு தொலைக்காட்சியும் சினிமாவும் வாசகர்களுக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றன. அவர்களுடைய மொழியும் ஒலியும் இத்தகைய ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அழகியல் காட்சி ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள, பத்திரிகைகளுக்கு ஜாலம் செய்யும் மொழி அவசியமாகிறது. இல்லையெனில், வாசகன் பக்கங்களைத் தள்ளிக்கொண்டே போய்விடுவான்.
Posted in ஆன்மிகம் on November 11th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்கள் கண்முன்னே ஒரு பெருவெள்ளம் ஓடி வருகிறது. நமது ஆன்மிகம், பண்பாடு, சிந்தனை மரபு, பெருங்கற்பனைகள் எல்லாம் அலையலையாக ஓடி வந்து உங்கள் காலடியை நனைத்துக்கொண்டு இருக்கின்றன. உங்கள் முகம் அதில் தெரியும். நீங்கள் ஒரு பெரும் மரபின் தொடர்ச்சி. வளத்தின் அடுத்த கண்ணி.
Posted in இதழியல், இலக்கியம் on November 11th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments
நம்ம ஊரில், ப்ரூஃப் ரீடர்களை எடிட்டர்களாக நினைக்கிறார்கள். பதிப்பாசிரியர்கள் என்ற சாதி இங்கே மைனாரிட்டி கம்யூனிட்டி. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புகளில், எடிட்டிங்கை ஒரு பாடகமாகவேனும் வைத்து இதற்கு உயிர் கொடுக்கலாம். எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கேற்ப நுண்ணுணர்வு கொண்ட எடிட்டர்களின் எண்ணிக்கை வளரவில்லை என்பது வருத்தமான விஷயம்.
Posted in அனுபவம், இலக்கியம் on November 11th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment
கடந்த ஐந்து நாள்களாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. மழை மகிழ்ச்சிக்கான அறிகுறி, புதிய குழந்தையின் வரவைப் போல. எவ்வளவுதான் இடர்களை அது ஏற்படுத்தினாலும் மழையைப் போல் அற்புதம் ஏதுமில்லை. நான் எழுதும் மடிக்கணினிக்குப் பக்கத்தில் ஒரு ஜன்னல், என் பின்புறம் ஒரு ஜன்னல். இரண்டிலும் மழை வரிவரியாகக் கோடுகள் இழுத்துக்கொண்டு இருந்தது. ஒரு சமயம் சாய்வுக் கோடுகள், மற்றொரு சமயம் நேர்க் கோடுகள். ஓவிய வெண்மை சட்டெனக் கருக்கத் தொடங்கும். தூரத்தில் இடிமுழக்கம். எலும்பு சில்லிடும் குளிர்க் காற்று.
Posted in சேவை on November 5th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment
இந்த ஆண்டு, பேராசிரியர் ஜெகதீசன் பிறந்து நூறாண்டுகள் ஆகிறது. யார் யாருக்கோ நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம். ஜெகதீசனைக் கொண்டாடுவார் யாருமில்லை. அவரைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள் யாருமில்லை என்பதால், விழாக் கொண்டாட்டங்கள் இல்லை என்று சொல்லுவதா என்று தெரியவில்லை. சென்ற ஞாயிறன்று, மழவந்தாங்கலில், மிகச் சிறியதாக அவரது ஓவியத் திறப்போடு அவரது நூற்றாண்டு விழா எளிமையாக தொடங்கியது.
Posted in சமூகம், பொது on November 5th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments
என் வரையில் ஒன்றைக் கண்டிருக்கிறேன். தனிப்பட்ட தகவல்கள் எதையும் கேட்காமல், தெரிந்துகொள்ளாமல் பல ஆண்டுகள் நண்பர்களாக இருக்க முடியும். பேசுவதற்கு விஷயங்களுக்கா பஞ்சம்? ஆனால், இப்படிக் கேட்காமல் இருப்பது என்பது ஒரு பழக்கம். முதலில் வாயைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்புறம் மெல்ல மெல்ல மனத்தையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை மனத்தில் ஆழ வேரூன்றிவிட்டால், அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைக்கும் ஆர்வம் முற்றிலும் குறைந்துவிடும்.
Posted in நாடகம் on November 5th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments
ஒரு காலகட்டத்தில் நிறைய புது நாடக மேடை ஏற்ற முயற்சிகள், நாடகப் பிரதிகளை வெளியிடும், புதிய குழுக்களை ஆரம்பிக்கும் முயற்சிகள் இருந்தன. இப்போது, கட்டுரைகளின் காலம் போல் இருக்கிறது. சுழற்சியில் மீண்டும் நாடகங்களுக்கும் ஒரு காலம் வரும். எப்படி எஃப்.எம். வந்து மீண்டும் வானொலிக்கு உயிர் கொடுத்ததோ, அப்படியே நாடகங்களிலும் ஒரு புதுமை வரும் என்று நம்புகிறேன்.