மொட்டை மாடி இரவுகள்

Posted in அனுபவம், பொது on December 9th, 2009 by வெங்கடேஷ் – 6 Comments

வெயில் காலங்களில் மாடியை படுக்க உகந்த இடமாக மாற்றுவது ஒரு கலை. மாலை மூன்று நான்கு மணியில் இருந்தே, படுக்கும் இடங்களில் தண்ணீரைக் கொட்ட வேண்டும். கொட்டிய ஒருசில நிமிடங்களிலேயே தண்ணீர் ஆவியாகிப் போய்விடும். தரையில் நிற்க முடியாது. வெப்பம் கால்களில் தெரியும். இது முதல் ரவுண்டு. ஐந்து மணி வாக்கில் இன்னொரு முறை தண்ணீரைக் கொட்ட வேண்டும்.

விலையேற்றம் கட்டுப்படுமா?

Posted in பொருளாதாரம் on December 9th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

வழக்கம்போல், அரசு, எப்போதும் கடைசியில்தான் விழித்துக்கொள்கிறது. நிலைமை கையைவிட்டுப் போய், கட்டுக்கடங்காமல் போகும்போதுதான், மேலும் அது அவர்களுடைய ஓட்டு அரசியலைப் பாதிப்பதாக இருந்தால்தான் விழித்துக்கொள்கிறார்கள். பிரணாப் முகர்ஜி, சோனியா என்றெல்லாம் விலையேற்றம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படியானால், அரசு விழித்துக்கொண்டுவிட்டது என்று அர்த்தம்.

மாறும் மனச்சித்திரங்கள்

Posted in இலக்கியம், திரைப்படம் on December 9th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

எந்தக் காலத்திலும் எழுத்தாளன், நான் எழுதியதை என் வாசகர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. எழுத்தாளன் சொன்னதை அல்ல, வாசகன் தான் புரிந்துகொள்ள விரும்பியதையே புரிந்துகொண்டு இருக்கிறான்.

ஒரு திருத்தம், ஒரு மகிழ்ச்சி

Posted in பதிப்பகம், பொது on December 2nd, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

தமிழ் பதிப்பகங்கள் தம் விற்பனை விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், தொழில், வர்த்தக அமைப்புகளாக இருக்கும் பபாசி போன்றவை, தமிழக சிஐஐயின் பதிப்பு அங்கம் (இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்) போன்றவை, தமிழ்ப் பதிப்புலகின் போக்குகளையும் வளர்ச்சிகளையும் அவ்வப்போது ஆய்வுகளாகவும் அறிக்கைகளாகவும் வெளியிடுவது உபயோகமாக இருக்கும்.

அருகிப் போன ஆர்வம்

Posted in கல்வி, சமூகம், மாணவர்கள் on December 2nd, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

ஆர்வம் வேறு, வருமானம் வேறு. ஆர்வமே வருமானமும் தந்தால் நல்லதுதான். அதுதான் அதிகபட்ச மகிழ்ச்சி தருவது. ஆனால், இரண்டும் எப்போதும் எதிர் எதிர் துருவங்கள். இணைய வாய்ப்பே இல்லை என்பது பலருடைய வாழ்க்கை அனுபவம். உண்மையை, யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

இந்தியோடு உறவு

Posted in திரைப்படம் on December 2nd, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

இந்தி சினிமா, நம்மை தொடர்ந்து தேசிய நீரோட்டத்தோடு அணுக்கமானத் தொடர்பில் வைத்தே இருந்திருக்கிறது. மற்ற வகைகளில் வேண்டுமானால், நாம் இந்தி உலகோடு வேறுபட்டு, தனிமைப்பட்டுப் போயிருக்கலாம். ஆனால், சினிமா என்ற சாதனம் நம்மைப் பிணைத்தே வைத்திருக்கிறது.

கறை

Posted in அனுபவம், இலக்கியம் on December 2nd, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக, ஜஸ்ட் டயல் சர்வீஸுக்குப் போன் செய்தேன். என் தேவையைச் சொல்ல, அடுத்த இரண்டாவது நிமிடம் இரண்டு மூன்று சலவைக்காரர்கள் போன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரும் ஒரே பல்லவிதான். துணியின் அடிப்படை வண்ணமே போய்விடும். கறையை மட்டும் நீக்க முடியாது. என்ன சொல்கிறீர்கள்?

ஒயர்கள்

Posted in கவிதை on December 2nd, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

முன்பு எழுதிய கவிதையை இங்கே மீண்டும் பிரசுரிக்கிறேன். படித்துப் பாருங்கள்.

அழியாப் புகழ் பெறும் இடங்கள்

Posted in அனுபவம், இலக்கியம், சமூகம் on November 25th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

இடம் என்ற அம்சம் இல்லாமல் என்னால் கதை எழுத முடிந்ததில்லை. கதை மாந்தர்களை ஏதேனும் ஒரு தெருவில் பொருத்திவிடுவது இதனால்தான். அதற்கு பிறகு கதையை அந்த இடமே நகர்த்திச் சென்றுவிடும். இடம்தான் கதைக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. மார்க்குவேஸுக்கு மகண்டோ, சுஜாதாவுக்கு ஸ்ரீரங்கம், அசோகமித்திரனுக்கு ஹைதராபாத் எல்லாம் இப்படி நம்பகத்தன்மை வாய்ந்த இடங்கள். அவர்களுடைய கதைகள் அழியாப் புகழ் பெற்றதற்கு, இடமும் ஒரு முக்கியக் காரணமோ? இருக்கலாம்.

சென்னை புத்தகக் கண்காட்சி – ஒரு டிரெயிலர்

Posted in சென்னை புத்தகக் கண்காட்சி 2010, புத்தகங்கள் on November 25th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

2010க்கான சென்னைப் புத்தக விழா ஜூரம் தமிழ்ப் பதிப்பாளர்களிடையே தொடங்கிவிட்டது. மொத்தத் தமிழ்ப் பதிப்புலகமும் சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டியே தமது புத்தக வெளியீடுகளை அமைத்துக்கொண்டு இருப்பார்கள். அதிகபட்ச மக்கள்திரள் வரும் இடம் இதுதான். அதிகபட்ச வியாபாரம் ஆகும் இடமும் இதுதான்.