இடைத்தேர்தல்: சில பாடங்கள்

Posted in அரசியல் on December 30th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

இரண்டு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயித்திருக்கிறார்கள். பொதுவாக 60, 65 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றால், மக்கள் தீர்மானத்தோடு வாக்களிக்க முன்வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். திருச்செந்தூரில் 82 சதவிகிதம், வந்தவாசியில் 79 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. பதிவான மொத்த வாக்குகளில், அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) 67.8 சதவிகித வாக்கும், கமலக்கண்ணன் (வந்தவாசி) 59.3 சதவிகித வாக்கும் பெற்றிருக்கிறார்கள். வாக்காளர்கள் வாங்கப்பட்டார்கள், பணம் புழங்கியது என்றெல்லாம் பேசுவது இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் அபத்தமாகத் தோன்றுகிறது.

மகிழ்ச்சிகளும் வருத்தங்களும் ஆச்சரியங்களும்

Posted in அனுபவம், பொது on December 24th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments

ஒரு சில பெயர்களை, கவிதைகளை எடுத்துச் சொல்ல ரொம்பக் கூச்சமாக இருக்கிறது. கால ஓட்டத்தில், இந்தப் பெயர்களையும், கவிதைகளையும் அடித்துத் துவைத்து, அதனை ஒருவித இழிவுநிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்களோ என்ற அச்சம் இருக்கிறது. மகாத்மா என்றோ, காந்தி என்றோ எங்காவது எழுதினால், எடுத்துக்காட்டு சொன்னால், கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இதற்கு முன்னர் அதைப் பயன்படுத்தியவர்கள் எவ்வளவு தூரம் அதை நல்லவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னையில் இரண்டு புதிய விஷயங்கள்

Posted in பொது on December 24th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

சிக்னல் இல்லாத சாலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். சிக்னல் விளக்குக்குக் கீழே யுனினாரின் அழகான நீலமலர் லோகோவை ஒளிர வைத்துவிட்டார்கள். எவ்வளவு புத்திசாலித்தனம்! மக்களின் பார்வையில் மிக அதிகமாக படக்கூடிய ஓரிடத்தை இத்தனை நாள் யாரும் கவனிக்கவில்லையே என்று தோன்றியது. யுனினார் சேவை எப்படி இருக்கிறதோ எனக்குத் தெரியாது, ஆனால், அதன் விளம்பர உத்திகள் ரசனையுடன் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றன.

மிகை தேவையா?

Posted in சமூகம், பொது on December 24th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

ஒரு வகையில், நம் பண்பாட்டில், பிறப்பும் இறப்பும் கொண்டாட்டமானது போலிருக்கிறது. எல்லாவற்றையும் மிகையாக வெளிப்படுத்துவது நமது இயல்பிலேயே ஊறிப் போயிருக்கிறது.
தனிமனிதர்களிடையே தொடங்கி சமூகம் மொத்தமும் இது பரவியிருக்கிறது. இதில் சரி தவறு என்று ஏதும் இல்லை. ஆனால், மூத்தோரின் நினைவைக் கொண்டாடியே தீரவேண்டும் வலிந்து ஒன்றைத் திணிப்பது, எவ்வளவு தூரம் சரியென்றுதான் தெரியவில்லை.

எதிர்காலம் கருதி…

Posted in சுற்றுச்சூழல் on December 24th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

இது ஒருவரை ஒருவர் பழி சொல்வதுபோல்தான் தோன்றுகிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது? நுகர்வோர்களின் மனம் மாறவில்லை என்றால் இதில் ஏதும் செய்வதற்கில்லை. என்னைப் பொறுத்தவரை ஒன்றைப் பின்பற்ற முயற்சிக்கிறேன். எங்கே கடைகளுக்குச் சென்றாலும் கூடையையோ, பிக் ஷாப்பரையோ எடுத்துக்கொண்டு செல்கிறேன். முடிந்தவரை, வீட்டுக்குள் பிளாஸ்டிக் கவர் வரவைத் தவிர்க்கப் பார்க்கிறேன்.

புதிய இதழ்: அகநாழிகை

Posted in புதிய இதழ் on December 24th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

அகநாழிகை இரண்டாவது இதழே வந்துவிட்டது. முதல் இதழ் வந்தபோதே எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். மிகச் சிறப்பான இதழாக அகநாழிகையை பொன்.வாசுதேவன் உருவாக்கியிருக்கிறார். படைப்பிலக்கியம் என்பதை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வரும் சிறு பத்திரிகைகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன.

அது ஒரு பொற்காலம்

Posted in எழுத்தாளர்கள், புத்தகங்கள் on December 17th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

இந்தப் புத்தகத்தின் நோக்கமே பழைய நினைவுகளை அசைபோடுவதுதான். எப்போதுமே கடந்துவிட்ட காலம், அற்புதமானது. இந்த நூலிலும் அந்த அற்புதம் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. மனம் இன்றைய காலகட்டத்தோடு பல சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்து, ஏக்கப்பெருமூச்சு விடுவதையும் தவிர்க்க முடியவில்லை. இறுதி அத்தியாயம் சொல்வது போல், ‘அந்த நாளும் வந்திடாதோ’தான்.

கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் – என் அனுபவம்

Posted in இதழியல் on December 17th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments

இதழ் தயாரிப்பு என்பது ஒரு பொறுப்பு. என் சொந்த மேதாவித்தனத்தைக் காட்டும் இடமல்ல அது. மேலும், சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொள்ளலாம், அடுத்தவர் காசில் அவர்களுக்கே அதைச் செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். நான் தயாரித்த இதழால், விற்பனை அதிகமாகிறதோ இல்லையோ, குறையாமல் இருக்கவேண்டும் என்ற பயமே என்னிடம் ஆழமாக இருந்தது.

பதில்களின் சொரூபம்

Posted in ஆன்மிகம், பொது on December 17th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

உணர்வு மட்டத்தில் கடவுளை replace செய்ய ஆளே இல்லை. ஏனெனில், அவர் உங்கள் விருப்பப்படி உருவாகுபவர். உங்கள் வழிகாட்டி, முகம் காட்டி, நெறி காட்டி. மனிதனின் மனத்தில் கேள்விகள் இருக்கும்வரை, கடவுள் இருந்துகொண்டுதான் இருப்பார். ஏனெனில் பதில்களின் சொரூபம் அவர்.

கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ்

Posted in இதழியல் on December 9th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

வரும் ஞாயிறன்று வெளிவரும் கல்கி இதழ், இண்டர்நெட் சிறப்பிதழ். 20.12.2009 தேதியிட்ட இதழ், 13.12.2009 அன்று கடைகளில் கிடைக்கும். அந்த இதழை நான் தயாரித்திருக்கிறேன்.