பொருளாதாரம்

2009 – மறக்க முடியாத ஆண்டு 3 : பொருளாதாரம்

Posted in பொருளாதாரம் on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

1. 2009 தொடங்கியபோது, விலைவாசி உயர்வு கடுமையாக இருந்தது. அக்டோபர், நவம்பர் 2008ல் இருந்தே விலைவாசி கடுமையாக உயரத் தொடங்கியிருந்தது. 2009 இறுதி வரை விலைவாசி இறங்கவே இல்லை. காய்கறிகள், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள் எல்லாம் கீழ் மத்திய வர்க்கமும் மத்திய வர்க்கமும் வாங்க முடியாத உயரத்துக்குப் போய்விட்டது. எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

2. சர்வதேச பொருளாதாரம், குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. அதுவும், மக்களுக்கு, அமெரிக்க அரசு கொடுத்த வரிச்சலுகை, பணப்பட்டுவாடா மூலம், மக்கள் கையில் பணப்புழக்கத்தை அரசு மேம்படுத்தியது. இதனால், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், அதன் மூலம் உற்பத்தி பெருகும் என்பது எதிர்பார்ப்பு. எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் வளர்ந்திருப்பதாக, 2009 கடைசி காலாண்டு நிதி அறிக்கைகளில் விவரங்களைத் தெரிவித்திருக்கின்றன.

3. ஆனால், வேலைவாய்ப்பு உயரவில்லை. அமெரிக்காவிலும் உயரவில்லை. இந்தியாவிலும் உயரவில்லை. எல்லா இடங்களிலும் ஒருவித பயமும் தயக்குமும் அப்படியே இருக்கின்றன. உருவாகியிருக்கும் வேலைவாய்ப்புகளும் ஆரம்பநிலை வேலைகளுக்கே உருவாகியிருக்கிறது. குறைந்த ஊதிய வேலைகள் அவை. அல்லது ஒப்பந்த வேலைகள். இந்திய ஐடி நிறுவனங்கள் இனிமேல் தான் கேம்பஸ் இண்டர்வியூக்களுக்கு வரவேண்டும்.

4. பங்குச் சந்தை, முரட்டுக் குதிரை மாதிரி ஓடிக்கொண்டு இருக்கிறது. என்ன காரணத்துக்காக ஏறுகிறது என்று முகாந்திரமே இல்லாமல் சென்செக்ஸும், நிஃப்டியும் ஏறுகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஜிடிபி 9 சதவிகிதத்தைத் தொடலாம் என்று நிதி அமைச்சர் சொன்னால், அன்றே 500 புள்ளிகள் சென்செக்ஸ் ஏறுகிறது. இதற்கெல்லாம் ஏதாவது அடிப்படை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பல நிறுவனங்களின் லாப விகிதம் இன்னும் உயரவில்லை. உற்பத்தியும் விற்பனையும் உயரவில்லை. ஆட்டோ, வங்கித் துறை, பார்மா துறைகளில் வளர்ச்சி தென்படுகிறது. ஆனால், அரசின் முதலீடு அதிகரிக்கும், கட்டுமான முதலீடுகள் பெருகும் என்ற எதிர்பாப்பில், ஒவ்வொரு நிறுவன விலையும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.

மனநிலை நன்றாக இருக்கும்போது, உற்சாகமாக இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பங்குக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பிரிமியம் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.

5. பணவீக்கமும் விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்படாததால், இந்திய மக்களைப் பொறுத்தவரை, 2009 ஒரு வலி நிறைந்த ஆண்டே.

விலையேற்றம் கட்டுப்படுமா?

Posted in பொருளாதாரம் on December 9th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

சென்ற வாரம் ஏதோ ஒரு நாள், தி.நகர் உஸ்மான் சாலை வழியாக போய்கொண்டு இருந்தேன். மாலை நேரம். பசி. முருகன் இட்லி கடை கண்ணில் தென்பட, உள்ளே போனேன். ஒரு உள்ளங்கை அளவு ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டேன். விலை ரூ.37. பகீரென்றது.

நான் வழக்கமாக காய்கறி வாங்கும் கடையில், காய்கறிகள் வாங்கபோனேன். பொதுவாக விலை கேட்கும் வழக்கமில்லை. கடைக்காரர் நண்பர். அளவு கூடுதலாகவே கொடுக்கக்கூடியவர் என்பதால், விலை பேசுவதில்லை. அன்று நான் வழக்கமாக வாங்கும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு, மொத்த விலை கேட்டேன். ரூ.135. பொதுவாக ஐம்பது ரூபாய்களுக்குள் ஆகும் காய்கறி, ஒன்றரை மடங்கு விலையுயர்ந்திருந்தது. அதிர்ச்சியாக இருந்தது.

உணவுப் பொருள்களின் விலையேற்றம் எல்லா தரப்பினரையும் பாதித்து இருக்கிறது. மதுரை ஓட்டல்களில் மத்திய சாப்பாடு போடுவதே நின்றுவிட்டது என்கிறார்கள். சென்னையில் உள்ள சாதாரண ஓட்டல்களில் எல்லாம் கடுமையான விலையேற்றம். ஒரு சாதா தோசை 20 ரூபாய். மசால் தோசை 25 ரூபாய். ரூ.20வுக்குப் போடச் சொன்ன ஜனதா சாப்பாடு எங்கேயும் இல்லை.

விலைவாசிகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கின்றன. 2008 நவம்பரில் இருந்து விலையேற்றம் கட்டுக்குள் அடங்காமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாப் பொருள்களும் விலையேறி இருக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் விலையேற்றம் இன்னும் அதிகமாகி இருக்கிறது. வாரம் தோறும் வெளிவரும் பணவீக்கத்தில், உணவுப் பொருள்களின் வீக்கம் மட்டும் 17.46 சதவிகிதம்.

மத்திய அரசின் தவறான கொள்கை எப்படியெல்லாம் மக்களை வாட்டுகிறது என்று இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை. புரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை போலிருக்கிறது. உற்பத்தி பெருகவேண்டும், வளர்ச்சி வேண்டும் என்ற முகாந்திரத்தில், வங்கிக் கடன்களுக்கும் சலுகைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. விளைவு, இந்தியாவுக்குள் பணப்புழக்கம் அபரிமிதமாக அதிகரித்திருக்கிறது. பணப்புழக்கம், எல்லா விலைகளையும் தாராளமாக உயர்த்திவிட்டது.

இப்போது புலிவாலைப் பிடித்துவிட்ட கதையாக மாறிவிட்டது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் விலைகள் குறையும். அதற்கு அரசு கடன்களின் வட்டி விகிதங்களை உயர்த்தவேண்டும். வட்டி விகிதங்கள் உயர்ந்தால், வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும் என்று ஒரு சாரார் பீதி கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். உற்பத்தி பாதிக்கும், வேலைவாய்ப்புகள் பாதிக்கும் என்று சொல்கிறார்கள்.

இத்துடன் சேர்ந்துகொண்டது வறட்சியும் அதிக மழையும். இரண்டுமே இரண்டு எக்ஸ்ட்ரீம். உற்பத்தி போதவில்லை என்ற பெயரில், விலையேற்றம். இன்னொரு பக்கம் உணவுப் பொருட்கள் பதுக்கல். பல ஊர்களில் விற்கப்படும் அரிசி, பழைய அரிசி. குறைந்த விலைக்கு வாங்கித் தேக்கிவைக்கப்பட்டு, இப்போது அதிக லாபத்துக்கு விற்கப்படுகின்றன. தாராளமயப் பொருளாதாரத்தின் படி இதெல்லாம் நியாயம்.

மத்திய அரசு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. பிரணாப் முகர்ஜி இதைப் பற்றிப் பேசினால் கோபப்படுகிறார். சோனியா அம்மையார், விலைவாசி உயர்வு தனக்குப் பெரும் கவலை அளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். நேரடியாகத் தானே மன்மோகன் சிங்கிடமும் பிரணாப் முகர்ஜியிடமும் பேசியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் சோனியா. என்ன பேசி என்ன பிரயோஜனம்?

எப்போது பார்த்தாலும் மத்திய அரசு தொகுப்பிலும் மாநில அரசுகளின் தொகுப்புகளிலும் போதிய உணவுத் தானியக் கையிருப்பு இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார்கள். கூடவே, எதிர்காலத் தேவையை ஒட்டி இரண்டு லட்சம் டன்கள் வரை உணவுத் தானியங்களை தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையை வேறு சில விஷயங்களோடு வைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. அரிசி விலையேற்றம் என்பது தற்செயலானதா, அல்லது வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா என்றும் சந்தேகம் எழுப்ப வேண்டியிருக்கிறது. சமீபத்தில் லண்டன் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, பிலிப்பைன்ஸ் கிட்டத்தட்ட 6 லட்சம் டன் அரிசியை தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய இருக்கிறது.  இந்தியா முந்திக்கொண்டு இறக்குமதி செய்துவிடும் என்ற பயத்திலேயே இந்த அளவுக்கு பிலிப்பைன்ஸ் இறக்குமதி செய்ய இருக்கிறது. மேலும் அங்கே அதிபர் தேர்தல் வரவிருப்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதெல்லாம் தற்செயலானதா? ஆசிய அரசியலில் வேண்டுமென்றே அரிசித் தேவையை உருவாக்கி, விலையேற்றத்தை நம்மீது திணிக்கிறார்களா? தெரியவில்லை.

கூடவே இந்த நிலை 2010ல் மாறிவிடலாம் என்றும் அதற்குள் எவ்வளவு விலையேற்றத்தை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்துவிட வேண்டும் என்று சந்தையைக் கையாள்பவர்கள், பெருமுதலாளிகள் நினைப்பதாகவும் தெரிகிறது. இன்னொரு பக்கம் எப்படியும் இந்திய அரசு, கடன்களுக்கான வட்டி விகிதத்தை விரைவில் கூட்டாது, அதுவரை இந்த விலையேற்ற ஆட்டத்தைத் தாராளமாகத் தொடரலாம் என்றும் நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாங்கம் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் உறுதியுடனும் தொலைநோக்குடனும் நடந்துகொள்ள வேண்டும். கையிருப்பில் இருக்கும் உணவுப் பொருள்களை சந்தையில் இறக்கினாலே, தன்னால் விலைகள் வீழ்ச்சி அடையும். ஒருவகையில் அரசின் கையிருப்பு என்பதே இங்கே எதிர்மறை பலனைத் தந்துகொண்டு இருக்கிறது. இதைவிடக் கொடுமை தேசிய மற்றும் மாநில சேமிப்பு கிடங்குகளில் இருக்கும் மெத்தனம். பெரும்பாலான இடங்களில் pilferage இருக்கிறது. பல பொருள்கள் உபயோகமற்றுக் கிடக்கின்றன. இதையெல்லாம் முறைப்படுத்தினாலே, சந்தைக்கு இன்னும் கூடுதலான பொருள்கள் வந்துசேரும்.

வழக்கம்போல், அரசு, எப்போதும் கடைசியில்தான் விழித்துக்கொள்கிறது. நிலைமை கையைவிட்டுப் போய், கட்டுக்கடங்காமல் போகும்போதுதான், மேலும் அது அவர்களுடைய ஓட்டு அரசியலைப் பாதிப்பதாக இருந்தால்தான் விழித்துக்கொள்கிறார்கள். பிரணாப் முகர்ஜி, சோனியா என்றெல்லாம் விலையேற்றம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படியானால், அரசு விழித்துக்கொண்டுவிட்டது என்று அர்த்தம். இப்போதாவது விழித்துக்கொண்டார்களே என்று மகிழ்ச்சி அடையவேண்டியதுதான். வேறு வழி?

பணக்கொள்கை: சலுகைகள் தொடரலாமா?

Posted in பொருளாதாரம் on October 28th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

நேற்று பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி. சுப்பாராவ், 2009-10 நிதியாண்டில், இரண்டாம் காலாண்டு பணக்கொள்கை ஆய்வுக்குப் பிறகு ஒருசில அறிவிப்புகளைச் செய்தார். அவர் பேசிய பல செய்திகள், பொருளாதார வல்லுநர்களுக்குத்தான் புரியும். ஆனால், இந்தியாவில் வாழ்ந்துகொண்டு அதைப் புரிந்துகொள்ளாமல் இருக்க முடியாதே? என் வரையில் புரிந்துகொள்ள முயற்சித்தேன். என் புரிதல் இப்படி இருக்கிறது:

1. சென்ற ஆண்டு பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டபோது, உலக நாடுகள் பலவும் தத்தமது நாட்டின் பொருளாதார, தொழில் வளர்ச்சிகளுக்காக, சில நடவடிக்கைகளை எடுத்தன. சில சலுகைகளை வழங்கின. சில கொள்கை மாற்றங்களைச் செய்தன. அதன் மூலம், தொழில் முனைவோர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், வங்கிகளில், கடன் கொஞ்சம் சுலபமாகக் கிடைக்கத் தொடங்கியது. தொழில் நடத்தத் தேவைப்படும் கடன் தொகை, அவர்களுக்குப் போதிய அளவு கிடைக்காமல் இருந்ததே அப்போது பெரும் பிரச்னையாக இருந்தது.

இப்போது ஓராண்டுக்கும் மேல் கடந்துவிட்ட நிலையில், தொழில்கள் மெல்ல மெல்ல தம் சிக்கல்களில் இருந்து மீண்டிருக்கின்றன. ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் காலாண்டில் பல தனியார் நிறுவனங்களும் அரசுத் துறை நிறுவனங்களும் ஓரளவுக்கு நல்ல லாபம் ஈட்டியிருப்பதைத் தெரிவித்திருக்கின்றன. தொழில்கள் காலூன்றத் தொடங்கியிருப்பதை இது காட்டுகிறது.

இந்த நிலையில், தொழில்கள் வளர, வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்ட சலுகைகளை மெல்ல மெல்ல ரிசர்வ் வங்கி விலக்கிக்கொள்ள முடிவு செய்திருக்கிறது. நேற்றைய சுப்பாராவின் பேச்சு, இந்தத் திசையில்தான் இருந்தது. ஏற்கெனவே என்னுடைய முந்தைய ‘ரெசஷன் முடிந்துவிட்டதா? கட்டுரையில், பல நாடுகளில் இதே மனநிலை இருப்பதையும், சலுகைகளை விலக்கிக்கொள்ள வழி தேடுவதையும் (exit strategy) குறிப்பிட்டிருந்தேன். இஸ்ரேலிலும் ஆஸ்திரேலியாவிலும் இதைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். சலுகைகளை விலக்கிக்கொள்ளத் தொடங்கியிருக்கும் மூன்றாவது நாடு, இந்தியா.

2. சுப்பாராவ் உடனடியாகச் சலுகைகளை விலக்கிக்கொள்ளவில்லை. ஆனால், அதற்கான முகாந்திரத்தைச் சொல்லியிருக்கிறார். அந்தத் திசையில் எடுக்கப்பட்டுள்ள ஓர் சிற்றடியாக, வங்கிகள், தாம் பெறும் முதலீடுகளுக்கு ஈடாக, காப்பீடாகத் தாம் வைத்துக்கொள்ள வேண்டிய தொகையின் அளவில் 1 சதவிகிதத்தைக் கூட்டியிருக்கிறது. இதற்கு Statutory Liquidity Ratio (SLR) என்று பெயர். சென்ற ஆண்டு 25 சதவிகிதமாக இருந்த எஸ்.எல்.ஆர்.ஐ 24 சதவிகிதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி. இம்முறை அதை மீண்டும் 25 சதவிகிதத்துக்கு உயர்த்தியிருக்கிறது. இந்தத் தொகையை, வங்கிகள், அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்து வைக்க முடியும். இதனால், உடனடி பாதிப்பு ஏதுமில்லை என்று சொல்லுகிறார்கள் வங்கித்துறை வல்லுநர்கள். ஏற்கெனவே பல வங்கிகள், 25 சதவிகிதத்துக்கு மேலேயே அரசுகளின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வைத்திருக்கின்றன.

3. இன்னொரு வேலையையும் செய்திருக்கிறார் சுப்பாராவ். வங்கிகள், பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு, கட்டுமானப் பணிகளுக்காகக் கடன்கள் கொடுத்திருக்கின்றன. இதில் ஒரு சில கடன்கள் திரும்பி வர முடியாமல் போகக்கூடும். அந்த முதலீடு முற்றிலும் பொருளற்றதாகவும் போகக்கூடும். அந்தக் கடன் தொகையினால், வங்கிகளுக்கு எந்த வருவாயும் இல்லாமல் போகக்கூடும். இதை Non-performing assets (NPA) என்று சொல்லுவார்கள். இப்படி ஆகலாம் என்று எதிர்பார்த்தே, கடன் கொடுக்கும் வங்கிகள், கொடுக்கும் கடனுக்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்தத் தயார் நிலையில் இருக்க வேண்டிய தொகையின் அளவு முன்பு 0.4 சதவிகிதமாக இருந்தது. இப்போது அதை 1 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார் சுப்பாராவ்.

இதை இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், கட்டுமான நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு ரூபாய் கடனுக்கும் 0.4 பைசாவை காப்பீடாக எடுத்துவைக்க வேண்டும். இப்போது, அது 1 பைசாவாக உயர்ந்திருக்கிறது. இது பல செய்திகளைச் சொல்லுகிறது. முதல் செய்தி, கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் போகும் அளவு கூடுதலாகலாம். எப்போது அந்நிறுவனங்களால் கடனைக் கட்ட முடியாமல் போக முடியும்? அவர்களுடைய கட்டடங்களைப் போதிய நபர்கள் வாங்க முடியாமல் போகும்போது, விலை கூடுதலாக இருக்கும்போது. அப்படியானால், கட்டுமானத் துறைக்குள் ஒரு பூதம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்றுதானே இதற்கு அர்த்தம்? இதை முன்னெச்சரிகை நடவடிக்கை என்று எடுத்துக்கொண்டாலும், உள்ளூர பிரச்னை இருப்பதைத்தான் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை எடுத்து வைக்கிறது.

இன்னொரு செய்தி, கூடுதலான தயார்நிலைத் தொகையை எடுத்து வைக்கவேண்டும் என்பதால், பல வங்கிகள், கட்டுமான நிறுவனங்களுக்குக் கொடுக்கும் கடன்களின் அளவைக் குறைத்துவிடக் கூடும். உண்மையிலேயே கடன்களைக் கட்ட முடியும் என்று நம்பிக்கை தரும் நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வங்கிகளில் கடன் கிடைக்கும் நிலையும் ஏற்படலாம்.

4. மேலே சொன்ன மாற்றங்கள் ஏற்பட முக்கியக் காரணங்களில் ஒன்று, பணவீக்கம். இந்தியாவில், வங்கிகளில் காட்டப்பட்ட சலுகைகளால், அளவுக்கு அதிகமான பணபுழக்கம் இருந்து வருகிறது. கொள்கை ரீதியாகக் காட்டப்பட்ட சலுகைகளாலும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் மூலதனம் வந்து கொட்டியிருக்கின்றன. இதனால், ஒரு நன்மையும் ஒரு தீமையும் உண்டும். நன்மை, தொழில் வளர்ச்சி. முன்னேற்றம். தீமை, பணவீக்கம். அதாவது, பணப்புழக்கம் அதிகமானதால், பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இந்த விலைகள் உயர்வதற்கான எந்த ஓர் அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகள் கடந்த ஓராண்டில் மிகவும் அதிகமாக உயர்ந்திருக்கின்றன. மொத்த விற்பனைக் குறியீட்டென் (Wholesale Price Index – WPI), இந்த நிதியாண்டின் முடிவில், மார்ச் 2010ல் 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. முன்பு இது 5 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. அது 6.5 சதவிகிதத்துக்கும் மேல் போக வாய்ப்புண்டு என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. அதில் முக்கியமாக உணவுப் பொருள்களின் விலைதான் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பருவமழை பொய்த்துப் போய்க்கொண்டு இருப்பதால், உணவுப் பொருள்களின் விலைகள் இன்னும் அதிகமாகக்கூடும் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.

அப்படியானால், பணபுழக்கத்தைக் கட்டுப்படுத்தினால், ஓரளவுக்கு பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பணபுழக்கத்தைக் குறைத்தாலோ, தொழில்களின் வளர்ச்சி பாதிப்படையலாம். இரண்டையும் எப்படி ஒரே சமயத்தில் கையாளுவது? வேறு வழியில்லை, பணவீக்கம் ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் முன்பு அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாக வேண்டிய சூழல் வந்திருக்கிறது. இன்று இல்லையென்றாலும் அடுத்த பணக்கொள்கை சந்திப்பின்போது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்தே ஆகவேண்டும்.

5. இதையெல்லாம் விட முக்கியமான கேள்வி என்னவெனில், சலுகைகளை விலக்கிக்கொள்ள ரிசர்வ் வங்கி முயல்கிறதே, இது கொஞ்சம் அவசரமான முடிவு அல்லவா என்பதுதான். தொழில்கள் தமது சொந்தக் காலில் நிற்க பழகிவிட்டனவா? அவற்றுக்கு அரசின் சலுகையோ ஆதரவோ இனி தேவைப்படாத சூழல் ஏற்பட்டுவிட்டதா? தெரியவில்லை. பணக்கொள்கை ஆய்வுக்குப் பின் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொழில்களும் பொருளாதாரமும் வலுவான பிறகே, சலுகைகள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும், அதுவரை சலுகைகள் தொடரும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இதைப் பங்குச் சந்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கிடுகிடுவென பங்குகளின் விலைகள் விழத் தொடங்கிவிட்டன.

6.சரி, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்படி பாதிக்கப்படுவோம்? பல தொழில் நிறுவனங்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கிவிட்டனவா என்று தெரியவில்லை. பல நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் குறைத்திருப்பதன் மூலம் லாபம் ஈட்டியிருக்கின்றனவே அன்றி, விற்பனைப் பெருக்கத்தால் அல்ல. அப்படியானால், அரசின் சலுகைகள் விலக்கப்படுமானால், அவர்களுக்குத் தேவைப்படும் மூலதனம் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால், உற்பத்தி பாதிக்கப்படலாம். வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போகலாம். இன்னொரு பக்கம், மெல்ல மெல்ல பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரும். பணத்தின் மதிப்பு உயரும். உணவுப் பொருள்களைக் குறைந்த செலவில் வாங்கக் கூடிய சூழல் உருவாகும்.

இதில் முக்கியம், தொழில் வளர்ச்சியும் அதனால் ஏற்படக்கூடிய வேலைவாய்ப்புகள் பெருக்கமும்தான். அது எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அதே சமயம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலைகளும், பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவில் ஏழை எளியோர், மத்திய வர்க்கத்தினர் எல்லோரும் நிம்மதியாக வாழ முடியும்.

மத்திய அரசு எப்படி இதைக் கையாளுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரெசஷன் முடிந்துவிட்டதா?

Posted in பொருளாதாரம் on October 7th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

கோடி ரூபாய் கேள்வி இது. டிசம்பர் 2007ல் பொருளாதாரச் சரிவு ஆரம்பித்தது என்பதை அறிவிக்க, மேலும் இரண்டு காலாண்டுகள் ஆயின. அதன் பிறகு கடந்த ஒன்றே முக்கால் ஆண்டாக, உலக நாடுகள் அனைத்திலும் வளர்ச்சி தடைபட்டுப் போயிருக்கிறது. இந்த நிலையிலும் இந்தியாவும் சீனாவும் ஓரளவுக்கு வளர்ச்சி பெறும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். அமெரிக்கா உள்பட பல வளர்ந்த வளரும் நாடுகளில் உள்ள அரசுகள் தத்தமது தொழில் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் ஏராளமான பொருளாதாரச் சலுகைகளையும் உதவிகளையும் வாரி வழங்கின. விளைவு, பல நாடுகளில் மீண்டும் தொழில்துறை, வளர்ச்சிப் பாதையில் திரும்பத் தொடங்கியிருக்கிறது.

கடந்த ஒன்றே முக்கால் ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றங்களை இப்படி ஒரே பத்தியில் சொல்வது கொஞ்சம் அபத்தம்தான். அதன் வலி, வேதனைகளுக்கு இங்கே இடமே இல்லாமல் போய்விட்டது. பயத்துக்கும் தவிப்புக்கும் இது நியாயம் செய்வதாகவும் ஆகாது.

எப்போது இந்த நிலை மாறும் என்ற அவசரம் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் எப்போதும் இருந்து வந்தது. பல அரசுகள் தம்மால் இயன்ற முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்தன. இன்னும் நிலைமை மோசமாகிவிடாமல் பல நாடுகள் பார்த்துக்கொண்டன.

இப்போது அடுத்த கேள்வி, இந்த சரிவு நின்றுவிட்டதா? வளர்ச்சிப் பாதைக்கு நம் நாடுகள், குறிப்பாக அமெரிக்கா திரும்பிவிட்டதா? எந்த ஆய்வாளரும் உறுதியாக இதற்கு ஆம், அல்லது இல்லை என்று பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். சரிவு இப்போதைக்கு இல்லை. நின்றுவிட்டது மாதிரிதான் தெரிகிறது என்று ஒரு மாதிரி குழப்பமான பதில்தான் வருகிறது. பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்பவர்கள் பயங்கர உற்சாகிகள். எட்டர்னல் ஆப்டிமிஸ்டுகள். ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தே, உலகப் பொருளாதாரம் சரியாகிவிட்டது என்று கடகடவென்று பல்வேறு வளரும் நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகளில் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

இந்தியாவில் மார்ச் 8க்கு பின், மும்பைப் பங்குச் சந்தை மிகவும் வேகமாக முன்னேறி, இன்று 17,000 புள்ளிகளைத் தொட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறது. 20,000 புள்ளிகளைத் தொடும் என்று ஆருடம் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு புறம், இந்த வேகம் பயமாக இருக்கிறது, இது நிறுவனங்களின் வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக இருக்கிறது, இது தாக்குப்பிடிப்பதற்கான சூழ்நிலை இல்லை என்று யதார்த்த நிலை பேசுபவர்களும் இருக்கிறார்கள்.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டுப் பணம் கிட்டத்தட்ட 12,600 கோடிகள் வந்து குவிந்திருக்கின்றன. அபரிமிதமான பணபுழக்கம், இந்தியாவுக்குள் அதிகரித்திருக்கிறது. மத்திய அரசு, வட்டி விகிதங்களைக் குறைவாக வைத்திருப்பதன் மூலம் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்ற எண்ணத்தில் இருக்கிறது. இதனால் பணபுழக்கம் அதிகரித்திருக்கிறது. மறுபுறம், பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. காய்கறி, அரிசி, பருப்பு என்று அன்றாடம் தேவைப்படும் பொருள்களின் விலை உயர்ந்திருக்கிறது. கன்சியூமர் பிரைஸ் இண்டெக்ஸ் 14 சதவிகிதத்தைத் தொட்டது. இதற்காக, பணப்புழக்க அளவை இந்தியாவில் கட்டுப்படுத்தினால், தொழில் வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று அரசு பயப்படுகிறது.

சர்வதேச அளவில் பல நாட்டு அரசுகளும் மத்திய வங்கிகளும் இப்போது வேறோரு விஷயத்தையும் பேசத் தொடங்கியிருக்கின்றன. பொருளாதாரம் வளர கொடுக்கப்பட்டச் சலுகைகளை மெல்ல மெல்ல திரும்பப் பெற்றுக்கொள்ளலாமா (exit strategy), பெற்றுக்கொள்ள இது ஏற்ற தருணம்தானா என்று பேசத் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்காவில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில், பொருளாதார ஆதரவும் ஊக்கங்களும் இன்னும் கொஞ்சம் காலத்துக்குத் தொடரவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

வளர்ச்சி பற்றிய ஐயம் இப்போது எல்லா நாடுகளில் பீடித்திருக்கிறது. நாம் பொருளாதாரச் சரிவில் இருந்து மீண்டிருக்கலாம். தொழில்துறை வளர்ச்சி பல நாடுகளில், சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு நம்பிக்கை தருவதாக இருக்கலாம். ஆனால், இது நிஜம்தானா என்ற கேள்வி எல்லோருடைய மண்டையையும் ஆக்கிரமித்திருக்கிறது. பல நிறுவனங்கள் லாபம் காண்பித்திருப்பது, தமது செலவுகளைக் குறைத்திருப்பதனால்தானே அன்றி, உற்பத்திப் பெருக்கத்தினாலோ, விற்பனை அளவு கூடுதலாகியிருப்பதனாலோ அல்ல.

இந்த ஐயத்துக்கு இன்னொரு காரணம், வேலையில்லாத் திண்டாட்டம் பல நாடுகளில் இன்னும் மோசமாகிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் அது 10 சதவிகித அளவுக்கு மேல் போகக்கூடும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அப்படியானால், வீட்டில் பணம் வந்து சேரவில்லை என்னும்போது, வாழ்க்கைத் தரம் எப்படி உயரும்? பொருள்களின் தேவை எப்படி உயரும்? உற்பத்தி எப்படிப் பெருகும்? அப்படியானால், இன்று வளர்ச்சி என்று காண்பிக்கப்படுவது எவ்வளவு தூரம் உண்மை?

அதீத பணப்புழக்கத்தால், மற்றொரு நீர்க்குமிழி உருவாகிக்கொண்டு இருக்கிறதோ என்ற அச்சம் பல நிதித்துறை ஆய்வாளர்களுக்கு இருக்கிறது.

இதில் இருந்து இன்னொரு முடிவுக்கும் வருகிறார்கள். நாம் பொருளாதாரச் சரிவில் இருந்து மீளலாம். ஆனால், வளர்ச்சி எதிர்பார்த்த வேகத்தில் இருக்காது. பல இடங்களில் இன்னும் பள்ளங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் தட்டுத் தடுமாறித்தான் முன்னேற்றம் காண முடியும்.

இதெல்லாம் உலக நிலைமைகள். இந்தியாவைப் பொறுத்தவரை, என் கவலைகள் இன்னும் அதிகம். 50 சதவிகிதத்துக்கும் மேல் இளைஞர்களை உடைய இந்தியாவில், கடந்த ஒன்றே முக்கால் ஆண்டுகள், மோசமான வெறுமையை உருவாக்கியிருக்கிறது. 70களிலும் 80களிலும் எப்படி இளைஞர்கள் வேலையில்லாமல், மனம் நொந்து, அரசை எதிர்த்துக்கொண்டு, செங்கொடியின் நிழலில் போய் நின்றார்களோ, அப்படிப்பட்ட வெறுமை இது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் வேறொருவிதமான் உற்சாகம் எங்கும் கொப்பளித்துக்கொண்டு இருந்தது. நகரங்களில் வளர்ந்த ஒரு தலைமுறையினர், வேலையில்லாத் திண்டாட்டம் என்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்தது. இப்போது மீண்டும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கியிருக்கிறது.

பொருளாதார வளம் பெருகும்போது, எல்லோராலும் வாழ முடியும். சாதி, மத ஏற்றத்தாழ்வு இல்லாமல், தகுதி பாகுபாடு இல்லாமல், எல்லோரும் அண்டிக்கொள்ள ஓர் நிழல் கிடைக்கும். தம்மளவில் நிறைவான கெளரவமான வாழ்வை உருவாக்கிக்கொள்ள பொருளாதார வளம் முக்கியம். இன்று வளர்ச்சி பற்றிய பயமும் முன்னேற்றம் பற்றிய தெளிவின்மையும் இருக்கும்போது, பல நிறுவனங்கள், ஆளெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கும். சுணக்கம் காட்டும் நிறுவனங்களும் உண்டு. அபரிமிதமான ஆள்சேர்ப்புக்கு இனி உடனடி வாய்ப்பு இல்லை. தகுதிகள், மிகுந்த கவனத்தோடு சரிபார்க்கப்படும். செலவுகளை எவ்வளவு தூரம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்ற கவனமும் நிறுவனங்களுக்கு வந்துவிடும். ஒருவகை இறுக்கம், மூடிய நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த இறுக்கம், சமூக ரீதியாக நிறைய பாதிப்புகளையே உருவாக்கும்.

ஒன்று நன்றாகத் தெரிகிறது. இந்தப் பொருளாதாரச் சரிவு, நம்மை அப்படியே விட்டுப் போகப்போவதில்லை. நம் நெஞ்சில் நீங்காத வடுவை ஏற்படுத்திவிட்டே செல்லப் போகிறது. இனி, நாம் பழைய மனிதர்களாக இருக்க மாட்டோம். அடுத்த பத்திருபது ஆண்டுகள் இதைப் பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கப் போகிறோம். அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடக் கூடியதா இந்த வலி?

வளர்ச்சியின் வலி

Posted in அரசியல், பொருளாதாரம் on September 16th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

ஞாயிறு மதியம், எங்கள் வீட்டுக்குப் பழைய பேப்பர் வாங்குபவர் வந்தார். பல ஆண்டுகளாக இதுதான் அவர் தொழில். நேர்மையானவர். தொலைபேசியில் கூப்பிட்டவுடன் வீட்டுக்கே வந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எடை போட்டு பணம் கொடுத்துவிட்டுச் செல்வார். படிப்பதில் ஆர்வமுடையவர். பணம், பொன், மண் ஆகிய துறைகளில் முதலீடு செய்யவேண்டும் என்று ஆர்வமுடையவர். பங்குச் சந்தையில் நிறைய ஆர்வம். அன்றும் பங்குச் சந்தையில் இருக்கும் டிரைவேட்டிவ் மார்க்கெட் பற்றித்தான் கேட்டார். ஃபூச்சர்கள் மற்றும் ஆப்ஷன்கள் பற்றி எனக்குத் தெரிந்ததை மிக எளிமையாகச் சொல்லிக்கொண்டு வந்தேன். பேச்சு அப்படியே ஷார்ட் டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ், லாங்க டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ், வருவான வரி என்று வளர்ந்துகொண்டே போனது.

‘நான் வரி கட்டறா மாதிரி சம்பாதிக்கலை. எனுக்குப் பிரச்னை இல்லை. ஆனா அனாவசியமா எதுக்குப் போய் வரி கட்டணும்?’

‘வரி கட்டறதுல என்னப்பா பிரச்னை?’

‘ஒரு நாளைக்கு பதினஞ்சு பதினாறு மணிநேரம் வேலை செஞ்சி சம்பாதிச்சுட்டு, இவனுக்கு எதுக்கு சார் போய் வரியை அழுவணும்.’

‘அப்ப ஏன் இந்தியாவுல இருக்கீங்க? எங்கயாவது வெளிநாடு போக வேண்டியதுதானே?’ இது நான்.

‘நான் ஏன் வெளிநாடு போவணும்?’

‘சரி, நீங்க வீட்டுல கேஸ் வெச்சிருக்கீங்களா?’

‘இருக்கு. எங்கம்மா பேர்ல.’

‘பஸ்சுல போவீங்களா?’

‘எங்க போனாலும் பஸ்ஸுதான்.’

‘ஆவின் பால் வாங்கறீங்களா?’

‘வாங்கறேனே?’

‘இங்க எல்லாம் நீங்க முழுசா பணம் கொடுக்கறீங்களா?’

‘அப்படின்னா?’

‘கேஸுக்கு நீங்க குடுக்கறது ரூ.320. அதனுடைய உண்மையான விலை கிட்டத்தட்ட 400 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 49 ரூபாய். அதன் உண்மையான விலை கிட்டத்தட்ட 60 ரூபாய். நீங்கள் குடுக்கற பணத்துக்கு மேல ஆகும் செலவை யார் ஏத்துக்கறாங்க? யார் மானியமா தராங்க? கவர்மெண்ட்டுதானே. உங்களுக்கு எதுக்கு கவர்மெண்ட்டு இதெல்லாம் செய்யணும்..?’

‘என்ன சார்.. அவனவன் கோடி கோடியா ஏமாத்திகினு இருக்கான். அரசியல்வாதிங்க எத்தன வீடு வெச்சிருக்காங்க. அவங்க வரி கட்டறாங்களா என்ன?’

‘இங்கதான் தப்பு பண்றீங்க சார். அவன் கொடுக்கலை, இவன் கட்டலை, நான் ஏன் கட்டணும்னும் கேக்கறது தப்பு. நீங்கள் இந்தியாவுல தானே இருக்கீங்க. நீங்கள் இந்தியாவுக்கு என்ன செஞ்சீங்க? இந்தியாவோட எல்லா வளத்தையும் வசதிகளையும் பயன்படுத்திப்பீங்க. அதை வெச்சுதான் உங்கள் வாழ்க்கையே இருக்கு. ஆனால், அதுக்கு ஒண்ணும் திருப்பித் தரமாட்டேன்னு சொல்றது நியாயமா?’

‘மத்தவனெல்லாம் செய்யலையே சார். நான் ஏன் செய்யணும்?’

‘மத்தவன் செய்யலைங்கறதால நாம செய்யாமல் இருப்பதுல அர்த்தமில்லை. நம்ம கடமை, நாம இந்தியாவுக்கு மனத்திருப்தியோட, மகிழ்ச்சியோட வரியைக் கட்டணும். மத்தவன் கட்டலைங்கறது அவனோட பிரச்னை. நீங்க ஏன் அவனைப் பார்த்து சூடு போட்டுக்கணும்னு நினைக்கிறீங்க?’

‘இந்த வரிப்பணத்தைத் தானே சார் வாரி உடறாங்க. கலர் டிவி என்ன? சுனாமி நிவாரணம்ங்கற பேர்ல சும்மா இருக்கறவனுக்கு எல்லாம் மாசாமாசம் உதவித் தொகை என்னா? வயிறு எரியலையா சார்?’

‘நீங்க தப்பா இடத்துல தப்பான கேள்வியைக் கேக்கறீங்க. அரசுக்கு வரி கட்டறதுங்கறது உங்க கடமை. அது தனி. ஆனால், அந்த வரிப்பணத்தை சரியா பயன்படுத்தலை, ஏமாத்தறாங்க, ஊழல் செய்யறாங்கனு நினைச்சீங்கன்னா, அதைக் கேக்க வேண்டிய இடம் வேற. அதுதான் தேர்தல். இந்தத் தேர்தல்ல எப்படி ஓட்டு போட்டீங்க? பணம் கொடுத்தாங்களா?’

‘எங்க பக்கத்து ஊட்டுல எல்லாம் கொடுத்தாங்க. எங்க வீட்டுக்கு வரலை. கொடுத்தா கூட வாங்கியிருக்க மாட்டேன். என் மனச்சாட்சிப் படிதான் சார் ஓட்டு போடுவேன்.’

‘அதுதான் வேணும். அதுதான் முக்கியம். தனி மனித ஒழுக்கங்கறது அதுதான். அடுத்தவனை எப்போதும் மாத்தவே முடியாது. நம்மால மாற முடியும். நாமதான் நம்மை மாத்திக்கணும்.’

‘ஆனா சார், வரி கட்டறதால நமக்கு நேரடியா என்ன சார் பிரயோஜனம். கஷ்டப்படும் போது கவர்மெண்ட்டா வந்து காப்பாத்தபோவுது?’

‘இது சரியான கேள்வி. எப்படி கேக்கணும்னா.. நான் சம்பாதிச்சபோது, உனக்கு சந்தோஷத்தோட வரி கட்டினேன். நான் இப்போ வேலை இல்லாமல், உடம்பு சரியில்லாமல் படுத்து கெடக்கறேன். நீ என்ன காப்பாத்த வேண்டாமான்னு கேக்கணும். இதுதான் சோஷியல் செக்யூரிட்டி நெட்டின் ஆரம்பம்.’

‘அப்படின்னா?’

‘அமெரிக்காவுல வேலை போயிடுச்சுன்னா, வேலை போனவன் முதல்ல போய் கவர்மெண்ட்டுக்கிட்ட உதவிப் பணத்துக்கு அப்ளை பண்ணுவான். நான் சம்பாதிச்சபோது, உனக்குத்தானேப்பா எல்லாம் கொடுத்தேன், இப்போ என்னைக் காப்பாத்த வேண்டியது உன் கடமைன்னும் சொல்றது இது. கவர்மெண்ட்டும் கொடுக்கும். பல வளர்ந்த நாடுகள்ல இந்த சோஷியல் செக்யூரிட்டி உண்டு. நாம வளரும் நாடு. இன்னும் இங்கே வரலை.’

‘இங்கதான் ஊழல் செய்யறதுக்கும் புடுங்கித் திங்கறதுக்கும்தான் நேரம் சரியா இருக்கு, எவன் சார், நீங்க சொல்ற செக்யூரிட்டி எல்லாம் கொடுப்பான்?’

தெரியவில்லை. நாம் அப்படியே இருந்துவிட முடியாது. சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு துறைக்குள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் வருகின்றன. சிந்தனை ரீதியான மாற்றங்கள், உலக நாடுகளோடு ஒன்றிணைந்து வாழும்போது பெறும் பாடங்கள், படிப்பினைகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்கள் என்று பல முன்னேற்றங்களைப் பெற்று வந்திருக்கிறோம். ஆனால், மக்களின் அடிமனத்தில், இந்தியாவைப் பற்றிய, அதன் நிர்வாகிகளைப் பற்றிய, நிர்வாகம் பற்றிய ஐயங்கள் மிகுதியாக இருக்கின்றன.

நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் தனிமனித லாபங்களுக்காக அரசியலாளர்கள் செய்யும் இழிசெயல்களைப் பற்றி நிறைய பேசுகிறார்கள், அங்கலாய்க்கிறார்கள். இதெல்லாம் இந்தியாவையே ஒரு இழிவுநிறைந்த நாடாகத் தொடர்ந்து சித்திரித்தும் வருகிறது. இதில் உண்மையில்லாமல் இல்லை. அதேசமயம் இதுவே முழுமையான உண்மையும் இல்லை. ஒவ்வொரு வளரும் நாடும் சந்திக்கும் மிகப் பெரிய இடர்கள் இவை. ஊழல், தனிமனித பொருள் குவிப்பு, அதற்கு சமூகத்தைக் கெடுக்கும் மனப்போக்கு என்பவை எந்த வளரும் நாட்டிலும் காணக்கிடைக்கும் காட்சிகள்தான்.

இதுபோன்ற நாடுகளில், வளர்ச்சி அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடுவதில்லை. அல்லது வளர்ச்சி வருவதை எவ்வளவு தூரம் தள்ளிப்போட முடியுமோ அதைச் செய்யவும் செய்வார்கள். ஆனாலும் வளர்ச்சி வந்துவிடும்.

தவிர்க்க இயலாமல் அமெரிக்காவைத்தான் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுடைய இன்றைய வளர்ச்சிக்குப் பின்னே நானூறு ஆண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. அங்கேயும் இதுபோன்ற வளர்ச்சித் தடைகள் இருந்திருக்கிறது. எதிர்கருத்துகள் என்ற பெயரில் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைகள் இருந்திருக்கின்றன, ஊழல், சொத்துக்குவிப்பு, அடுத்தவர் மேல் தீராத கட்டுப்பாடு, அடிமைமுறை என்று எல்லா துன்பங்களும் அங்கே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னேற்றம் அங்குலம் அங்குலமாகத்தான் நடந்திருக்கிறது. பெரும் பாய்ச்சல்கள் தோன்றியதில்லை.
இந்தியாவிலும் இப்போது அதேபோன்ற நோய்கள்தான் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. சாதாரணர்கள் ஒரு பக்கம் அன்றாட வாழ்வுக்குத் துன்பப்பட, இன்னொரு பக்கம், தம் பேராசைக்கு முக்கியத் திட்டங்களை வளைத்துப் பெரும் பொருளைத் திரட்டிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

வளர்ச்சி வலி நிரம்பியது. குழந்தைகள் வளரும்போது, பின் இரவுகளில் கால்கள் வலிக்கும். உளைச்சல் எடுக்கும். ஓடியாடி விளையாடுகிறான், அதனால் வலிக்கிறது என்று நாம் நினைப்போம். உண்மையில், அது வளர்ச்சியின் வலி (Growing Pains). அந்த வலி, உள்ளுக்குள்ளே எலும்புகள் வளருவதை, கெட்டியாவதைக் குறிக்கும் வலி என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இந்தியா இப்போது இப்படிப்பட்ட வலியைத்தான் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.
இந்த வலிகள் இல்லாமல் வளர்ச்சி இல்லை. யாரும் சுலபமாக, இலக்கை அடைந்துவிட முடியாது. அதற்கான முனைப்பும் ஈடுபாடும் வேண்டும்.

இன்னும் ஐம்பது ஆண்டுகள், நூறாண்டுகள் கழித்து, இன்று நாம் குறை பேசும் பல விஷயங்கள், சரித்திரமாகி இருக்கும். இன்றைக்கு எப்படி நமக்கு காந்தியின் சுதந்திரப் போராட்ட வலி தெரியவில்லையோ, அப்படி, நமது சந்ததியினருக்கு இன்று நாம் அடைந்த வலிகள், வளர்ச்சிக்குக் கொடுத்த விலை, எதுவுமே தெரியாது. எல்லாமே தன்னால் இயற்கையாக வந்துவிட்டதாக அவர்கள் நம்பவே ப்ரியப்படுவார்கள். தம் முன்னோர்கள் பற்றிய அவர்களுடைய கற்பனைகள், மிகவும் கவர்ச்சிகரமாகவே இருக்கும். உயர்வாக இருக்கும்.

அந்த முன்னேற்றமும் கவர்ச்சியும் உயர்வும் சாத்தியப்பட வேண்டும் என்றால், இன்றைக்கு நம்மால் ஆனது, வளர்ச்சியின் வலிகளைப் பொறுத்துக்கொள்வதுதான். தனிமனித ஒழுக்கத்தைப் பேணுவதுதான். முடிந்த இடங்களில் எல்லாம் முன்னேற்றங்களை இருகை நீட்டி அணைத்துக்கொள்வதுதான். நாம் போகும் பாதை கரடுமுரடாகத்தான் தெரிகிறது. ஆனால், தூரத்தில் வெளிச்சப் புள்ளி நமக்காகக் காத்திருக்கவே செய்கிறது.

தொலைத்தொடர்பு கோபுரம்: ஒரு தொழில் வாய்ப்பு

Posted in தொழில் வாய்ப்புகள், பொருளாதாரம் on September 9th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
இந்தியாவில் டெலிகாம் துறை பல தொழில் வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருக்கும் பொருளாதாரச் சரிவிலும் வளர்ந்த ஒரு முக்கியத் துறை டெலிகாம். சி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம். இரண்டு மொபைல் சேவைகளும் ஒவ்வொரு மாதமும் வளர்ந்திருக்கின்றன. புதிய பயனர்கள் சேர்ந்துகொண்டே வருகிறார்கள். இன்றைய தேதியில் இந்தியாவில் மொபைல் பரவலாக்கல் (mobile penetration) 37%. அது இன்னும் மூன்றாண்டுகளில் 60 %ஐத் தொட்டும் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.
இதில் என்னைக் கவர்ந்த ஒரு விஷயம், மொபைல் போன்களுக்காக வைக்கப்படும் டவர்கள்தான். ஒவ்வொரு ஆபரேட்டரிடமும் அது இன்று ஒரு பிரிவாகி, தனியே லாபம் ஈட்டும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் மொபைல் டவர்கள் இருக்கின்றன. இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திடம் ஒரு லட்சம் டவர்களும், ரிலையன்ஸிடம் 33,000 டவர்களும் டாட்டாவிடம் 30,000 டவர்களும் இருக்கின்றனவாம். 2012க்குள் இந்தியாவில் 4 லட்சம் டவர்கள் வரை தேவைப்படும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
ஒரு மொபைல் டவர் அமைக்க, 22 முதல் 25 லட்சம் வரை செலவாகிறது. ஒவ்வொரு டவரையும் வாடகை, மின்சாரம் ஆகியவற்றோடு பராமரிக்க, ஒரு மாதத்துக்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் தமக்கான டவர்களை அமைப்பதில் ஈடுபாடு காட்டின. பின்னர் தான் அதன் சூட்சுமம் புரிய ஆரம்பித்தது. ஒரு டவரை  நான்கு டெலிகாம் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். ஒவ்வொருவரும் தத்ததமது சிக்னல்களைப் பெற, அனுப்ப இந்த டவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அவ்வளவுதான். திடீரென்று, டெலிகாம் டவரில் உள்ள வணிக வாய்ப்பு பளிச்சென்று தெரிய ஆரம்பித்துவிட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தனது டவர் தொழிலைப் பிரித்து தனித் தொழிலாக்கிவிட்டது : ரிலையன்ஸ் இன்ஃப்ரா. டாட்டாவும் அப்படியே. ஏற்கெனவே பெரிய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வொடஃபோன், ஐடியா ஆகியவை இணைந்து இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தைத் தனியே நிறுவிவிட்டன.
இன்றைக்கு எந்த ஒரு புதிய டெலிகாம் நிறுவனம் தனது சேவையை இந்தியாவில் தொடங்கவேண்டும் என்றாலும் அடுத்த இரண்டாவது, மூன்றாவது மாதத்தில் தொடங்கிவிடலாம். நேரடியாக டவர்கள் வாடகைக்கு கிடைக்கும்.
இதில் எங்கே தொழில் வாய்ப்பு என்கிறீர்களா? உங்கள் வீட்டு மொட்டை சும்மா இருக்கிறதா? எங்கோ ஊருக்கு வெளியே நிலத்தை வாங்கிப் போட்டுவிட்டு சும்மா வைத்திருக்கிறீர்களா?  பயிரே இல்லாமல் உங்கள் பூமி கரம்பாகக் கிடக்கிறதா? பக்கத்தில் ஐந்நூறு அடி சுற்றளவுக்குள் எந்த ஒரு டவரும் கண்ணில் தட்டுப்படவில்லையெனில், தாராளமாக நீங்கள் இந்த டவர் கம்பெனிகளை அணுகலாம்.
எனக்குத் தெரிந்த ஃப்ளாட்டுகளின் தலைமேல் டவர்கள் முளைத்திருக்கின்றன. அந்த ஃப்ளாட்டுகளில் மெயிண்டெனென்ஸ் செலவே கிடையாது. டவர் வாடகையை வைத்துக்கொண்டே, ஃப்ளாட் முழுவதும் வெள்ளையடித்தவர்கள் உண்டு. குறைந்தபட்சம் மாதம் 15,000 முதல் வாடகை நிச்சயம். இடத்தைப் பொறுத்து இது கூடவும் செய்யும்.
அடுத்த ஒன்று, ஒன்றரை ஆண்டுகளில் இந்த டவர் கம்பெனிகள் பங்குச் சந்தையில் பணம் திரட்ட கண்டிப்பாக வரும். ஏற்கனவே இண்டஸும் ரிலையன்ஸ் இன்ஃப்ராவும் வரவிருந்தன. பொருளாதாரச் சரிவால், அவை தடைபட்டிருக்கின்றன. பங்குச் சந்தைக்கு வரும்போது, இந்த டவர் கம்பெனிகளின் பங்குகளை வாங்கி வையுங்கள். உங்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, உங்கள் பிள்ளைகளுக்குப் பயன்படும். அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளில் டெலிகாம் துறையின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கப் போவது உறுதி. அதில் கோபுரங்களும் கொஞ்சம் குளிர்காயும்.

டிப்பிங் பாயிண்ட்

Posted in சிறுதொழில், பொருளாதாரம் on September 2nd, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
நான் பூனா போனபோதுதான், இந்த இட்லி மாவை பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்யும் முறையைப் பார்த்தேன். மும்பையிலும் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் வாசலில், மாவு பாக்கெட்டுகளை விற்க ஆரம்பித்திருந்தார்கள். பெரும்பாலும் தமிழ் பையன்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். பக்கத்திலேயே ஒரு கிரைண்டர். மாவு அரைக்க அரைக்க, ஒரு கிலோ அரை கிலோ பாக்கெட்டுகளில் போட்டு கட்டி வைப்பார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே பாக்கெட்டுகள் காணாமல் போய்விடும். ஒரு கட்டத்தில், இட்லி மாவோடு, கெட்டி சட்னி, அடை மாவு போன்றவற்றையும் பாக்கெட்டுகளில் போட்டு விற்க ஆரம்பித்தார்கள்.
அந்தச் சமயத்தில் சென்னை வந்தபோது, இங்கேயும் இட்லி மாவு விற்கும் பழக்கம் கடைகளில் தொடங்கியிருப்பதைப் பார்த்தேன். தாயார் இட்லி மாவு என்று பிராண்டுதான் இங்கே சென்னையில் கிடைத்தது. காலையும் மாலையும் இந்த இட்லி மாவு பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து கடைகளில் நிரப்பிக்கொண்டு இருந்தார்கள். இட்லி மாவுக்கு இப்படி ஒரு டிமாண்ட் உருவாகும் என்று யாரும் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால், வீட்டில் கஷ்டப்பட்டு இட்லி மாவை அரைப்பதைவிட, கடைகளில் வாங்கி இட்லியோ தோசையோ செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் இருந்திருக்கிறது. அதற்கான ஒரு வாய்ப்பு அதுவரை இல்லாமல் இருந்தது. வாய்ப்பு கிடைத்தவுடன் இட்லி மாவு பிசினஸ் சென்னையில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது. பெண்கள் இதுவரை இட்லி மாவு அரைக்க அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது, இட்லி மாவு சேல்ஸைப் பார்த்தே நாம் தெரிந்துகொள்ளலாம்.
இன்று தாயார் இட்லி மாவுடன் வேறு சில பிராண்டுகளும் சந்தையில் வந்துவிட்டன. ஒரு கிலோ ரூ.20க்கு விற்கப்படும் இந்த மாவு அதிகபட்சம் இரண்டு நாள்கள் தாங்குகின்றன. அப்புறம் புளிப்பு வாசனை வந்துவிடுகிறது. சந்தைக்கு வந்தவுடனே விற்றுத் தீரும் உணவுப் பொருளாக இட்லி மாவு இருப்பதால், தேங்கிப் போகவே வாய்ப்பில்லை.
இன்றைக்கு இந்த இட்லி மாவு பிசினஸுக்குள் பெரும்போட்டி முளைத்திருக்கிறது. ரூ. 7, ரூ.15 ஆகிய விலைகளில் உள்ளூர் பெண்களே இட்லி மாவு தயாரித்து, பக்கத்தில் இருக்கும் கடைகளில் கொண்டு போய் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இட்லி மாவு இதற்கு முன்னாலும் இருந்ததுண்டு. மாவு அரைத்துத் தரும் கடைகளை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். வீட்டில் கிரைண்டர் இல்லாத பெண்கள், ஈர அரிசியையும் ஈர பருப்பையும் மாவு மெஷினுக்குப் போய் வைத்துவிட்டு வருவார்கள். அவர்களும் அரைத்துக் கலந்துதருவார்கள். ஆனால், இட்லி மாவுக்கான ஒரு டிப்பிங் பாயிண்ட் எங்கோ இருந்திருக்கிறது.
கடைகளில் இட்லி மாவு வாங்குவது ஒருவகையில் கெளரவக் குறைச்சல் என்று கருதப்பட்ட காலம் போய்விட்டது. வேலைக்குப் போகும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. முதல் நாள் இட்லி, இரண்டாம் நாள் தோசை, மூன்றாம் நாள் ஊத்தப்பம் என்று மாவைக் காலி செய்வதற்கு பதில் அவ்வப்போது ஃபிரெஷ்ஷாக வாங்கி இட்லியோ தோசையோ செய்துகொள்வது ஒரு தேவையாக உருவெடுத்திருக்கிறது. விளைவு, இன்று இட்லி மாவு பல நூறு குடும்பங்களில் வாழ்வதற்கான ஆதரமாக ஆகியிருக்கிறது.
இன்னும் பூனா, மும்பை போல் ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமெட் இட்லி, ரெடிமேட் வடை ஆகியவை சென்னைக்கு வரவில்லை. விரைவில் வந்துவிட வாய்ப்புண்டு.
சென்னையில் புதிதாக முளைத்துள்ள இன்னொரு தொழில், பெண்கள் கைகளுக்கு மெஹந்தி போடுவது. முன்பெல்லாம், பெண்கள் திருமணங்களுக்கு மருதாணி வைத்துக்கொள்வார்கள். மொத்தை மொத்தையாக கைநிறைய அப்பிக்கொண்டிருந்த கல்யாணப் பெண்கள் உண்டு. அதிலேயே டிசைன்கள் வரைந்த அந்தக் காலத்துக் கில்லாடிகளும் உண்டு.
இன்றோ, மெஹந்தி கோன் என்று ஒன்று கடைகளில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. ஐஸ்கிரீம் கோன் வடிவில், உள்ளே மருதாணியை அடைத்து ஒரு கோன் ரூ. 5க்கு விற்பனை செய்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள், திருமணத்துக்குத் தயாராகும் பெண்கள் அதை வாங்கி தாங்களே தங்களுக்குத் தெரிந்த டிசைகள், அல்லது புத்தகங்களைப் பார்த்து டிசைன்கள் வைத்துக்கொண்டு இருந்தார்கள்.
இங்கேயும் ஒரு டிப்பிங் பாயிண்ட் இருக்கிறது. அதுவரை ஒருமாதிரி அடக்கமாக இருந்த விஷயம் இன்று சட்டென ஃபாஷனாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது.
தி.நகர் பனகல் பார்க் பக்கம் போய் பாருங்கள். காலையில் இருந்து இரவு வரை மெஹந்தி வைத்துவிடவென்றே ஒரு பெரிய கும்பல் உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. குட்டி குட்டி சேர்கள் போட்டு பெண்களின் கைகளிலும் கால்களிலும் மெஹந்தி ராஜாங்கமே நடத்துகிறார்கள். சின்னப் பெண்களில் இருந்து பெரியவர்கள் வரை அங்கே அலைமோதுகிறார்கள். உள்ளங்கை மட்டும் வைத்துவிட ஒரு ரேட், புறங்கையும் வைக்க ஒரு ரேட், முன்கை முழுக்க வைத்துவிட ஒரு ரேட், காலில் வைத்துவிட ஒரு ரேட். அசாத்திய ஸ்பீடில் வேலை செய்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் பரபரவென கைகளில் கோலம் போட்டு அனுப்பிவிடுகிறார்கள். எல்லோரும் மார்வாடி, சிந்தி, குஜராத்தி பையன்கள்.
வீட்டுக்கே வந்து மெஹந்தி வைத்து விட தனி ரேட். கல்யாணப் பெண்ணுக்கான மெஹந்தி என்றால் அதற்குத் தனி ரேட்.
மருதாணி வழக்கொழிந்து போன ஒரு காலம் உண்டு. நெயில் பாலீஷ் கொடிகட்டிப் பறந்தது அப்போது. ஆனால், பெண்கள் மனத்தில் உள்ளூர மருதாணிக்கு இருந்த கவர்ச்சி மங்கவே இல்லை. அது இப்போது மெஹந்தி வடிவத்தில் நவீன புத்துயிர் பெற்றிருக்கிறது.
ஆட்டுக்கல்லில் அரைத்து, பின் மிக்ஸியிலும் கிரைண்டரிலும் அரைத்து இட்லி சுட்ட காலம் போய், பிட்சாவும் பர்க்கரும் ஹாட் டாக்கும் தமிழர்கள் சாப்பிட்டார்கள். ஆனால் உள்ளூர இடலிக்கு இருந்த மெளசு குறையவே இல்லை. இன்று இட்லி மாவு வேறு வடிவத்தில் மீண்டு புத்துயிர் பெற்றிருக்கிறது.
தேவைகள் அப்படியேதான் இருக்கின்றன. வடிவங்கள் மாறுகின்றன. எல்லாவற்றுக்கும் ஒரு டிப்பிங் பாயிண்ட் வரவேண்டும்.

தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்

Posted in பதிப்பகம், பொருளாதாரம் on August 26th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments

I.

தமிழ்ப் பதிப்புலகம் பற்றி வேற்று மொழியைச் சேர்ந்த பதிப்பாளர்களிடமோ, எழுத்தாளர்களிடமோ பேசும்போது, ஒரு பிரச்னையைத் தொடர்ந்து சந்திப்பேன். உங்கள் மார்க்கெட் சைஸ் என்ன? எவ்வளவு பதிப்பாளர்கள் இருப்பார்கள்? தமிழ் பதிப்புத் தொழிலின் மொத்த டர்ன் ஓவர் என்ன? வளர்ச்சி விகிதம் என்ன? எப்படி விலை வைப்பார்கள்? நிகர லாபம் எவ்வளவு சதவிகிதம் இருக்கும்? முதல் பதிப்பு எவ்வளவு வெளியிடுவீர்கள்? ஒரு சாதாரண புத்தகம் ஓராண்டுக்குள் தோராயமாக எத்தனை படிகள் விற்பனையாகும்?

தமிழைப் பொறுத்தவரை, பதிப்புத் தொழில் என்பது இனிமேலும் குடிசைத் தொழில் அல்ல. அது ஒரு இண்டஸ்ட்ரி என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. பதிப்புத் தொழிலை நம்பி நிறைய துணைத் தொழில்கள் தோன்றியிருக்கின்றன. பெரிய அளவில் மூலதனம் போட்டு, பிரிண்டிங் மெஷின்கள் வாங்கிப் போட ஆரம்பித்துவிட்டார்கள். டைப் செட்டிங், ஃபிலிம் எடுத்தல், பைண்டிங் என்று பல தொழில்கள் வளர்ந்திருக்கின்றன. நல்ல புத்தகம் போட்டு, நல்லபடியாக மார்க்கெட் செய்பவர்கள் யாரும் இந்தத் தொழிலில் தோற்றதில்லை. ஒரு சில ஆர்வக்கோளாறு ஆசாமிகள் வேண்டுமானால், கையைச் சுட்டுக்கொண்டு இருக்கலாம். அது தனிக் கதை. இப்போது தமிழ்ப் பதிப்புத் தொழிலின் அளவு பற்றி மட்டும் பேசுவோம்.

தமிழ் பதிப்புலகின் மார்க்கெட் சைஸ் என்ன? இது சம்பந்தமாக ஏதும் ஆய்வுகள் நடந்திருக்கின்றனவா என்று தேடிப்பார்த்தேன். என் பார்வையில் அப்படி ஏதும் தென்படவில்லை. மேலும் மேலே எழுப்பிய பல கேள்விகளுக்கு தீர்மானமான பதில்கள் கிடைக்கவில்லை. இல்லை என்பதற்காக விட்டுவிட முடியாது அல்லவா? ஏதேனும் ஒரு புள்ளியில் தொடங்கித்தான் ஆகவேண்டும். கிழக்குப் பதிப்பகத்தில் பணியாற்றிவிட்டு, இப்போது ஆப்பிள் புக்ஸில் பணியாற்றும் நண்பர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர் விக்ரம் சதீஷ் மற்றும் நான் ஆகிய மூவரும் சேர்ந்து தமிழ்ப் பதிப்புலகின் சைஸையும் இன்ன பிற தகவல்களையும் ஒன்றிணைக்க ஆரம்பித்தோம். விவரங்கள் இப்படி இருக்கின்றன.

1. தோராயமாகத் தமிழ்ப் பதிப்புலகின் மார்க்கெட் சைஸ் – 80 கோடி.
2. ஆக்டிவ்வான பதிப்பாளர்கள் – 175 (மொத்தம் எவ்வளவு பதிப்பாளர்கள் என்று கணக்கு தெரியவில்லை). இவர்கள் பபாசி எனப்படும் பதிப்பாளர் விற்பனையாளர் கூட்டமைப்பிலும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
3. கடந்த ஐந்து ஆண்டுகளில், Compounded Annual Growth Rate (CAGR) – 12 % – 13%.
4. பதிப்பாளர்களுக்கு எல்லா செலவுகளும் போக நிகர லாபம் – 12% – 15%.
5. இனி பதிப்பாளர்களை அவர்களுடைய டர்ன் ஓவர்க்கு ஏற்ப பல்வேறு அடுக்குகளில் பிரிக்கலாம். இது முற்றிலும் எங்கள் அனுமானம். எந்தப் பதிப்பாளரும் தம் ஆண்டு விற்பனையை வெளியிடுவதில்லை. பதிப்பாளர்களின் புத்தகப் பட்டியலை வைத்துக்கொண்டு, புத்தகங்களின் விலையை வைத்துக்கொண்டு, அவரவர்களுடைய பெஸ்ட் செல்லர் விற்பனையை வைத்துக்கொண்டு, இந்த அடுக்குகளுக்குள் பதிப்பாளர்களைப் பொருத்தியிருக்கிறோம். இது முற்றிலும் தவறாக இருக்க வாய்ப்பில்லை.

அ) ரூபாய் ஐந்து கோடி வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1.என்.சி.பி.எச்., 2. விகடன் பிரசுரம், 3. கண்ணதாசன் பதிப்பகம், 4. கிழக்கு பதிப்பகம், 5. ராமகிருஷ்ணா மடம்

ஆ) ரூபாய் இரண்டு கோடி வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1. வானதி பதிப்பகம், 2. கலைஞன் பதிப்பகம், 3. நர்மதா பதிப்பகம், 4. தி அலையன்ஸ் கம்பெனி, 5. மணிமேகலை பிரசுரம், 6. திருமகள் நிலையம், 7. நக்கீரன் பதிப்பகம், 8. பாரதி புத்தகாலயம், 9. சுரா புக்ஸ்

இ) ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1. பாரி நிலையம், 2. வர்த்தமானன் பதிப்பகம், 3. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 4. மணிவாசகர் பதிப்பகம், 5. கவிதா பப்ளிகேஷன்ஸ், 6. தமிழ் புத்தகாலயம், 7. லிஃகோ, 8. அருணோதயம்

ஈ) ரூபாய ஐம்பது லட்சம் வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1.பழனியப்பா பிரதர்ஸ், 2. பூம்புகார் பதிப்பகம், 3. ஸ்ரீசெண்பகா, 4. மீனாட்சி புத்தக நிலையம், 5. ஐந்திணை, 6. காலச்சுவடு, 7. காவ்யா, 8. சந்தியா, 9. உயிர்மை, 10. அடையாளம்

உ) ஐம்பது லட்ச ரூபாய் வரை விற்பனை செய்பவர்களை இன்றும் மூன்றாகப் பிரிக்கலாம். பத்து லட்சம் ஒரு அடுக்கு, 25 லட்சம் வரை ஒரு அடுக்கு, 50 லட்சம் வரை மற்றொரு அடுக்கு என்று பிரிக்க முடியும்.

6. தமிழகம் எங்கும் சின்னதும் பெரியதுமாக கிட்டத்தட்ட 500 புத்தகக் கடைகள் இருக்கின்றன.
7. விற்பனைக் கழிவு – 25 % – 40 % வரை.
8. கிரெடிட் பீரியர் – 90 – 120 நாட்கள் (சில சமயங்களில் 180 நாள்கள் வரை போவது உண்டு)
9. புத்தக விலை – அடக்கவிலை போல் மூன்றில் இருந்து நான்கு மடங்கு (இங்கிலாந்து ஆங்கிலப் பதிப்பகங்களில் இதுவே பத்து மடங்கு!)
10. எழுத்தாளர் ராயல்டி – புத்தக விலையில் 7.5% – 10%.
11. சென்னை, ஈரோடு, மதுரை, நெய்வேலி ஆகிய இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன.
12. பெரிய புத்தகக் கடைகளான லேண்ட்மார்க்கோ, ஒடிசியோ, ஹிக்கின்பாதம்ஸோ, கிராஸ்வேர்ட்டோ தமிழ் புத்தகங்கள் அதிக அளவில் வைக்க ஆர்வம் காட்டுவதில்லை.
13. சமீப ஆண்டுகளாக ஆங்கிலப் பதிப்பகங்கள் தமிழில் காலவைக்க விரும்புகின்றன. ஜெய்கோ புக்ஸ், விவா புக்ஸ் ஆகியவை தாமே தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளியிடுகின்றன. சேஜ் புக்ஸ் விகடன் பிரசுரத்தோடு சேர்ந்து புத்தகங்கள் போடுகின்றன. வெஸ்ட்லாண்ட், பான், பியர்சன் ஆகியவை கிழக்கு பதிப்பகத்தோடு இணைந்து புத்தகங்கள் வெளியிடுகின்றன.
14 மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு தமிழ் புத்தகங்களை வாங்கி ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் இனப் பிரச்னை உச்சகட்டத்தை அடையும் முன்பு, அங்கும் தமிழ் புத்தகங்களின் ஏற்றுமதி நடைபெற்று வந்தது.
15. தமிழக அரசு வருடத்துக்கு ஒருமுறை, நூலகத் தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும் நூல்களில், 1000 படிகள் வாங்குகிறது. ஃபாரம் இவ்வளவு விலை என்ற கணக்கில் அரசு நூலகங்களுக்கு நூல்களை வாங்குகிறது. டெம்மி 1/8 நூல் – ஃபாரத்துக்கு ரூ.3.10, கிரவுன் 1/8 நூல் – ஃபாரத்துக்கு ரூ. 2.90. பல ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த இந்த விலை இன்னும் ஏற்றப்படவில்லை.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் நடந்த முக்கிய மாற்றம், வாசிப்புப் பழக்கம். பல சிறு நகரங்களில் கூட, ஊர்களில் கூட, காசு கொடுத்து புத்தகம் வாங்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது நடுவே கடந்த ஓராண்டுக்கும் மேல் பொருளாதார சரிவு வேறு ஏற்பட்டிருக்கிறது. பல பதிப்பகங்கள் இதன் பாதிப்பை உணர்ந்திருக்கின்றன. விகடன் பிரசுரம் புத்தகங்கள் வெளியிடும் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. கிழக்கு பதிப்பகம் இதையே வேறு மாதிரி அணுகியிருக்கிறது. ரூ.25 விலையில் ஒரு சந்தை இருப்பதைப் புரிந்துகொண்டு பல நூல்களை இதே விலையில் வெளியிட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கான கேக் புக்ஸ், ஓவியப் புத்தகங்கள் ஆகியவற்றையும் கிழக்கு வெளியிட்டு இருக்கிறது. மற்றொரு புறம், நிறைய மொழிபெயர்ப்பு நூல்களில் கவனம் செலுத்தி வருகிறது.

இன்னொரு வகையில் பார்த்தால், பொருளாதாரச் சரிவு காலம்தான், புதிய தொழில்களில் ஈடுபட உகந்த காலம். ஆழி பதிப்பகம் இதைப் புரிந்துகொண்டு இருக்கிறது. நாகார்ஜுனனின் நளிர் மாதிரியான குண்டு புத்தகங்களோடு பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் இந்தப் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. இன்னும் எண்ணி, ஐந்தாவது மாதத்தில் சென்னை புத்தகக் காட்சி வந்துவிடும். 2009 புத்தகக் காட்சி பெரிய சுவாரசியம் இல்லாமல் இருந்தது. 2010 காட்சி எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.

II.

நீண்ட கால அளவில், ஒரு சில விஷயங்கள் தமிழ் பதிப்புலகில் நடக்க வேண்டும். நடக்கும் என்றே நினைக்கிறேன். எல்லோரும் புத்தகம் போடுகிறார்கள். நல்ல புத்தகங்களைத் தேடி வெளியிடும் முனைப்பும் முன்பை விடக் கூடுதலாகியிருக்கிறது. ஆனால், விற்பனை செய்யும் முனைப்பு மட்டும் இங்கே குறைவு. மார்க்கெட்டிங்க், விளம்பரம் ஆகியவற்றில் செலவு செய்வதை விட, அடுத்த அடுத்த புத்தகங்களைப் போட்டுவிடலாம் என்பது பதிப்பகங்களின் எண்ணம். நல்ல எழுத்து எப்படியிருந்தாலும் விற்கும், அதற்கு சந்தைப்படுத்தும் முயற்சியே தேவையில்லை என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இதைத்தான் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்று சொல்வது.

நல்ல மார்க்கெட்டிங்கும், நல்ல விநியோகமும் இல்லை என்றால், நல்ல புத்தகம் கூட குடோனில்தான் தூங்க நேரிடும்.

ஆங்கில புத்தகங்களுக்கு இருப்பது போல் விரிவான விநியோகஸ்தர்கள் நெட்வொர்க் தமிழ்ப் புத்தகங்களுக்கு வர வேண்டும். பதிப்பாளர்கள் நல்ல புத்தகங்களைத் தேடிப் போக, விநியோகஸ்தர்கள், விற்பனையை மேம்படுத்தும் சூழல் வரவேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய பல விநியோகஸ்தர்கள், புத்தகங்களை விற்பனை செய்வதில் பெரிய முனைப்பு காட்டுவதில்லை. தமிழின் முன்னணி பதிப்பகங்கள், தாங்களே விநியோகஸ்தர்களாக மாறினால் மிகவும் நல்லது.

இரண்டாவது, தமிழ்ப பதிப்புலகில் ஒரு வகையான கண்சாலிடேஷன் ஏற்பட வேண்டும். எண்ணற்ற சின்ன பதிப்பகங்கள் இருக்கின்றன. அவர்களால், அற்புதமான புதிய எழுத்தாளர்களையும் புதிய படைப்புகளையும் இனம் காண முடிகிறது. புத்தகம் வெளியிட முடிகிறது. ஆனால், விற்பனையில் பெரிய எண்ணிக்கை வருவதில்லை. பெரிய பதிப்பகங்கள், இந்தப் புதிய எழுத்தாளர்களையும் படைப்புகளையும் இனம் காணுவதில்லை. அவர்களுடைய வேகப் பார்வையில் இவர்கள் படுவதே இல்லை.

ஆங்கிலத்தில் முன்பு ரவி தயாள் பப்ளிஷர்ஸ் என்றொரு பதிப்பகம் இருந்தது. ரவி தயாள்தான் எல்லாம். அவரே புதிய எழுத்தை இனம் காணுவார். எழுத்தாளரைத் தூண்டி எழுத வைப்பார். எடிட் செய்வார். நல்ல அழகான அச்சில் புத்தகம் போடுவார். விற்பனை உரிமையை, ஓரியன்ட் பிளாக்ஸ்வானிடம் கொடுத்துவிடுவார். விற்பனைக்கு விற்பனையும் ஆச்சு. நல்ல புத்தகமும் வெளியாச்சு. கல்கத்தா குரோமோஸோம், ஷேடோ லைன்ஸ் போன்ற நூல்களையும் அமிதவ் கோஷ் போன்ற முன்னணி எழுத்தாளர்களையும் வெளிக்கொணர்ந்தவர் இவர்தான். குஷ்வந்த சிங்கின் மாப்பிள்ளை. ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸில் எடிட்டராக மும்பையில் இருந்தவர். பின்னர் சென்னை ஓ யு பியை உருவாக்கினார். அப்புறம் தில்லிக்குப் போய் ஓ யு பி யின் தலைமை நிர்வாக அலுவலராக பல ஆண்டுகள் இருந்தவர். 2006ல் தவறிவிட்டார் ரவி தயாள்.

தமிழில் மருதா என்றொரு பதிப்பகம் இருக்கிறது. மருதா வெளியிட்ட ஒவ்வொரு நூலும் கவனத்தைக் கவருபவை. சரியான படைப்பை, நல்ல எழுத்தை இனம் காணுவதில் மருதா பாலகுருவுக்கு ஒரு சுவை, ரசனை இருக்கிறது. ஆனால், விற்பனை? பெரிய எண்ணிக்கையில் இருக்குமா என்று தெரியவில்லை. மருதா ஒரு உதாரணம்தான். கருப்பு பிரதிகள், பரிசல், நிழல் போன்ற பதிப்பகங்கள் இப்படி பல நல்ல நூல்களை வெளியிட்டிருக்கின்றன. இதுபோல் மேலும் பலர் இருக்கக்கூடும்.

இதுபோன்ற கன்சாலிடேஷன்களும் விநியோகஸ்தர்கள் நெட்வொர்க்கும் அதிகமாகும்போதுதான், தமிழ் பதிப்புலகம் மேலும் விரிவடையும். புத்தகங்கள் மேன்மேலும் அனைத்து இடங்களில் போய் சேர சேரத்தான் புதிய வாசகர்கள் உருவாவார்கள். இது ஒரு சக்கிரம். சுழன்றுகொண்டே இருக்க வேண்டியது தான் இதில் மிகவும் முக்கியம்.

பதிலற்ற கேள்வி – எதிர்வினை 3

Posted in கடிதங்கள், பொருளாதாரம் on August 18th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments
அன்புள்ள வெங்கடேஷ்
உங்கள்  பதிலற்ற கேள்விகள் படித்தேன் மிகவும் சிறப்பானதாக இருந்தது.  சில கேள்விகளுக்கு பதில் தேவைபடுகிறது. மத்திய அரசோ மாநில அரசுகளோ ஏழைகளுக்குப் பயன்படும் விவசாய, உர மானியங்களை வழங்கக்வேண்டும் என்பதற்கு  ஏதேனும் வரை முறைகள் உள்ளனவா. இன்றளவில் ஏழை விவசாயிகள் யார். எல்லோரும் விவசாய கூலி தொழிலாளிகள்தானே. அரை ஏக்கர் முக்கால் ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகள் யார். சிறு விவசாயிகளை சுறா மீன்கள் விழுங்கி ஏப்பம் விட்டாயிற்று. விவசாயம் இன்று கார்பொரட் தொழில் ஆகி விட்டது. கலர் டிவி இலவசம், படங்களுக்கு தமிழில் பெயர்வைத்தால் மானியம் இப்டியே  போய்கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் என்னாவது. வேறு எந்த நாடாவது இந்தளவுக்கு மானியம் கொடுக்கிறதா. என்னை பொறுத்தவரை மானியம் கொடுப்பது தவறில்லை அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை கேள்வி.
பாலாஜி
நைஜீரியா
பாலாஜி,
மானியம் கொடுப்பதில் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டதற்கு முதல் நன்றி. நீங்கள் எழுப்பியிருக்கும் அடிப்படைக் கேள்விக்கு வருவோம். யாருக்குக் கொடுப்பது? நமது நாடு, சிங்கப்பூர் மாதிரி சின்ன நாடு அல்ல. சிங்கப்பூரில் பிறக்கும் குழந்தைகளை தொடர்ந்து டிராக் செய்ய முடியும். அது வளர்ந்து பெரியவனாகி, வேலைக்குப் போய், தொழில் செய்து, திருமணம் செய்துகொள்வது போன்று பல்வேறு காலகட்டங்களில் அந்தக் குடிமகனுக்கு என்னாயிற்று என்று அரசினால் சொல்ல முடியும். உதவிகள் செய்ய முடியும். பாதுகாக்க முடியும். அமெரிக்காவில் சோஷியல் செக்கியூரிட்டி கருத்து உண்டு. வேலை இல்லை என்றால், அரசிடம் போய் உபகாரத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதெல்லாம், தகவல்களைக் கணினிமயப்படுத்துதல், சென்சஸ், நிர்வாகம் போன்ற துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியின் பயன்கள்.
இந்தியாவோ வளரும் நாடு. இங்கே இப்போதுதான் ஒவ்வொரு துறைக்குள்ளும் கணினி புக ஆரம்பித்திருக்கிறது. சென்னை மாநகராட்சியில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை நீங்கள் ஆன்லைனிலேயே டவுன்லோட் செய்துகொள்ளலாம். என் முதல் மகள் பிறந்தபோது, அவளது பிறப்புச் சான்றிதழ் இரண்டு காப்பி வாங்க, லஞ்சம் கொடுத்தது நினைவு இருக்கிறது. இன்றைக்கு, பிடிஎஃப் கோப்பாக தரவிறக்கம் செய்துகொண்டு எத்தனை பிரிண்ட் அவுட்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். வருமானவரியை கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஒரு டேக்ஸ் கண்சல்டண்ட்டையும் அணுகாமல், ஆன்லைனிலேயே பூர்த்தி செய்து,  தாக்கல் செய்திருக்கிறேன். பத்திரப் பதிவுத் துறையில், இ.சி. எனப்படும் என்கம்பரன்ஸ் சர்டிபிகேட்டுக்கு நீங்கள் ஆன்லைனிலேயே அப்ளை செய்ய முடியும். கடந்த ஐந்து மாதங்களாக, மின்சார பில்லை ஆன்லைனில்தான் நான் கட்டி வருகிறேன். தமிழ்நாடு மின்சார வாரியம் அதற்கென மிக எளிமையான, உபயோகமான வலைதளத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது.
இதுதான் ஆரம்பம். இந்தியக் குடிமகனின் ஒவ்வொரு தேவையும் ஏதோ ஒரு நிரலில் போய் பதிவு ஆகவேண்டும். ஆகும். ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. அது கிரெடிட் கார்டாக இருக்கலாம். ரேஷன் கார்டாக இருக்கலாம். பாஸ்போர்ட்டாக இருக்கலாம். ஃபாரம் 16 ஆக இருக்கலாம். தொலைபேசி பில்லாக இருக்க்லாம். நிலம் வாங்கும், விற்கும் பத்திரமாக இருக்கலாம். வீட்டு வரி, தண்ணீர் வரியாக இருக்கலாம், டிரைவிங் லைசென்ஸாக இருக்கலாம். தனித்தனியாக இறைந்து கிடக்கும் இதுபோன்ற பல்வேறு தகவல்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஒன்றிணைந்த தகவல்களை எல்லாம் சின்ன சிப்பில் சேமித்து, உங்களுக்கு என்று, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஓர் எண்ணும், ஓர் அடையாள அட்டையும் வழங்கப்பட வேண்டும். இதைத்தான் இப்போது நந்தன் நீலகேனி யுனீக் ஐடெண்டிபிகேஷன்ஆஃப் இந்தியாவில் செய்ய இருக்கிறார். 2011க்குள் இதைச் செய்து முடிக்கவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை. சரியான வழியில் எடுக்கப்பட்டிருக்கும் சரியான முன்முயற்சி இது.
சரி, இந்த அடையாள எண் / அட்டை வந்துவிட்டால் என்னாகும்? நீங்கள் மேலே கேட்ட கேள்வியான “யாருக்குக் கொடுப்பது?” என்பதற்கு விடை கிடைக்கும். எனக்கு மானியம் கொடு என்றோ, எனக்குச் சலுகை தா என்றோ எல்லோராலும் போய் அரசிடம் நிற்க முடியாது. உங்கள் ஜாதகமே உங்கள் அடையாள எண்ணில் / அட்டையில் பொதிந்திருக்கும்போது, உங்கள் கோரிக்கையின் உண்மை துலங்கிவிடும்.
இத்தனை ஆண்டுகள் நாம் ஏன் இதைச் செய்யவில்லை? நாம் ஏன் பின்தங்கி இருக்கிறோம், எவ்வளவு பொருளாதார நஷ்டம் தெரியுமா என்றெல்லாம் கேள்விகள் கேட்பதில் அர்த்தமில்லை. வளர்ச்சி, சமூகத்துக்குச் சமூகம் வேறுபடும். அது மெல்லத்தான் வரும். வந்தபின், அதன் பயன்கள் புரிந்தபின், நாம் வந்த பாதையை முழுவதும் மறந்தே போய்விடுவோம். மற்றதெல்லாம் சரித்திரமாகிவிடும்.
நேசமுடன்
வெங்கடேஷ்

===========

பதிலற்ற கேள்விகள்

Posted in நேசமுடன், பொருளாதாரம் on August 14th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment
ஒவ்வொரு பிரச்னையும் ஒவ்வொரு பாடத்தைச் சொல்லிக்கொடுக்கின்றன. அந்தப் பிரச்னை வரும்வரை, அதற்கு முன்பு இருந்த மெய்மையையே நம்பிக்கொண்டு இருப்பதும், பிரச்னை வந்து தாக்கியபின் பிறிதொரு மெய்மை துலங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. பொருளாதாரம், வளர்ச்சி, பங்குச் சந்தை, முதலீடு தொடர்பாக இருந்த என்னுடைய பல எண்ணங்களை, கருத்துகளை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் பொருளாதாரச் சரிவு மாற்றியமைத்துவிட்டது. மாற்றி அமைத்துவிட்டது என்பதைவிட, வேறு மெய்மைகளைப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதாரச் சரிவு விரைவில் முடிவுக்கு வரும் போல் தோன்றவில்லை. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஏதேனும் ஒரு அறிக்கை கொஞ்சம் தைரியமும் உற்சாகமும் கொடுக்கும். அடுத்த வாரமே மற்றொரு அறிக்கை வெளியாகி, முந்தைய நம்பிக்கையை எல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விடும். அமெரிக்காவைப் பொறுத்தவரை பிடித்த ஒரு விஷயம் எல்லாவற்றையும் அளப்பதற்கென்று அளவுகோல்களையும் குறியீட்டெண்களையும் நிர்ணயித்து இருப்பதுதான். எதையும் அனுமானத்தின் பேரில் முடிவுகளை எடுப்பதைவிட, தீர்மானமான அளவுகோல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பது பல மடங்கு நன்மை செய்யக் கூடியது.
இந்தியாவில் இதுபோல் அளவுகோல்களோ, அறிக்கைகளோ, குறியீட்டெண்களோ நிறைய துறைகளில் கிடையாது. முக்கியமாக வேலை இழப்பு பற்றி இந்தியாவில் நான் படித்தது எல்லாம் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கைகளே. அல்லது குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் இத்தனை சதவிகிதம் பேர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறோம் என்று சொல்லும் தகவல்களே. பங்குச் சந்தை நண்பர் ஒருவர், இதுபோன்ற குறியீட்டெண் முறை இங்கே அதிகம் இல்லாதது மிகவும் நல்லது என்றார். இல்லையென்றால், ஒவ்வொரு வாரமும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியாகி, மக்கள் மனத்தில் பீதியையே அதிகப்படுத்தும் என்பது அவர் வாதம்.
என் வாதம்: இது முழு பூசணிக்காயை சோற்றில் மூடிமறைக்கும் வித்தை. எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறார்கள், எல்லோரும் நன்கு சம்பாதிக்கிறார்கள், இந்தியா முன்னேறுகிறது, எல்லாரும் சேர்ந்து ஜோரா ஒரு தரம் கைதட்டுங்கள் என்று தெருமுனை வித்தைக்காரன் சொல்வது போல் இருக்கிறது. எத்தனை வேலைகள் புதிதாக உற்பத்தியாயின, எத்தனை வேலைகள் பறிபோயின என்று மக்களுக்குத் தெரியவேண்டாமா?
இது ஒரு தனித் தலைவலி. விஷயத்துக்கு வருவோம். ஒவ்வொரு நாளும் அரசு அல்லாத நிறுவனங்கள் தெரிவிக்கும் வேலை இழப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து படித்து வந்தாலே, பொருளாதாரச் சரிவு எவ்வளவு மோசமாக இந்தியாவைப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, 2009 – 10 ஆம் நிதியாண்டில் எப்படியும் 6 சதவிகித மொத்த வளர்ச்சி விகிதத்தை (ஜிடிபி) எட்டிவிடுவோம் என்கிறார். கடந்த வாரம், கிரிசிலும் (CRISIL), Centre for Monitoring Indian Economyயும், இந்த ஆண்டின் ஜிடிபி 5.8 % தான் இருக்கும் என்கிறது.
மற்ற நாடுகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் 5.8 % வளர்ச்சி என்பதே பெரிய முன்னேற்றம்போல் தோன்றக்கூடும். இதைக் கொஞ்சம் சரித்திர ரீதியாகப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இருந்து பார்த்தால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியத்துக்குக் கீழே, நெகட்டிவ்வாக இருந்ததில்லை. அதாவது நாம் பொருளாதார வீழ்ச்சியைச் (ரிசெஷனை) சந்தித்ததில்லை. சரிவைச் சந்தித்து இருக்கிறோம். எண்பதுகள் வரை 5 % வளர்ச்சி இருந்தது. பின்னர், பொருளாதார தாராளமயமாக்கலினால், அது 9 சதவிகிதம் வரை உயர்ந்தது. இப்போது, அது மீண்டும் இந்த நிதியாண்டில் 5.6 சதவிகிதமோ (அல்லது 6 சதவிகிதமோ) இருக்குமானால், சரிவை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.
நூறு கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு சதவிகிதச் சரிவும், பல லட்சம் வேலைகள் பறிபோனதைக் காட்டுகின்றன. பல்வேறு தொழில்கள் நசிந்துபோனதைக் காட்டுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதைக் காட்டுகின்றன. புதிய தொழில் முயற்சிகள் தள்ளிப் போடப்படுவதைக் காட்டுகின்றன. மக்கள் தம் அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் போவதைக் காட்டுகிறது.
கண்ணெதிரே பல நிறுவனங்கள், தொழில்கள் நசிந்துபோய்க்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே விவசாயம் கஷ்டதிசையில் இருக்க, இந்த ஆண்டு, பல மாநிலங்களில் இன்னும் பருவ மழையே தொடங்கவில்லை. விளைவு, விவசாயம் தொடங்கவில்லை. கூடிய விரைவில், அரிசி, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படும் பொருள்களின் விலைகள் இன்னும் ஏறப் போகின்றன.
இந்த் நிலையில், எண்ணற்ற நிறுவனங்கள் தம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டன. ஒரு தொழில் துறை பாக்கியில்லாமல், வேலைக் குறைப்பு நடந்திருக்கிறது. அதுவும் பொறியியல் படித்த புது மாணவர்களின் பாடு இன்னும் மோசம். சென்ற ஆண்டு முடித்த பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அப்படியே ஆஃப்ர் லெட்டர் கிடைத்தவர்களும், வேலைக்கு அழைக்கப்படாமல் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார்கள். பல ஐடி நிறுவனங்களில், ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை சம்பளக் குறைப்பு நடந்திருக்கிறது. உபரி செலவுகள் என்று அந்த நிறுவனங்கள் நினைக்கும் பல செலவுகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டன.
சென்னையில் எனக்குத் தெரிந்த இரண்டு ஐடி நிறுவனங்களில், கடந்த எட்டு மாதங்களாக சம்பள பாக்கி. உடனடியாக வேறு வேலையும் கிடைக்காத நிலையில், அப்படியே கிடைத்தாலும் இப்போது கிடைக்கும் சம்பளத்தில் பாதியளவு தான் கிடைக்கக்கூடிய நிலையில், இளைஞர்கள் திண்டாடுவதைப் பார்க்க சகிக்கவில்லை. தி. நகரில், எல்டாம்ஸ் ரோடில் சாலையோரங்களில் புதிதாக சொம்பில் கூழ் விற்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஐடி இளைஞர்கள் இதன் முக்கிய கஸ்டமர்களாகி இருக்கிறார்கள். அவர்கள் அங்கே சுவைக்காக மட்டும் வந்து கூழ் குடிக்கவில்லை என்பது கண்கூடு.
இந்த நிலையில், மத்திய அரசோ மாநில அரசுகளோ ஏழைகளுக்குப் பயன்படும் விவசாய, உர மானியங்களை வழங்கக்கூடாது, சர்வதேச கச்சா எண்ணை விலையை ஒட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை இருக்க வேண்டும், ஒவ்வொரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனமும் தாமே விலை நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும், வங்கிகளை குறைந்த வட்டியில் கடன்கொடுக்க வற்புறுத்தக் கூடாது என்று வரிசையாக எண்ணற்ற கருத்துகளை மெத்தப் படித்தவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். Controlled Price Mechanism இல்லையென்றால், இத்தனை நேரத்துக்கு இந்தியாவில் எத்தனை பசி, பட்டினிச் சாவுகள் அரங்கேறியிருக்கும் என்பதை இவர்கள் காண மறுக்கிறார்கள்.
பொருளாதாரம் நன்றாக இருக்கும் நேரத்தில், யாரும் எதுவும் செய்யவேண்டியதில்லை. ஆனால், இதுபோன்ற கடினமான காலகட்டங்களில்தான் ஒரு சமூகநலன் பேணும் அரசின் செயல்பாடு முக்கியமாகிறது. அதுவும் இந்தியா போன்ற சமூகப் பாதுகாப்பு அமைப்போ, திட்டமோ இல்லாத நாட்டில், வேலை இழந்த ஒருவன் எங்கேதான் போய் நிற்பான்? வேலை கிடைக்காதவர்கள் எங்கே போய் நிற்பார்கள்? அவனை அண்டி வாழும் குடும்பத்தின் நிலை என்னாகும்?
தெரியவில்லை. உடனே எல்லாவற்றையும் தேசியமயமாக்குவதுதான் சரியான தீர்வு என்று நான் நினைக்கவில்லை. நாம் தேசியமயமாக்குதலின் குறைகளை நிறையவே பார்த்துவிட்டோம். முழுமையான திறந்த பொருளாதாரத்துக்கும் நம்மால் போக முடியவில்லை. பழைய மாதிரி, லைசென்ஸ் கோட்டா ராஜ் என்று, கவர்மெண்டே கடவுள் என்று இருக்கவும் முடியவில்லை.
கேள்விகள் மட்டும் கேள்விகளாகவே நிற்கின்றன.