பொது

அந்தரங்கம் புனிதமானது

Posted in சமூகம், பொது on November 5th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் சென்ற வாரம், தோழி ஒருத்தியை மீண்டும் சந்தித்தேன். பல ஆண்டுகள் கழித்து சந்தித்ததாலேயே, பேச நிறைய செய்திகள் இருந்தன. என் குடும்பம், அவரது குடும்பம் என்று கேள்விகளும் பதில்களும் தொடர்ந்துகொண்டு இருந்தன. ஏதோ ஒரு கட்டத்தில் பேச்சு சுவாரசியத்தில், ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’ என்று கேட்டுவிட்டேன். கேட்ட பின்னர், நாக்கை கடித்துக்கொண்டேன். கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. ‘A personal question’ என்ற தோழி, பதில் சொல்லாமல் நிறுத்தினார். என் தவறு புரிந்தது.

பொதுவாக யாரிடம் பேசினாலும் பொதுவான செய்திகளையே நான் பேசுவேன். தனிப்பட்ட கேள்விகள் எதையும் கேட்கத் தயங்குவேன். என்னதான் நான் பத்திரிகையாளனாக வளர்ந்திருந்தாலும், தனிப்பட்ட கேள்விகள் மிகவும் இன்சென்சிட்டிவ்வானவை. வாழ்க்கையில் பலருக்கும் பல சிக்கல்கள். சொல்ல முடியாத சிக்கல்கள். அதனைத் தீர்க்கத் தெரியாமல், அல்லது முடியாமல் பலர் தவிக்கிறார்கள். சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தச் சிக்கல்கள் நீடிக்கின்றன.

இந்தச் சிக்கல்கள் பற்றி கேள்விகள் கேட்கப்படுவதை பலர் விரும்புவதில்லை. விரும்புவதில்லை என்பதைவிட, அதைப் பற்றிப் பேசுவதையே தவிர்த்து வருகிறார்கள். அதை மறந்துவிடவே முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இடம் பொருள் ஏவல் தெரியாமல், சட்டென அது சம்பந்தமான ஒரு கேள்வி எழும்போது, எரிச்சலே மிஞ்சுகிறது.

இன்றைக்கு, பலர் தங்களுக்குள் பல வட்டங்களைப் போட்டு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். சமூகத்துக்கு என்று ஒரு வட்டம், நண்பர்களுக்கு என்று ஒரு வட்டம், உறவினர்களுக்கு என்று ஒரு வட்டம் (இதற்குள்ளேயே துணை வட்டங்கள் உண்டு). இதில் எந்தச் செய்தியை யாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்ற தெளிவான அல்லது தெளிவற்ற பிரிவினைகள் உண்டு. என்னதான் ஒருவரை உங்களுக்குப் பல ஆண்டுகள் தெரிந்திருந்தாலும், அவர் உங்களிடம் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கலாம். இதில் தவறொன்றுமில்லை.

அடிமனத்தில் ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் பற்றி ஒரு கணக்கு, அளவீடு இருக்கிறது. அதை ஒட்டியே தன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் தைரியம் ஏற்படுகிறது. இன்றைய நவீன கால வாழ்க்கையில், மனத்தளவில் நெருக்கம் இருந்தாலும், எல்லா செய்திகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நியதி எதுவுமில்லை.

பலருக்கும் பல செய்திகள் தனிப்பட்ட செய்திகளாக இருக்கின்றன. தென்றல் இதழின் பதிப்பாளர் சி.கே.வெங்கட்ராமனிடம் ஒரு முறை பேசிக்கொண்டு இருந்தேன். பத்திரிகைத் தொழில் பற்றிய பேச்சில், அவர் நிறைய செய்திகளைச் சொல்லி வந்தார். சொல்லி முடித்தபிறகு, ‘இதையெல்லாம் நீங்கள் ஒரு அமெரிக்கனிடம் கேட்க முடியாது. இதெல்லாம் அவனைப் பொறுத்தவரை மிகப் பெரிய சொத்து. அவ்வளவு சீக்கிரத்தில், அவ்வளவு சுலபமாக அவன் உங்களிடம் இதெல்லாவற்றையும் சொல்ல மாட்டான். அமெரிக்கனிடம் போய் உன் நிறுவனத்தின் லாபம் என்ன என்று கேட்பது முடியவே முடியாது’ என்றார் அவர்.

வேலை இன்னொரு செண்டிசிட்டி விஷயம். வேலை என்பது ஒருவனுடைய பொருளாதார வளத்தையும் அதிகார உயரத்தையும் காட்டுவதாக, நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். விளைவு, பல வேலைகள் இந்த சட்டகங்களுக்கு அடைபடுவதில்லை. இன்றைக்கு வேலையின் தன்மையே மாறிப் போயிருக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை என்பது பழைய காலம். அதன் பிறகு, ஐடிக்காரர்களின் நடுராத்திரி வேலைகளும் இயல்பாகிப் போயின. இன்று பல தனிநபர்கள் சுயமான கண்சல்ட்டண்ட்டுகளாக இருக்கிறார்கள். எந்த ஒரு நிறுவனத்தோடும் இணையாமல், தம் திறமைகளின் பலத்தில் நிற்பவர்கள் இவர்கள். நம்ம ஊரில் ஏற்கெனவே ஆடிட்டர்களும் வக்கீல்களும் மருத்துவர்களும் இப்படிப்பட்ட கண்சல்டன்சி வேலையைத்தான் செய்கிறார்கள். ஆனாலும் இன்று வேறு படிப்பு படித்தவர்கள், ‘கண்சல்ட்டண்ட்டாக இருக்கிறேன்’ என்றால், சமூகத்தால் ஏளனமாகவே பார்க்கப்படுகிறார்கள்.

நமது சமூகத்தில், திருமணம் ஒரு பெரிய விஷயம். அது தொடர்பான கேள்விகள் பல சமயங்களில் மிகவும் சிக்கலாக இருக்கின்றன. ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, அவர்கள் யாரோடு வாழுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் பேசுவது, இன்னும் சிக்கல்களுக்கே வழிவகுக்கின்றன. மேலும் நம்ம ஊரில், இப்போது ஏகப்பட்ட திருமண முறிவுகள் நடக்கின்றன. அதை இயல்பாக எடுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்துக்குச் செல்வோர் உண்டு. அதைப் பற்றிப் பேசுவதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதோரும் உண்டு. ஆனால், இதற்கு நேர்மாறாக நடப்பதும் உண்டு.

இதேபோல் நிறைய மதமாற்றங்கள் நடக்கின்றன. தெரிந்தவர்கள் பலர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிப் போயிருக்கிறார்கள். ஏன் மாறினார்கள், என்ன காரணம் என்றெல்லாம் இதைக் கேட்க முடியாது. கேட்கவும் கூடாது. மேலும் அதைப் பற்றிப் பேசுவதை, நண்பர்கள் தவிர்க்கிறார்கள். மதம் மாறிப் போனாலும் ஒருவித குற்றவுணர்ச்சியோடுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் போய் சாதாரணமாகப் பேசினால் கூட, இந்த மாதிரிக் கேள்விகள் வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி, காதல், பெற்றோரை வைத்துப் பராமரிக்க முடியாதிருப்பது என்று எண்ணற்ற விஷயங்கள் சிக்கல்களாக இருக்கின்றன. இதனோடு, சமூக ரீதியான ஒரு வேல்யூ ஜட்ஜ்மெண்ட் வேறு சேர்ந்திருப்பதால், கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள். கேள்விகளுக்கான ஒரு பொருளாகிவிட்டோமே என்பதே பலருக்கு அவஸ்தையாக இருக்கிறது. அதை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள்.

இதில் கேட்பவர்களின் நோக்கம் என்பதும் உள்ளடங்கி இருக்கிறது. தெரியாமல், சாதாரணமாகக் கேட்பவர்கள் இயல்பானவர்கள். வேண்டுமென்றே இக்கட்டை உருவாக்க வேண்டும் என்று நினைத்து, குதர்க்கமாகக் கேட்பவர்கள் இன்னொரு புறம். யாரை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாது இருப்பதுதான் இதில் இருக்கும் பெரிய சிக்கலே.

எல்லோருக்கும் ஏதோ ஒன்றிரண்டு விஷயங்கள் உணர்வு சார்ந்த விஷயங்களாக இருக்கின்றன. திறந்த புத்தகங்கள் என்று கருதிக்கொள்வோருக்கும் இந்த நிலைதான். அதைத் தொட்டவுடன், அவர்கள் டென்ஷனாகிறார்கள். எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் திணறிப்போய்விடுகிறார்கள். இப்படித் திணறடிப்பதில் பலருக்கு ஒரு வக்கிர சந்தோஷம் இருக்கிறது.

நம்முடைய தமிழ் சமூகத்தில் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அடுத்தவனைப் பற்றி அத்தனையையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பு அது. அரசல்புரசலாகவேனும் தகவல்களைச் சேகரித்துக்கொள்வது ஒரு வழக்கம் என்றால், ஒரு சிலர் நேரடியாக கேட்டு, இக்கட்டான சூழ்நிலையைத் தோற்றுவித்துவிடுவதில் சமர்த்தர்களாக இருக்கிறார்கள். இப்படிச் சேகரிக்கப்படும் பல தகவல்கள் வெற்றுத் தகவல்கள். எந்த வகையிலும் யாருக்கும் உபயோகமில்லாத தகவல்கள் அவை. இதை அரிப்பு என்று சொன்னால், கொஞ்சமும் மிகையில்லை.

என் வரையில் ஒன்றைக் கண்டிருக்கிறேன். தனிப்பட்ட தகவல்கள் எதையும் கேட்காமல், தெரிந்துகொள்ளாமல் பல ஆண்டுகள் நண்பர்களாக இருக்க முடியும். பேசுவதற்கு விஷயங்களுக்கா பஞ்சம்? ஆனால், இப்படிக் கேட்காமல் இருப்பது என்பது ஒரு பழக்கம். முதலில் வாயைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்புறம் மெல்ல மெல்ல மனத்தையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை மனத்தில் ஆழ வேரூன்றிவிட்டால், அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைக்கும் ஆர்வம் முற்றிலும் குறைந்துவிடும்.

அந்தரங்கம் புனிதமானது. அதைச் சீண்டிப் பார்ப்பதால், வலி மட்டுமே மிஞ்சும்.

மீள முடியுமா?

Posted in அனுபவம், பொது on September 30th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

விடிகாலை எழுந்தவுடன் எது இருக்கிறதோ இல்லையோ, எனக்கு இணைய இணைப்பு வேண்டும். மடிக்கணினி முன் அமர்ந்து ஒரு மணிநேரம் முக்கியமான செய்தி மற்றும் பொருளாதார இணையதளங்களை எல்லாம் படிக்க வேண்டும். பின்னர், வந்திருக்கும் மின்னஞ்சல்களை பார்த்து, பதில் போடவேண்டியவற்றுக்கு பதில் போட்டு, நாற்காலியில் இருந்து எழுந்திருக்க ஐந்தரை ஆறு மணி ஆகும். அதற்குப் பின்னர்தான் காலை நடைப் பயிற்சியே.

இணைய இணைப்பு இல்லையென்றால், மடிக்கணினி பக்கமே நான் செல்வதில்லை. கடந்த பதினைந்து நாள்களாக, என் நிலைமை இப்படித்தான் ஆகிக்கொண்டு இருக்கிறது.

ஒரு நாள் எங்கள் வீட்டுத் தொலைபேசி செயலிழந்து போனது. பி.எஸ்.என்.எல். காரர்களிடம் புகார் தெரிவிக்க வந்து ரிப்பேர் செய்தார்கள். போன் வேலை செய்யத் தொடங்கியது. பிராட்பேண்ட் இணைய இணைப்புக்குக் கேடு ஏற்பட்டுவிட்டது. தொலைபேசி அழைப்பு வந்தால், இங்கே இணைய இணைப்பு சரியத் தொடங்கிவிடும்.

அல்லது இணைய இணைப்பே கிடைக்காது. இங்கேதான் விசித்திரம் விளையாடும். காலையில் எழுந்தவுடன், இன்று இன்னின்ன விஷயங்களை எல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவலோடு மடிக்கணினி முன் அமர்வேன். மோடம்மை ஆன் செய்வேன். உடனே, பச்சைக் கண்கள் ஒவ்வொன்றாக விழித்துக்கொள்ளத் தொடங்கும். ஒயர்லெஸ், ஏடிஎஸ்எல், ஸ்டேட்டஸ் கண்களும் நின்று நிதானமாக ஒளிரத் தொடங்கும். ஆனால், மடிக்கணினியில் இணைய இணைப்பு வந்திருக்காது.

இங்கிருந்து டென்ஷன் ஆரம்பிக்கும். உடனே எல்லா ஒயர்களையும் மீண்டும் ஒருமுறை அழுத்தி வைப்பேன். மூன்று நான்கு முறை மோடத்தை ஆஃப் செய்து மீண்டு ஆன் செய்வேன். கணினியையும் இரண்டு மூன்று முறை ரீஸ்டார்ட் செய்வேன். ஆனால், கணினியில் மட்டும் இணைப்பு கிடைக்கவே கிடைக்காது.

அவ்வளவுதான், போதை ஜல்லென வடிந்துவிடும். அதற்குள் காலை விடிந்துவிடும். இனிமேல் கணினி முன் உட்காருவது சாத்தியமே இல்லை. எரிச்சல் பீடிக்க எழுந்துகொள்ள வேண்டியதுதான்.

அடுத்த படையெடுப்பு, திருவல்லிக்கேணி டெலிபோன் இணைப்பகத்துக்கு. அல்லது தொலைபேசியில் புகார் பதிவு. இரண்டு மூன்று மணி நேரத்துக்கெல்லாம் ஒரு லைன்மேன் போன் செய்வார். அவருக்குக் கொஞ்சம் விரிவாகப் புரிய வைக்கவேண்டும். ‘போன் லைனில் பிரச்னை இல்லை சார். பிராட்பேண்டில்தான் பிரச்னை. கனெக்‌ஷன் வரவே மாட்டேங்குது’ என்றவுடன், ‘பிராட்பேண்டா சார்.. அது எங்களுக்குத் தெரியாது சார். நான் ஒரு நம்பர் தரேன். ஜேஇ, இஇ கிட்ட பேசுங்க.’

அடுத்தது இ இ. விவரங்கள் கேட்டபின், ‘நீங்க எப்போ ஆபீஸ்லேருந்து வருவீங்க சார்?’

‘சாயங்காலம் ஆகும். நீங்க வரீங்கன்னா, நான் சீக்கிரம் வரேன்.’

‘அதுதான் சார் பிரச்னை. இங்க ஆள் இல்லை. இது ரொம்ப ஈஸி சார். நீங்க வீட்டுக்கு வந்துட்டு மெஷின் முன்னால் உட்கார்ந்துட்டு என்னைக் கூப்பிடுங்க சார். நான் போன்லேயே வழி சொல்றேன்.’

ஒரு நாள் அதையும் செய்து பார்த்தேன். அவர் சொன்ன வழிமுறைகளை எல்லாம் பின்பற்றி செய்து பார்த்தாயிற்று.

‘எல்லாம் சரியா இருக்கே சார். ஏன் கனெக்‌ஷன் வரல?’

‘அதைத்தான் நானும் கேக்கறேன் சார்.’

‘திருப்பியும் கூப்பிடறேன் சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.’ இது நடந்து பத்து நாள்களாகி இருக்கும். இன்னும் அவர் கூப்பிடப் போகிறார்.

நான் படும் அவஸ்தையைப் பார்த்து, என் மனைவி களமிறங்கினார். கணினியையும் மோடத்தையும் அவர் ஆன் செய்ய சட்டென இணைய இணைப்பு கிடைத்தது. பெருமிதத்தோடு, காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார். அப்போதுதான் இன்னொரு விஷயம் புரிந்தது, இணைப்பு முழுவதும் துண்டாகவில்லை. அது எங்கேயோ மக்கர் செய்கிறது.

இப்போது பிரச்னை, அது எப்போது மக்கர் செய்யும் என்று தெரியாததுதான். ஏதாவது அவசரமாக தேட வேண்டும், டவுன்லோட் செய்யவேண்டும், மின்னஞ்சல் பார்க்கவேண்டும் என்றால், அன்று இணைப்பே கிடைக்காது. நீங்கள் தலைகீழாக நின்றாலும், மோடம் சிவனே என்று பார்த்துக்கொண்டு இருக்கும். பிரும்ம நிலை.

பிரும்ம முகூர்த்தத்தின் போது, பிரும்ம நிலை ஏற்பட்டால்தான் எரிச்சல் உச்சகட்டத்தை அடையும். ஏதும் பேசாமல், காலை நடைபயிற்சிக்குப் போய்விடுவேன். கடற்கரையில் காலாற நடக்கும்போதுதான், எவ்வளவுதூரம் இதுபோன்ற நவீன வசதிகளுக்கு நான் அடிமைப்பட்டுப் போயிருக்கிறேன் என்பது புரியும்.

இணையமோ கணினியோ இல்லாமல் வாழ்ந்ததில்லையா? அல்லது உலக செய்திகளையும் பொருளாதாரத்தையும் படிக்காமல் இருந்தபோது, நான் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லையே? மின்னஞ்சல்கள் இல்லாமலும் வாழ்ந்திருக்கிறோமே?

வசதிகள், அடிமைத்தனத்தை வளர்த்துவிட்டன என்பது ஒரு புறம். இணையத்தில் எல்லா தகவல்களும் இலவசமாகக் கிடைக்கின்றன என்று, அள்ளிப் போட்டுக்கொள்ளும் அவசரம் மறுபுறம். மற்றவர்களை விட கூடுதல் விவரங்களை, செய்திகளைத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையின் பரபரப்பு இன்னொரு புறம். விளைவு, இன்று என்னால் கையால் எதையும் எழுத முடியாத நிலை. எங்கே போனாலும் எழுதுவதற்கு கணினியோ, மடிக்கணினியோ வேண்டும். படிக்க இணைய இணைப்பு வேண்டும்.

யோசித்துப் பார்த்தால், அடிமைத்தனம் வெட்கமாக இருக்கிறது. தெரியவில்லை. இதிலிருந்து மீளவேண்டுமா அல்லது இப்படித்தான் வாழவேண்டுமா? மேலும் இந்த வலையில் இருந்து மீளத்தான் முடியுமா? அதுவும் தெரியவில்லை.

அகக்குரலைக் கேட்க பயந்து…

Posted in அனுபவம், பொது on September 30th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

காலை நேரங்களில், எந்தத் தொலைக்காட்சி சானலைத் திறந்தாலும் ஒரு இந்து, கிருத்துவ அல்லது இஸ்லாமிய வழிகாட்டி பேசிக்கொண்டு இருப்பார். அவர் பேச்சின் சாராம்சம் ஒன்றே ஒன்றுதான். அமைதி பெறுதல். மெளனத்தை நோக்கித் திரும்புதல். அதற்கு யோகம், தியானம் என்று விளக்குவார்.

இன்றைக்கு அமைதி அபூர்வ அம்சமாக இருக்கிறது. திடீரென்று வீட்டில் மின்சாரம் தடைபடும்போதுதான், மேகமென அமைதி கவியத் தொடங்கும். டிவிகள் ஓடாது, தண்ணீர் மோட்டர் சத்தம் இல்லை, வரவழைக்கப்பட்ட உற்சாகத்தோடு பேசும் எஃப்.எம். வானொலிகள் இல்லை. காற்று அறைக்குள் புகுந்து புறப்படும் மெல்லிய ஓசை கேட்கும். காக்கை கரையும், புறாக்கள் அகவும் ஒலி எட்டிப் பார்க்கும். நகரத்துக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் சின்ன கிராமம் மெல்லத் தலைதூக்கும். தாம் ஜீவித்திருக்கிறோம் என்பதே பலருக்கு அப்போதுதான் தெரியத் தொடங்கும்.

எங்கே போனாலும் சப்தம்தான். சமீபத்தில் ஒரு நாள் என் தோழி ஒருத்தியின் திருமண விருந்து. முன் இரவு தாண்டி தொடங்கிய பார்ட்டி. ராக் பேண்ட் ஒன்றின் பேரிரைச்சல் கும்மாளம். எவர் பேச்சும் எவர் காதிலும் விழவில்லை. விழவேண்டும் என்று யாரும் நினைக்கவும் இல்லை. இரண்டு மணிநேரங்களுக்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை.

திருமண வீடு என்றில்லை. இந்த நிலை எங்கும் பரவியிருக்கிறது. கல்லூரி பெண்களும் ஆண்களும் காதுகளை எஃப்.எம். வானொலிகளுக்கும் மியூசிக் பிளேயர்களுக்கும் இரவல் கொடுத்துவிட்டார்கள். வயதானவர்களோ, காலை தொடங்கி இரவு வரை, தொலைக்காட்சியின் சப்தத்துக்கு ஆட்பட்டு கிடக்கிறார்கள்.

திரைப்படம் போனால், அங்கும் இரைச்சல். இந்த இரைச்சல், ஒலி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. காட்சிகள், கருத்துகள், வலியுறுத்தல்கள் எல்லாவற்றிலும் இரைச்சல் நிறைந்து கிடக்கிறது.

யாராவது எப்போதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நான் பேசும் பலரிடம் குரலில் கனிவு இல்லை. சப்தமாகப் பேசிப் பேசி முரட்டுத்தனம் படிந்துவிட்டது. எல்லாவற்றிலும் ஒருவித மிகை. உணர்வுகளில், எதிர்வினைகளில், நடத்தைகளில் எல்லாம் உபரித் தன்மை.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஒன்று புரியும். இவர்கள் யாரும் தம் அகக்குரலைக் கேட்க தயாராக இல்லை. அமைதி என்பது, உள்ளே இருக்கும் குரலைக் கேட்பதற்கான இனிய நேரம். பிரச்னை, அகக் குரல் பலருக்கு பயமுறுத்துவதாக இருக்கிறது. அது யதார்த்தத்தின் குரல். அது உண்மை பேசும் குரல். பூச்சுகள் படியாத குரல். பிம்பங்கள் களைந்த குரல்.

தாம் நம்ப விரும்பும், காண்பிக்க விரும்பும் தோற்றங்களின் நேர் எதிராக இருக்கிறது, அகக் குரல். அது பூமியில் கால் பாவி, சந்தேகங்களையும் கசப்பு அனுபவங்களையும் ஒன்று திரட்டியதாக இருக்கிறது. சதா ஒலித்துக்கொண்டு இருக்கும் இந்தக் குரலின் இம்சையில் இருந்து தப்பிக்க தம் காதுகளையும் மூளையையும் பலர் கழட்டிக்கொடுத்துவிடத் தயாராக இருக்கிறார்கள்.

பல தர்மசங்கடமான கேள்விகளை அகக்குரல் கேட்கிறது. தான் நினைத்ததை அகக்குரல் வழிமொழிய மாட்டேன் என்கிறது. உன் முடிவைப் போல் உண்டா என்று மெச்ச மாட்டேன் என்கிறது. அது முதல் விமர்சகனாக, முதல் எதிரியாகவே இருக்கிறது. ஈவு இரக்கமற்ற விமர்சனம்.

ஒரு பக்கம் அந்தக் குரலின் வெளிச்சத்தில் பயணம் மேற்கொள்ள விருப்பம் இருக்கிறது. ஆனால், அது சமூகம் காட்டும் வழியைப் போலல்லாமல் முற்றிலும் வேறு பாதையாக இருக்கிறது. அந்தப் பாதை வெற்றியைத் தருமா, குறிப்பாக பொருளாதார வெற்றியை உறுதிப்படுத்துமா என்ற கேள்வி சதா குடைந்துகொண்டே இருக்கும். தனக்கும் அகக்குரலுக்குமான விவாதங்கள் எப்போதும் உச்சகட்டத்திலேயே இருக்கும்.

ஒவ்வொரு முறையும் அகக்குரலை அடக்கிவிட்டுத் தன் விருப்பம் போல் முடிவுகள் எடுக்க விரும்புகிறோம். விளைவு, அகக்குரல் இன்னும் மூர்க்கமாகக் கேள்விகள் எழுப்பும். நீங்கள் விலக்க விலக்க மேன்மேலும் வந்து ஒட்டிக்கொள்ளும் பிசினைப் போன்றது அது. மனிதன் மனதுக்குள் துண்டாகிச் சிதறிப்போவது இப்படித்தான்.

அகக்குரலை அடக்குவதற்கான முயற்சியில்தான் நாம் பேரிரைச்சல்களோடு சம்பந்தம் கொள்ளத் தொடங்குகிறோம். அது சினிமா, தொலைக்காட்சி, பேச்சு என்று ஒவ்வொரு வடிவத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வடிவத்திலும் நாம் எதிர்பார்ப்பது முழுமையான விடுதலையை. அதாவது, அகக்குரலிலிருந்து விடுதலையை.

ஒரு காலத்தில் ஜெயகாந்தன் எழுத்துக்கள் உரக்க ஒலித்த போது, அதை ரசித்தவர்கள் நாம். உணர்ச்சிப் பிழம்பாக நமது திரைப்படங்கள் கண்ணீர் மல்க நின்ற போது, அதை ரசித்தோம். இன்று தொலைக்காட்சிகள் அந்த வேலையைச் செய்கின்றன. இளைஞர்களுக்கு பிடித்த சப்தத்தை இன்றைய திரைப்படங்கள் வழங்குகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் போதைப் பொருள் மேன்மேலும் அதிகரித்துக்கொண்டே போவதைத்தான் நாம் இங்கே பார்க்கிறோம்.

போதை எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் அகக்குரலின் வலியுறுத்தல் நிற்பதே இல்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான், அமைதியை நோக்கித் திரும்புதல் என்ற அம்சம் தேவைப்படுகிறது. வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில், தருணத்தில், அமைதியை நோக்கித் திரும்ப வேண்டிய அவசியத்தை உணர ஆரம்பிக்கிறோம். இங்கேதான் பக்தி என்பதும் இறைவன் என்பதும் திடீரென முக்கியமாகத் தோன்ற ஆரம்பிக்கிறது.

இன்றைக்கு வெளியுலகில் பிரபலமாகியிருக்கும் பல ஆன்மிகப் பெரியவர்களும் சாமியார்களும் இந்த நவீனத் தேவையை நிறைவு செய்கிறார்கள். அமைதியைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அமைதியை அடையப் பயிற்சி அளிக்கிறார்கள். உள்ளுக்குள் திரும்பிப் பார்க்கச் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

வெளிப்புறமாக மட்டுமே பார்த்துவந்த நம் பார்வை, நமக்குள்ளே திரும்பு வேண்டியதின் தேவை அப்போது புரிபடுகிறது. இதுநாள் வரை எதிரியாக, விமர்சகனாக மட்டுமே பார்த்து வந்த அகக்குரலை எப்படி நட்புடன், ஆதரவுடன், அன்புடன் பார்க்க வேண்டும், அணுக வேண்டும் என்பது தெரியத் தொடங்குகிறது. அகக்குரல் நமக்கு வழிகாட்ட உருவானதே அன்றி, நம்மை இம்சைப்படுத்த உருவானதல்ல என்பதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் காலம் தேவைப்படும்.

வேறு எவரையும் விட, மிகவும் தீர்மானமான கருத்துகளை அழுத்தந்திருத்தமாகச் சொல்வது அகக்குரல். அதில் பிசிர் இல்லை. குழப்பம் இல்லை. உங்களுக்கான மிக நம்பிக்கையான confidant அது.

அகக்குரலும் நீங்களும் ஒன்றாகச் சேரும் புள்ளியில்தான் அமைதி குடிகொண்டு இருக்கிறது. இந்த இடத்துக்கு வந்து சேருவதில்தான் காலதாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொருவருடைய அகங்காரத்துக்கும் ஏற்ப கால அவகாசம் மாறுபடும். இங்கே வந்து சேர்ந்தபின், சட்டென எல்லாம் தெளிவாகத் தொடங்கும். அன்றலர்ந்த மலரென வாழ்வே விரியத் தொடங்கிவிடும்.

அதுவரை, அகக்குரலைக் கேட்ப பயந்து ஓடும் ஓட்டம் நிற்கப் போவதே இல்லை.

தூக்கம் இழந்தவர்கள்…

Posted in அனுபவம், பொது on September 30th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

தி லாண்ட்மார்க் போரம் என்ற மூன்று நாள் பயிற்சி முகாம் பெங்களூருவில் நடக்கும். லாண்ட்மார்க் எடுகேஷன்  நிறுவனம் நடத்தும் வாழ்க்கைப் பாடங்கள் நிறைந்த முகாம் இது. மிக எளிமையான பயிற்சிகள். முகாம் பற்றி எழுதுவதில் அர்த்தமில்லை. நேரடியாக பங்குகொள்வது பயன் அளிக்கும்.

அதில் முதல் நாள் ஒரு மாயையை உடைப்பார்கள். பொதுமக்கள் மத்தியில் எட்டு மணி நேரம் தூக்கம் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுவது எவ்வளவு பெரிய பொய் என்று நிரூபிப்பார்கள். முகாம் நடந்துகொண்டே இருக்கும். இரவு மணி 12, 1, 2 வரை போய்கொண்டே இருக்கும். வீட்டுக்கு அனுப்ப மாட்டார்களா என்று இருக்கும்.

அப்போதுதான் மாயையை உடைப்பார் அதை வழிநடத்தும் ஆசிரியர். எல்லோரையும் கண்களை மூடச் சொல்லி, மெள்ள மெள்ள உடலை ரிலாக்ஸ் செய்ய, மிதமான வார்த்தைகளைச் சொல்லுவார். ஒரு கட்டத்தில் நினைவு நழுவி, உடல் தளர்ந்து, தூக்கம் முழுமையாகப் பற்றிக்கொள்ளும். ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோதான். உடனே விழிப்பு ஏற்பட, மனம் புத்துணர்ச்சியோடு இருக்கும். மூளை விழிப்புடன் இருக்கும். எவ்வளவு நேரம் என்பதில்லை, எவ்வளவு ஆழ்ந்து தூங்குகிறோம் என்பதே முக்கியம் என்பதை அனுபவபூர்வமாக தெளிவிப்பார்கள்.

விவேகானந்தா கேந்திராவில் சொல்லிக்கொடுக்கப்படும் யோகாசன வகுப்புகளில், இறுதியில் ஷவாசன் என்றொரு ஆசனத்தைச் சொல்லித் தருவார்கள். உடலைத் தளரச் செய்வதும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தருவதும் ஷவாசனின் குறிக்கோள், தூங்கிவிடாதீர்கள் என்பார்கள். ஆனால், பலருக்குத் தூக்கம் சுழட்டிக்கொண்டு வரும். எழுந்திருக்கும்போது, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நான் முடிவெட்டிக்கொள்ளும் ஆண்கள் பார்லரில், முகத்துக்கு ப்ளீச்சிங், இன்னபிற அழகு பேஷியல் சேவைகளையும் செய்வார்கள். முகத்தில் கை வைத்து பேஷியல் செய்யத் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே பலர் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். தலை ஒருபக்கம் சாய்ந்துவிடும், குறட்டைச் சத்தம் பார்லரையே தூக்கும்.

உறக்கமும் அசதியும் சோர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. நீண்ட நேரம் தூங்கவேண்டாம், நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைத்தால் போதும் என்று சொல்பவர்கள், தொடர்ந்து அசதியையும் சோர்வையும் சேமிக்கிறார்கள். இன்னொரு பக்கம், பலருக்கு ஆழ்ந்த தூக்கமே கிடைப்பதில்லை. எப்போதும் கண்களில் தூக்கம் மிச்சமிருக்கும். ஒரு மாதிரி போதை மனநிலையிலேயே இருப்பார்கள். அதுவும் காலை வேளைகளில், இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஏற்றி வரும் வாகனங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. இவர்கள் எல்லாம் பல்வேறு பிபிஓக்களில் இரவு நேரப் பணியை செய்தவர்கள். வண்டியில் வரும்போதே தூக்கம் அப்பிக்கொண்டு இருக்கும்.

பலர் பேசிக்கொண்டே இருக்கும்போது, எதிரே இருப்பவர் கண் அயர்வதைப் பார்க்க முடியும். இசைக் கச்சேரிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகளில் இதுபோல் தம்மை மறந்து உறங்குபவர்கள் அதிகம். மீண்டும் எழுந்தவுடன் ஒருவித கூச்சம் தலைகாட்டும்.

நிறைய பேருக்கு தூங்குவதில் பிரச்னை இருக்கிறது. என்னோடு பணியாற்றிய நண்பர் ஒருவருடன் வெளியூர் பயணங்கள் அல்லது ஏதேனும் அலுவலக சந்திப்புகளில் ஒரே அறையில் தங்க நேரிடும். மனிதர் தூங்கவே மாட்டார். பதினொன்று பனிரெண்டு வரை மது. அப்புறம் விடிய விடிய புகை. டிவியைப் போட்டுவிட்டு விளையாட்டுப் போட்டி ஏதேனும் ஒன்றை ரசித்துக்கொண்டு இருப்பார். விடிகாலை நான் எழுந்திருக்கும் சமயம், லேசாக அவர் கண்ணயர்வார். இதற்கு நேர் எதிரானவர்களும் உண்டு. விடிகாலை என்பது இவர்களுக்கு பாதி ராத்திரி ஒன்று அல்லது இரண்டு மணி. எழுந்து உட்கார்ந்துகொண்டு, வீட்டில் உள்ளதையெல்லாம் குடைந்துகொண்டு இருப்பார்கள்.

கவலை நிறைய பேரைத் தூங்கவிடாமல் செய்கிறது. இரவின் தனிமை மிகவும் அகோரமாக இருக்கிறது. உள்ளே பீறிடும் துக்கமும் கவலையும் சோகமும் ஆதங்கங்களும் இவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது. ஒவ்வொரு இரவையும் இவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது போல், வலியுடன் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் பலியாவது, தூக்கம். தூக்கமின்மை, எரிச்சலை மேன்மேலும் அதிகப்படுத்துகிறது.

வாழ்க்கையின் மிகப் பெரிய வரம், தூக்கம். அதை இழந்து தவிப்பவர்களைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும். நவீன வாழ்க்கை முறை, இவர்களின் மேல் கருணையே இல்லாமல் வலியையே திணித்துக்கொண்டு இருக்கிறது. தம் வலிக்கான நிவாரணங்களையே இவர்கள் தொடர்ந்து லாண்ட்மார்க் போரம்களிலும் கேந்திராவிலும் தேடி வருகிறார்கள். எவ்வளவு தூரம் கிடைத்ததோ தெரியவில்லை.

மேலும் முழுமையான நிவாரணம் கிடைத்துவிடுமா என்றும் தெரியவில்லை. வலியும் சோர்வும் தூக்கமின்மையும்தான் வாழ்க்கை போலும்!

வழிந்துபோகும் தீராக் கனவு

Posted in பொது on September 9th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
சிறுகதைகள் பற்றி நண்பர்கள் மத்தியில் எப்போது விவாதம் வந்தாலும் ஒரு விஷயம் திரும்பத் திரும்ப வரும். ‘முடிவு இப்படித்தான் இருக்கும்னு எனக்கு முன்னாலேயே தெரியும்’ என்பார்கள். அதாவது கதையைப் படிக்க ஆரம்பிக்கும் தருணத்திலேயே அதன் போக்கையும் முடிவையும் அனுமானித்துவிடும் அவசரம் நிறைய பேருக்கு இருக்கிறது. இந்த எழுத்தாளர் இப்படித்தான் எழுதுவார், இப்படித்தான் முடிப்பார் என்று ஒரு முன் தீர்மானத்துக்கும் உடனடியாக வந்துவிடுவார்கள்.
‘இப்படி பிரிடிக்டபிளாக கதை எழுதக் கூடாது. அனுமானிக்கவே முடியாமல் இருக்கவேண்டும். லைஃப் பிரிடிக்கடபிளாவா இருக்கு’ என்று விவாதம் தொடரும். மனிதனின் ஆதி ஆசைகளில் ஒன்று, எதையும் அனுமானித்துவிட வேண்டும் என்பதுதான். அனுமானிக்க முடியாத ஒரு விஷயம் என்பதே பயம் நிறைந்ததாக இருக்கிறது. நாளை என்பது அப்படிப்பட்ட ஒன்று. அதை அனுமானிக்க வேண்டும். நான் அனுமாதித்தபடியே நாளை இருந்துவிட வேண்டும் என்பது இன்னொரு எதிர்பார்ப்பு. ஆனால், அந்த நாளை, யாருடைய விருப்பப்படியும் இல்லாமல், எந்த முன் அனுமானத்துக்குள்ளும் கட்டுப்படாமல் விளையாட்டு காட்டுகிறது.
ஒவ்வொரு நாளையும் நேற்று போலவே இருக்கும், நேற்று போலவே மனிதர்கள் பதில் அளிப்பார்கள், நடந்துகொள்வார்கள், நேற்று சாப்பிட்ட சாப்பாடு போலவேதான் இன்றும் நன்றாக இருக்கும், நல்லபடியாக செறிக்கும் என்றெல்லாம் நினைக்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருக்கிறது. அப்படி வித்தியாசமாக இருப்பதே மனிதனின் பயத்தை மேன்மேலும் பெருக்கிக்கொண்டே போகிறது. அதுதான் மிகப் பெரிய சவால்.
குழந்தைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பல குழந்தைகள் வாலுத்தனம் செய்கின்றன, சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கின்றன, பிடிவாதம் பிடிக்கின்றன; எந்த நேரத்தில் எங்கே போய் கீழே விழுந்து முட்டியில் சிராய்த்துக்கொள்ளுமோ என்று பெரியவர்களாகிய நாம் பயப்படுவோம். உடனே அக்குழந்தையைத் திட்டி, அடித்து, அடக்கிவைத்து என்னென்னவோ செய்து பார்க்கிறோம். குழந்தைகள் மனிதர்களின் அனுமான உலகத்துக்கு வெளியே இருக்கின்றன. அடுத்த நொடி என்ன செய்யவேண்டும் என்பது அதற்கே தெரியாது. பெரியவர்கள் திண்டாடிப் போகிறார்கள். இந்தக் குழந்தை இப்படித்தான் நடந்துகொள்ளும் என்று எப்படியாவது ஒரு வரைபடத்தை மனத்தில் தீட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஒவ்வொரு வரைபடத்துக்கு வெளியேயும் குழந்தைகள் ஓடுகின்றன.
பெரியவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய வீழ்ச்சி இது. உடனே அதை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். உண்மையில் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் ஆவது என்பது, அனுமான உலகத்துக்கு வெளியே இருந்து அனுமான உலகத்துக்குள் வருவதுதான். குழந்தையாக இருக்கும் வரை, குழந்தை என்ற ஒரு சலுகை இருக்கிறது. அனுமான உலகத்துக்கு வெளியே இருக்கலாம். எல்லோரும் ரசிப்பார்கள்.
ஆனால், கொஞ்சம் வளர்ந்தபின்னர், அனுமான உலகத்துக்குள் அக்குழந்தைகள் வந்தே ஆகவேண்டும். எல்லோரும் சொல்வதைப் புரிந்துகொள்ள வேண்டும். முன்னர் எப்படி செய்யப்பட்டதோ அதையே அடியொற்றிச் செய்யப் பழக வேண்டும். மரியாதை, கெளரவம், பக்தி, வேண்டல், தொழுதல் எல்லாம் அனுமான உலகத்தின் அடையாளச் சொற்கள். பல பெற்றோர்கள் எவ்வளவு சீக்கிரம் தம் குழந்தைகளை அனுமான உலகத்துக்குள் அழைத்துவந்துவிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைத்துவந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். எல்லோரும் படிப்பதைப் படிக்க வேண்டும், எல்லோரும் செய்யும் வேலை, எல்லோரும் சம்பாதிக்கும் சம்பாத்தியம், எல்லோரையும் போல் மீண்டும் திருமணம், குழந்தைகள் என்று அனுமான உலகின் சக்கரம் சீராக ஓடிக்கொண்டு இருக்கிறது.
வளர்ந்த பின்னரும் அனுமான உலகத்துக்கு வெளியே இருப்பவர்களை, பெரியவர்களால் என்றுமே புரிந்துகொள்ள முடிந்ததில்லை. படித்துவிட்டு, வேலைக்குப் போகாமல் சும்மா சுற்றும் ஆணோ, திருமணம் செய்துகொள்ள விரும்பாத பெண்ணோ, லஞ்சம் வாங்காத அரசு அதிகாரியோ, நல்லது செய்ய நினைக்கும் அரசியல்வாதியோ,  இவர்களால் விடுவிக்க முடியாத புதிர்கள்.
அனுமான உலகத்துக்கு வெளியே இன்னும் சவாலாக இருப்பவர்கள், மனநிலை பிறழ்ந்தவர்கள். அவர்களைப் பார்த்து பலரும் பயப்படக் காரணம், அவர்களின் புரிந்துகொள்ள முடியாத தன்மைதான். அவர்களை தம்மோடு சேர்த்துக்கொள்ள பயம். விளைவு, அவர்களை விலக்கி வைத்துவிடுதல். அதன் மூலம், தம் மனநிலைக்கு ஏதோ ஒருவகையில் ஒரு பாதுகாப்பு வளையத்தை அவர்கள் உருவாக்கிக்கொள்ளுகிறார்கள். இப்படி வளர்ந்தபின்னரும் புரிந்துகொள்ள முடியாதவர்களாக மனிதர்கள் இருக்க முடியும் என்பதே பெரியவர்களுக்குப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதை எப்படியே மறந்துவிட வேண்டும், ஒதுக்கிவைத்துவிட வேண்டும் இல்லையா?
அனுமான உலகத்துக்கு வெளியே இருக்கும் பிரச்னை இப்படி என்றால், அனுமான உலகத்துக்குள் இருக்கும் பிரச்னைகள் இன்னும் சுவாரசியமானவை. எப்படியெல்லாம் தன் அனுமானங்களை இன்னும் கூர்மைப்படுத்தலாம்? அதை நிஜத்துக்கு அருகே எவ்வளவு நெருக்கமாக எடுத்துச் செல்ல முடியும்? இதைச் செய்ய என்னென்ன கருவிகளை எல்லாம் கண்டுபிடிக்க முடியும்?
இன்றைக்கு வானிலை, பங்குச் சந்தை, மருத்துவம் என்று பல துறைகளில் முன் அனுமானங்களைக் கூர்மைப்படுத்தும் கருவிகளும் செயல்முறைகளும் பெருமளவு வளர்ந்துள்ளன. பங்குச் சந்தையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அனுமானங்களை வைத்துக்கொண்டே ஓடும் துறை அதுதான். ஸ்பெகுலேடிவ் என்ற பொருத்தமான சொல் அங்கேதான் பயன்படுகிறது.
அப்படியாவது எல்லாவற்றையும் அனுமானம் செய்துவிட முடிகிறதா? பத்து விஷயம் சொன்னால், இரண்டு நடக்கிறது, எட்டு தப்பிப் போகிறது. தப்பிப் போகும் எட்டு விஷயங்கள்தான் சுவாரசியத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றன. தமக்குத் தெரியாத ஓர் உலகம், அனுமானத்துக்கு அப்பாற்பட்ட உலகம் என்ற ஒன்று உண்டு என்று மீண்டும் மீண்டும் இந்தத் தோல்விகள்தான் முகத்தில் அறைகிறார்போல் எடுத்துச் சொல்லுகின்றன. இதில் புத்திசாலிகளும் அதிமேதாவிகளும் பிராபபிலிட்டி தியரியை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள். ஒருவகையில், தோல்வி ரணத்துக்குத் தடவப்படும் களிம்பு, பிராபபிலிட்டி தியரி.
இங்கேதான் உலகின் அதியற்புதமான விஷயத்த்துக்கு வந்து நிற்கிறோம். மனித யத்தனத்துக்கு அப்பாற்பட்டு, மனித கணக்குகள், புரிந்துகொள்ளும் சக்தி, அனுமானிக்கும் சக்திக்கு அப்பாற்பட்டு ஒன்று இருக்கிறது. நாம் வாழும் இதே உலகத்தில்தான் அந்தச் சக்தியும் இருக்கிறது. நாம் நீரைப் புரிந்துகொண்டுவிட்டதாக நினைக்கிறோம். நிலத்தைப் புரிந்துகொண்டுவிட்டதாக நினைக்கிறோம். வெளியைப் புரிந்துகொண்டுவிட்டதாக நினைக்கிறோம். ஆனால் புரியாத இன்னும் கோடானுகோடி புதிர்களை அவை தம் கர்ப்பையில் சுமந்திருக்கின்றன.
ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஒவ்வொரு முன்னேற்றமும் அனுமான உலகத்துக்கு வெளியே இருக்கும் பிரபஞ்சத்தின் திட்டி வாசலைத் திறப்பது போன்றதுதான். ஒன்றைத் திறந்தால், அங்கே மற்றொரு வெளி காத்திருக்கிறது. அடுத்தொரு கதவும், அதற்கு கீழே சின்னதாக் ஒரு திட்டிக்கதவும் காத்துக்கொண்டு இருக்கின்றன. ஒவ்வொன்றாக நகர நகர, கடல் மணலை எண்ணிப் பார்த்த கதைதான்.
இந்த பிரும்மாண்ட பிரபஞ்சத்தின் கதவுகளை ஜோசியம், நாடி, இன்னபிற நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் திறந்து காட்டுகிறேன் என்கின்றன. சாமியார்கள் திறந்துகாட்டுகிறேன் என்கிறார்கள். அனுமானத்துக்கு வெளியே இருக்கும் உலகை அறிந்துகொள்ள மனிதன் கண்டுபிடித்த விஷயங்கள் இவை. மனத்துக்குத் திருப்தி வேண்டுமல்லவா? நாளைக்கு என்ன ஆகுமோ என்ற கவலையோடு படுப்பதைவிட, நாளை கண்டிப்பாக ஒரு தேவதை வந்து அட்சயப் பாத்திரம் வழங்குவாள், என் துயரம் எல்லாம் தீரும் என்று மனத்தைத் திருப்திப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் இல்லையா?
அடிப்படையில் அனுமான உலகம் நமக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. எல்லாம் தெரிந்த மாதிரியும் புரிந்த மாதிரியும் நம் கைக்குள் அடங்குவதாகவும் இருக்கிறது. அதே சமயம், அனுமானத்துக்கு வெளியே இருக்கும் உலகம் நமக்கு எப்போதும் கவர்ச்சிகரமான ஒன்று. அறிவியல், இலக்கியம், ஆன்மிகம் இவையெல்லாம் இந்த அனுமான உலகத்துக்கு வெளியே இருப்பவைகளோடு உரையாடக் கூடிய துறைகளாகக் கருதப்படுகின்றன. அதனால்தான், இத்துறைகளில் இருக்கும் excentric ஆள்களை, மற்றவர்கள், ஒருமாதிரி சலுகையோடும் ஒருவித ஆச்சரியத்தோடும் பார்க்கிறார்கள் போலும்.
அடுத்த முறை சிறுகதை படிக்கும்போது, நீங்கள் அனுமான உலகத்தில் இருந்து அனுமானத்துக்கு வெளியே இருக்கும் உலகத்துக்குப் போகிறீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அங்கே பேசப்படுவது வேறொரு நிஜம், காட்டப்படுவது வேறொரு வாழ்க்கை, விரிவது வேறொரு எதார்த்தம். அது ஏன், இங்கே இருக்கும் நிஜத்தோடு ஒட்டி இல்லை என்று கேள்விகள் கேட்காதீர்கள். ஏனெனில், கேள்வியே தப்பு. அனுமானத்துக்கு வெளியே இருக்கும் உலகத்தை நம்மால் முழுவதும் பார்த்துவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

சீட் வாங்கலையோ சீட்டு

Posted in கல்வி, பொது, மாணவர்கள் on September 2nd, 2009 by வெங்கடேஷ் – 3 Comments
இந்த ஆண்டு (2009) தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில், ஒரு மாதம் நடைபெற்று, 12 ஆகஸ்டு அன்று முடிவு பெற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதெல்லாம் அரசு கோட்டா என்று சொல்லப்படும் சீட்டுகளுக்கு நடந்த கலந்தாய்வு. 35% சீட்டுகளை, கல்லூரிகளை நடத்தும் நிர்வாகங்களே மேனேஜ்மெண்ட் கோட்டாவில் நிரப்பிக்கொண்டன. இந்தக் கலந்தாய்வின் முடிவில் கிட்டத்தட்ட 30,199 சீட்டுகள் நிரப்பப்படாமல் தேங்கிப் போயின. தமிழ்நாட்டில், 440 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதில் 6 கல்லூரிகளில் 10 % சீட்கள் கூட நிரம்பவில்லை. 20% சீட்டுகள் நிரம்பிய கல்லூரிகள் எண்ணிக்கை 26, 30% சீட்டுகள் நிரம்பிய கல்லூரிகள் எண்ணிக்கை 34.
சீட்டுகள் நிரம்பாமல் போனதைப் பற்றி பல கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். ஓவர் சப்ளையே முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. 1980களில் பொறியியல் படிக்க வந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்லூரிகள் இல்லாமல் இருந்தன. அப்போதுதான், கர்நாடகத்தைப் பின்பற்றி, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியை எம்.ஜி.ஆர். அரசு வழங்கியது. 1990 களில் நடந்த முக்கிய மாற்றங்களில் ஒன்று சந்தைப் பொருளாதாரம், தனியார் பங்கேற்பு, திறந்த வணிகம். கல்வி, குறிப்பாக பொறியியல்/ மருத்துவக் கல்வி, இந்தச் சந்தைப் பொருளாதாரத்தின் கருத்தை அடியொற்றி உருவாயின.
இன்றைக்கு இவ்வளவு சீட்டுகள் நிரப்பப்படாமல் தேங்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது, சந்தைப் பொருளாதாரத்தின் மகிமை புரிபடத் தொடங்குகிறது. அப்படியென்ன பெரிய மகிமையைக் கண்டுவீட்டீர்கள் என்று கேட்பவர்களுக்கு, இன்னொரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு இதைச் சொன்னால் இன்னும் தெளிவாக விளங்கும்.
தூரதர்ஷன் மட்டுமே ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்று இருந்தபோது, அவர்கள் போட்டதுதான் நிகழ்ச்சிகள், அவர்கள் காண்பித்ததுதான் திரைப்படங்கள், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள். வெரைட்டி என்பது மருந்துக்கும் இருந்ததில்லை. பார்வையாளர்கள், பயனர்கள் தேர்வு என்பது இருந்ததே இல்லை. தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வருகை இந்த நிலையில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. ஒரு சில நொடிகளில், உங்கள் நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவரவில்லை என்றால், ரிமோட் முனையில் சானல் தாவல் நிச்சயம். இன்றைக்கு நிலைமையைப் பாருங்கள், சின்னதும் பெரியதுமாக ஜெனரல் எண்டர்டெயின்மெண்ட் சானல்களே ஒரு பத்து சானல்கள் இருக்கின்றன. விருப்பமானதைத் தேர்வு செய்யலாம். வேண்டியதைத் தேர்வு செய்யலாம். வேண்டாம் என்றால், அந்தச் சேனலை ஒரே தாவலில் தாண்டி அடுத்ததுக்கு ஓடிப் போய்விடலாம். திறந்த பொருளாதாரம், பயனர்கள் கையில் தேர்வை, சுதந்திரத்தை எடுத்துக் கொடுத்தது.
இப்போது ஒவ்வொரு நிகழ்ச்சியும் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த, ஆதாவது, பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கின்றன. இதைத்தான் நான் மகிமை என்று சொன்னேன்.
பொறியியல் கல்லூரியிலும் இதுதான் இப்போது ஏற்பட்டுவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி கல்வியை சேவையாக நினைக்கவில்லையோ, அதேபோல், எந்தப் பெற்றோரும் கல்விச்சாலைகளைக் கோவில்களாகக் கருதுவதில்லை. அது ஓர் வணிகம். கல்வி என்ற சேவை அங்கே விற்பனை செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பை உடனடியாக வழங்கும், அதிகம் பொருளீட்டக் கூடியப் படிப்புகளைச் சொல்லித் தரும் சேவையை இந்தச் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் செய்கின்றன.
கல்வி ஏன் விற்பனைப் பொருளாயிற்று, அதன் புனிதம் எங்கே போச்சு என்றெல்லாம் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அபத்தம். எதுவும் இலவசம் இல்லை, பொருள் நோக்கமற்ற சேவை என்று ஒன்று சாத்தியமே இல்லை. இதுதான் நவீன வாழ்வின் யதார்த்தம். கல்வி வணிகம்தான் என்பதை மனத்தில் வாங்கிக்கொண்டுவிட்டால் (பல பெற்றோர்கள் வாங்கிக்கொண்டுவிட்டார்கள்), இனி கேட்கவேண்டிய கேள்விகளே வேறு.
1. ஒழுங்காக உன்னால் சொல்லித் தர முடியுமா? அதற்குத் தகுதியான ஆசிரியர்களை நீ வைத்திருக்கிறாயா? போதிய ஆய்வுச் சாலைகள் அமைத்திருக்கிறாயா?
2. உன்னால், சர்வதேச அளவில் என் பையனை/பெண்ணைத் தகுதியுள்ளவாராக ஆக்க முடியுமா?
3. சர்வதேச அங்கீகாரம், அக்கிரெடிஷன், அசோசியேஷன் ஏதும் உண்டா?
4. உன்னிடம் பெரிய நிறுவனங்கள் ஆளெடுக்க வருகிறார்களா? கடந்த ஆண்டுகளில் படித்தவர்களில் எத்தனை பேரை இப்படி நீ வேலையில் அமர்த்த உதவியிருக்கிறாய்? என்னென்ன பெரிய நிறுவனங்களின் உன் மாணவர்கள் வேலை செய்கிறார்கள்? எந்த மட்டத்தில் அவர்கள் வேலை செய்கிறார்கள்?
5. கேம்பஸில் என்ன மினிமம் சம்பளம் தர ஒத்துக்கொள்கிறார்கள்? மேக்சிமம்?
அதாவது என் பையனை/பெண்ணை எவ்வளவு திறமையானவனாக அல்ல, எவ்வளவு எம்ப்ளாயபிளாக மாற்றி நீ அனுப்புவாய் என்பதுதான் முக்கியமான கேள்வி.
மேற்படிப்பு பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் முற்றிலும் மாறிப்போன பின்பு, அதாவது அதன் உடனடி யுடிலிட்டிதான் முக்கியம், நீண்டகால ஞானம் அல்ல, என்றான பின்பு, பெற்றோர்கள், பிள்ளைகள் பொறியியல் கல்லூரிகளை அணுகும்விதமும் மாறிப்போய்விட்டது. அதனால், பொறியியல் கல்லூரிகள் கொடுக்கும் விளம்பரங்களின் தன்மையும் மாறிப் போய்விட்டன.
இன்றைக்குப் பெற்றோர்களும் பிள்ளைகளும் மேலே உள்ள கேள்விகளைத்தான் கேட்கிறார்கள். சரியான பதில் வராத கல்லூரிகள்தான் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய ஊர்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாகவோ, 90% மேலோ இருக்கின்றன. வேறு பல ஊர்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை 50% கூட இல்லை.
இந்த ஆண்டு மட்டும் 90 புதிய சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அத்தனை இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில்தான் தேக்கம். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் செய்த ஒரு தவறுதான், இந்தத் தேக்கத்துக்குக் காரணம். பொதுவாக, கட்டடம் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட வசதிகளை மட்டும் செய்துவிட்டு, கல்லூரிகளைத் தொடங்கும் போக்கு இருக்கிறது. மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு உயர, மெல்ல மெல்ல மாணவர்களுக்குத் தேவையான வசதிகளையும் தகுதியான ஆசிரியர்களையும் கொண்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருக்கும் உலகப் பொருளாதாரத் தேக்கம், அதனால் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, புதிய வேலைவாய்ப்பின்மை ஆகியவை, ஒரு சில குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளின் மேல் இருந்த மோகத்தை முற்றிலும் துடைத்தெறிந்துவிட்டன. விளைவு, வசதிகள் அற்ற பல கல்லூரிகளில் மாணவர்கள் சேரத் தயக்கம்.
மேலும், இன்று காலம் கடந்துவிட்டது. இன்று பொறியியல் கல்லூரி தொடங்கும் ஒருவர், இந்தச் சுயநிதிக் கல்லூரிகளிலேயே மிகச் சிறப்பாக இருக்கும் கல்லூரியோடு தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, அங்கே கொடுக்கப்படும் அதிகபட்ச வசதிகளுக்கு இணையாக தானும் செய்ய வேண்டிய நிலைமை. அதாவது நதி ஓடிக்கொண்டு இருக்கிறது. அது சுற்றிச் சுழன்று ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஓடுகிறது. அதன் வேகத்தின் இடையே இறங்கும் ஓர் படகு தானும் அதற்கு இணையாக நகர வேண்டும். அங்கே போய் தள்ளாடினால், மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை.
திறந்த பொருளாதாரம், மதிப்பீடுகளில் தெளிவை உருவாக்கியிருக்கிறது. அதைக் கறாராகப் பெறவேண்டும் என்ற உறுதியைக் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட வேல்யூவைக் கொடுக்காத ஒன்றை சட்டென இடக்கையால் புறமொதுக்கிவிடவும் அது தயங்காது. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் இதுதான் நடக்க இருக்கிறது.
ஓட்டத்தோடு கலக்காத கல்லூரிகள் மெல்ல கரை ஒதுங்கவேண்டியதுதான். நடத்த முடியும் படிப்புகளை நடத்த வேண்டியது, முடியாதவற்றை மூடிவிட வேண்டியது. மொத்தமாக மூட வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தகுதியானவை மட்டுமே தங்கும்.

சராசரிகளின் உலகம்

Posted in அனுபவம், பொது on September 2nd, 2009 by வெங்கடேஷ் – 1 Comment
நாவல் அரசி ரமணி சந்திரனின் ஒரு சில நாவல்களைப் படித்திருக்கிறேன். என்ன எழுதுகிறார், எப்படி எழுதுகிறார் என்று தெரிந்துகொள்ளவதற்காகப் படித்தது. அவ்வப்போது வார இதழ்களில் வரும் தொடர்கதைகளின் அத்தியாயங்களைப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் லட்சுமி எழுதிய காலத்தில் இருந்து ‘ஒரு பெண் துன்பப்படுகிறாள்’ என்பதுதான் எவர்கிரீன் சப்ஜெக்ட். ரமணி சந்திரனும் அதைத்தான் எழுதுகிறார். தனி மொழிக்கான முயற்சியோ, எழுத்துக்கான செறிவோ, இன்னபிற அழகுகளோ இல்லாத தெளிவான எழுத்து. உரையாடலில் இயல்புத்தன்மை குறைவு. ஆனால், அவர்தான் இன்றும் தமிழ் பத்திரிகை உலகில் சூப்பர் ஸ்டார். வாசகியரின் பேராதரவைப் பெற்றவர். அவர் தொடர்கதையை வெளியிட்டால், பத்து பதினைந்து ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்பனை ஆகிறது என்கிறார்கள் பத்திரிகையுலக நண்பர்கள்.
சராசரித் தமிழ் பெண்ணின், ஆணின் எண்ணங்களோடு அவர் எழுத்துக்கள் ஒத்துப்போகின்றன. அவர்கள் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களைத்தான் இவர் தொடர்கதைகளாக எழுதி வருகிறார். அந்தச் சராசரி மனிதனின் தேவைகளை இவரது எழுத்துக்கள் நிறைவு செய்கின்றன. இந்தச் சராசரி மனிதர்களின் தேவைகள்தான் இன்று மிகப் பெரும் சந்தையை இந்தியாவில் உருவாக்கியிருக்கிறது.
இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில், 50% – 65% மதிப்பெண்கள் வாங்கக்கூடிய சராசரிகள்தான் அதிகம். நம் பத்திரிகைகளுக்கும் இன்னபிற சமூக அங்கீகாரங்களுக்கும் 90 – 95%க்கு மேல் வாங்குபவர்கள்தான் கண்ணில் படுகின்றனர். மொத்த ஜனத்தொகையில் இவர்கள் 5% இருந்தால் அதிகம். ஆனால், மீதமுள்ள 95 சதவிகிதத்தினர் இந்தச் சராசரிகள். இந்தியா என்று மட்டுமில்லை, எந்தப் பெரிய ஜனத்தொகை அதிகமுள்ள நாட்டிலும் இந்த சராசரிகள் தீர்மானிப்பதுதான் தீர்மானம். எடுத்துவைப்பதுதான் பொதுக் கருத்துகள். சொல்வதுதான் வேதவாக்கு.
ஏன் இவர்களை ரசனை ரீதியாக, நுண்ணுணர்வு ரீதியாக, கருத்துகள் ரீதியாக, அரசியல் ரீதியாக முன்னேற்றக் கூடாது என்ற கேள்வி அவ்வப்போது எழும். வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல், இன்னபிற காரணிகளால், இவர்கள் பல்வேறு அடுக்குகளில் நிற்கிறார்கள். ஒரு அடுக்கு அடுத்த அடுக்கைவிட உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ பேசுவதில் பொருளில்லை. அந்ததந்த அடுக்கில் இருப்பவர்களுக்கு, அவர்களுடைய உலகமே உலகம். வேறு உலகங்கள் இருப்பதே அவர்களுக்குத் தெரியாது. வேறு விழுமியங்கள் இருப்பதே அவர்களுக்குப் புரியாது. வேறு வகை ரசனை, உணர்வுகள் இருப்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அவசியமும் ஏற்படவில்லை.
நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு துறையும் இந்தச் சராசரிகளுக்கு சேவை செய்யவே உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் புத்திசாலிகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். சராசரிகளுக்குக் கீழே இருக்கும் ஏழை எளிய வசதி வாய்ப்பற்றவர்கள், தங்கள் உடல் உழைப்பை நம்பியே வாழ்ந்துவிட முடியும். ஆனால், சராசரிகள், இரண்டுங்கெட்டான்கள்.
இவர்களை நீ ஏன் புத்திசாலியாக இல்லை, உன் திறமைகளை ஏன் வளர்த்துக்கொள்ளவில்லை என்று கேட்பது மிகவும் அபத்தம். அதே சமயம், அவர்களுக்குப் போதிய திறன்கள் இல்லை என்பதற்காக வாழுவதற்கான் உரிமை இல்லாமல் போய்விட்டார்களா என்ன? எல்லா போட்டிகளிலும் அவர்கள்தான் முட்டி மோதுகிறார்கள். குறுக்கு வழிகளில் புகுந்தேனும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறார்கள். வாழுவதற்கான போராட்டம் அது.
சமீபத்தில் உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். உள்ளாட்சித் தேர்தல்களில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவு செய்து ஜெயித்தவர்கள் உண்டு என்றார் அவர். இவர்களுடைய நோக்கம் என்ன? பணம் சம்பாதிப்பது. தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிக்காரர்களும் பணம் சம்பாதிப்பதில் வேறு வேறு டெக்னிக்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்களும், அதிகாரிகளும் சம்பாதித்தது போகத்தான், உள்ளாட்சிப் பணிகளுக்கு பணம் வந்து சேரும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் தரும் பணம் கோடிக்கணக்கில் இருக்கிறது. ஒவ்வொருத்தரும் எவ்வளவு சாமர்த்தியமாக இருக்கிறார்களோ, அவ்வளவு விரைவாக, அதிகமாகப் பணத்தைச் சேர்க்க முடியும்.
அவர் பேச்சினிடையே சில விஷயங்களைச் சொன்னார். அதுதான் எனக்கு முக்கியமாகத் தோன்றியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்திருக்கும் பலரும் நீண்ட நாள் கட்சிக்காரர்கள், வேறு தொழில் தெரியாதவர்கள், அதிகம் படிப்போ, வாசனையோ இல்லாதவர்கள். ஆனால் கட்சிக்கு விசுவாசமானவர்கள். வெட்டிக்கொண்டு வா என்றால், கட்டிக்கொண்டு வருபவர்கள். அவர்களுடைய வாழ்வுக்கும் ஏதேனும் வழி செய்து ஆகவேண்டுமல்லவா? அவர்களும் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? நேர்மை, அறம் போன்ற கூறுகள் அடிமனத்தில் இருந்தாலும், நாளையைப் பற்றிய பயம், அடுத்த முறை வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற தவிப்பு ஆகியவை இவர்களைச் செலுத்துகின்றன.
இவர்களுக்கு அரசியல் ஒரு தொழில். மக்களுக்குச் சேவை செய்கிறார்கள். சேவையை இலவசமாகச் செய்ய முடியாது அல்லவா? அதற்கு ஒரு சம்பளம் வேண்டுமலலவா? சம்பளம்தான் கொடுக்கிறார்களே? உண்மைதான். அது செய்யும் வேலைக்கு. ஆனால், மக்கள் சேவையில் நாளெல்லாம் செலவு செய்கிறேனே? அந்த முனைப்புக்கு, ஈடுபாட்டுக்கு ஒரு பிரிமியம் வேண்டுமல்லவா? சேவையைச் செய்து, அதற்கு உரிய கட்டணம் பெறலாம், பிரிமியமும் கோரலாம் என்று நமக்கு ஐடி துறை சொல்லிக்கொடுத்திருக்கிறது, அமெரிக்கா சொல்லிக்கொடுத்திருக்கிறது. There is no free lunch. அதைத்தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து ஆரம்பித்து, நாடாளுமன்றம் வரை செய்கிறார்கள்.
சராசரிக்கும் ஸ்மார்ட்னெஸுக்கும் சம்பந்தமில்லை. பணம் சம்பாதிப்பது, செளகரியங்களை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்வது, சரியான சொற்களைப் பேசுவது போன்றவை எல்லாம் இயற்கையாகவே கைவரப் பெற்றவர்கள் உண்டு. சராசரித் தன்மை என்பது அகம், புறம் என்று இரண்டு உலகங்களிலும் உண்டு. புற உலகில் எப்படியாவது தமது நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், மனத்தில் உயர்வு கோருவது கொஞ்சம் பழக்கமற்ற விஷயம்.
ஒருவிதமான ஜாக்கிரதை உணர்வு, தன்னை யாரும் சீண்டிவிடக் கூடாதே என்ற பாதுகாப்பு உணர்வு, தான் எங்கும் வெட்டவெளிச்சமாகிவிடக் கூடாதே என்ற பதற்றம், தனக்குத் தெரிந்ததை அடுத்தவர் அறிந்துவிடக் கூடாதே என்ற துடிப்பு, அதே சமயம் இருக்கும் நாலு சுவருக்குள் ஒருவித சுகமான ராஜாங்கம் நடத்திக்கொண்டு இருப்பதில் செளகரியம் ஆகியவை இவர்களின் பொதுவான குணாதிசயங்கள்.
தன்னை யாரும் சராசரி என்று குறிப்பிட்டு அடையாளப்படுத்திவிடக் கூடாது என்பது அதிதீவிர கவனம் இவர்களுக்கு உண்டு. சராசரிகளோடு மட்டுமே புழங்கும்போது, யாரும் யாருக்கும் உயர்வோ தாழ்வோ இல்லை. ஒப்பிட்டுப் பார்க்கும் பிரச்னையே இல்லை. அப்படியே உயர்வாக இருக்கும் ஒருவரோடு ஒப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டால், அங்கே முடிந்தவரை தமது ஈகோவைத் தற்காத்துக்கொள்ள முனைவது, இல்லையெனில், ஒன்று ஏதேனும் ஒரு குறையைச் சுட்டிக்காட்டித் தன் மேதமையைச் சொறிந்துவிட்டுக்கொள்வது, அல்லது, உயர்வானவரை உயர்வானவர் என்று சொல்லியே தள்ளிவைத்து, பூஜைக்குரியவராக்கிவிடுவது. இதெல்லாம் சாமர்த்தியமாகச் செய்யவேண்டிய விஷயங்கள். அதைப் பலர் திறமையாகச் செய்கிறார்கள்.
பெரும்பாலும் பிரச்னை வருவது, சராசரிகளின் அளவுகோல்களிலும் விழுமியங்களிலும்தான். அதைக் கட்டிக் காப்பதில்தான் இன்னும் அதிகம் பிரச்னை. சுற்றி நாலு பேர் எப்போதும் கற்பனையாக நின்றுகொண்டு இருப்பார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லியே, இவர்கள் வாழ்க்கை முடிந்து போகும்.
சராசரிகளின் பங்கு பற்றி நான் முழுமையாக உணர்ந்துகொண்டது, நான் பணியாற்றிய் நிறுவனம் ஒன்றில் ஆட்களை எடுத்தபோதுதான். அந்த நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறைத் துணைத் தலைவர் என்னிடம் நான் கோரும் ஆட்களுக்கான மிக விரிவான ஜாப் டிஸ்கிரிப்ஷன் எனும் தேவைகளின் பட்டியலை எழுதச் சொன்னார். ‘எதையும் கற்பனையாக நினைத்துக்கொள்ளாதீர்கள். தெளிவாக கருப்பு வெள்ளையில் எழுதிவிடுங்கள்’ என்றார் அவர். ஆறு பதவிகளுக்கான ஜாப் டிஸ்கிரிப்ஷன்களை எழுதினேன். அவரிடம் அனுப்பினேன். அதை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்த அந்த ஹெச். ஆர். துணைத்தலைவர்,
‘இவ்வளவுதானா? இன்னும் மனத்தில் ஏதேனும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?’
‘இப்போதைக்கு இவ்வளவுதான்’ இது நான்.
‘அப்படிச் சொல்லாதீர்கள். உங்கள் தேவைகளை நீங்கள் தெளிவாக்கினால்தான், ஆட்களைத் தேர்வு செய்ய முடியும்.’
‘எல்லாவற்றையும் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை’
‘சொல்லிவிடுவது நல்லது. ஏனெனில், இதுதான் ஒரு குறிப்பிட்ட வேலைத் தேவை என்று நீங்கள் வகுக்கும் எல்லைகள். இந்த எல்லைகள் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம்.’
‘ஆனால், கிடைக்கும் நபரின் திறமைகளை இன்னும் உபயோகித்துக்கொள்ளலாமே?’
‘அப்படி நடக்காது வெங்கடேஷ். எப்படி நடக்கும் என்று சொல்கிறேன் கேளுங்கள். இந்தத் தேவைகளை நிறைவு செய்யும் ஓர் அற்புதமான நபர் கிடைக்கலாம். அல்லது இதை அப்படியே செய்து முடிக்கும் சராசரியான நபர் கிடைக்கக் கூடும். மூன்றாவது, இதையெல்லாம் செய்யக்கூடியவர், ஆனால், உற்சாகமற்றவர் கிடைக்க்க் கூடும். நமது தேடல், இந்த அற்புதமான நபரை நோக்கித்தான் இருக்கும். ஆனால், பல சமயங்களில், சொன்ன வேலையைச் எந்த ஒரு வில்லங்கமும் இல்லாமல் செய்துமுடிக்கும் சராசரியே கிடைத்தால் போதும் என்ற அளவில்தான் வந்து நிற்போம்.’
நான் யோசிக்கத் தொடங்கினேன்.
‘அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சரியான வழி, எதிர்பார்ப்புகளை வரையறை செய்துகொள்ளுவது. வரையறை என்பது கால்பந்தாட்ட மைதானம் மாதிரி. அதற்குள் விளையாடத் தெரிந்தால் போதும். வெளியே போய் அதே நபர் கிரிக்கெட்டும் விளையாட வேண்டும் என்று எதிர்பாப்பதெல்லாம், நடக்காத விஷயம்.
’ஏம், கால்பந்தோடு கிரிக்கெட்டும் விளையாடத் தெரிந்தவன் இருக்கமாட்டானா? அவனை நாம் தேடக் கூடாதா?’
‘முதலில், நாம் கண்ணைக் கட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். பள்ளியில் இருந்து தொடங்கி, நமது மாணவர்களை ஒரே விதமாகத்தான் வளர்த்திருக்கிறோம். இது சராசரிகளை உற்பத்தி செய்யும் கல்வி முறை. சராசரிகளைப் பேணும் சமூக வாழ்க்கை. இங்கே சராசரிகளால்தான் சகஜமாக வாழ முடியும். தேவையில்லாமல் எதிர்ப்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு துன்பப்படக் கூடாது.’
தெரியவில்லை. இதுதான் உண்மை நிலைமை போலும்.

ஹார்ன் அடிப்பவர்கள்: சில குறிப்புகள்

Posted in அனுபவம், பொது on August 19th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

கடந்த பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக நான் டூவீலர் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். என்னிடம் இருக்கும் டிவிஎஸ் மேக்ஸ் 100 ஆர் வண்டிக்கு ஒன்பது ஆண்டுகள் சர்வீஸ். அதற்கு முன்னர் பஜாஜ் எம்.80. கல்லூரிக் காலம் முழுவதும் பஸ். வண்டி ஓட்டுவது மாதிரியான இனிமையான அனுபவம் எதுவுமே இல்லை. வண்டி ஓட்ட ஆரம்பித்தவுடன் என் கற்பனைக் குதிரை சட்டென வேகம் பிடிக்கத் தொடங்கிவிடும். அன்று காலை படித்த செய்தி, எழுந்தவுடன் முணுமுணுக்க ஆரம்பித்த பாடல், ஆதித்யா சேனலில் ரசித்த ஏதேனும் ஒரு நல்ல காமெடி, என் மகள் தெரிவித்த ஒரு பள்ளி அனுபவம் என்று ஒன்று மற்றொன்றைத் தொட்டு ஓடிக்கொண்டு இருக்கும். திடீரென்று, ஒரு அவசரக்காரன் என் பக்கத்தில் வந்து காட்டுக் கத்தலாய் ஹாரன் அடிக்க ஆரம்பித்து, என்னை ஒரு சில நொடிகள் நிலைகுலைய வைத்துவிடுவான். ஒரு சில நொடிகள் தான். ஆனால், அதன் பாதிப்பு நாள் முழுவதும் இருக்கும்.

என்ன காரணமாக இவ்வளவு அவசரம், அவன் முகம் எப்படி இருக்கும் என்றெல்லாம் மனத்தில் எதுவுமே பதிந்திருக்காது. வாகனக் கூட்டத்துக்குள் நுழைந்து ஒரு சில நொடிகளுக்குள்ளேயே அவன் காணாமல் போயிருப்பான். காதைக் கிழித்த அந்த ஹாரன் சப்தமும் அது ஏற்படுத்திய பதற்றமும் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். பெரும்பாலும் ஏதேனும் உணவுப் பண்டங்களை எடுத்துச் செல்பவர்கள்தான் இப்படிப் பறப்பார்கள். முன்பெல்லாம், ஜிஎஸ்டி சாலையில் தலைதெறிக்க ஓடும் மணல் லாரிகள் மாதிரி, பிட்சா ஹட் டெலிவரி பணியாளர்கள் வண்டி ஓட்டுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் பிட்சாவைக் கொண்டுபோய் வீடுகளில் சேர்க்கவேண்டும் என்ற சர்வீஸ் கமிட்மெண்ட்(!), இந்தக் களேபரத்துக்குக் காரணம். இப்போது பிட்சா ஹட் பையன்களை அதிகம் காணவில்லை.

சாலையில் வண்டியில் போகும்போது அவசரக்காரர்களை நீங்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.

1. உடலை 45 டிகிரி முன்னே வளைத்துக்கொண்டு, ரேஸில் வண்டியோட்டும் பாணியில் ஹாண்டில்பாரைப் பிடித்திருப்பார்கள்.
2. வண்டியின் வேகத்தைக் கூட்ட, சைலன்சர்களைக் கழட்டிவைத்துவிட்டிருப்பார்கள். ஹெல்மெட், பெட்ரோல் டாங்க் மேல் சயனித்திருக்கும்.
3. சிக்னல்களில், ஆம்பரில் இருந்து சிவப்பு விளக்கு எட்டிப் பார்க்கும் கடைசிக் கணத்தில், நிறுத்தக் கோட்டைத் தாண்டுவார்கள்.
4. அப்படியே சிக்னலில் நிற்கவேண்டியதாகிவிட்டால், சிவப்பு விளக்கு பச்சைக்கு மாறுவதற்குள் பைக்கைக் கியர் மாற்றி சாலை நடுவே கொண்டுவந்துவிட்டிருப்பார்கள்.
5. டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டுவிட்டால், எல்லா சந்துகள் வழியேயும் வெளியே வந்துவிடத் துடிப்பார்கள். சட்டென பிளாட்பாரத்தில் ஏறி வண்டியோட்டுவார்கள். சாலை நடுவே தடுப்பு இல்லையென்றால், எதிர்ப்பக்கம் பாய்வதில் மன்னர்கள்.
6. எல்லாவற்றையும்விட முக்கியமானது, இவர்களுக்கு பேரல்லல் பார்க்கிங் என்றால் என்னவென்றே தெரியாது. கோணல்மாணலாக நிறுத்துவது ஸ்டைல். சைட் ஸ்டேண்ட் போடுவது மற்றொரு ஸ்டைல்.

இவர்கள் கூட்டமான சாலையில்தான் ஹாரன் அடிப்பார்கள் என்றில்லை. சாலையில் யாருமே இல்லையென்றாலும் ஹாரன் அடிப்பார்கள். ஏனெனில், உள்ளே இருக்கும் வேகம், பதற்றமாக வெளிப்படுகிறது. மனத்துக்குள் எங்கேயோ அவசரமாகப் போய், எதையோ செய்து முடிக்கவேண்டும் என்று பரபரக்கிறது. சாலை, மிகப் பெரிய இம்சையாக இருக்கிறது. தொலைவு, ரொம்ப எதார்த்தமாக இருக்கிறது. தூரம், ஸ்தூலமாக இருக்கிறது. காற்றில் இறக்கைக் கட்டிப் பறந்துவிட்டால், எப்படி இருக்கும்? அது சாத்தியமில்லை என்பதால், சாலையில் போக வேண்டியிருக்கிறது. சாலையில் இவர்கள் வண்டியை ஓட்டுவது இல்லை. நதியைக் கடப்பது போல், இவர்கள் சாலையைக் ‘கடக்கிறார்கள்’.

இது நடுவே வரும் எந்த ஒரு சின்ன இடைஞ்சலும் பெரிய தலைவலியாகத் தெரிகிறது. முன்னால் வண்டியோட்டுபவன் பெரிய துரோகி. பக்கத்தில் ஓட்டுபவனோ போட்டியாளன். இருவரையும் மிஞ்சிவிட வேண்டும். டிராபிக் ஜாம்மில்தான் இவர்களின் பரிதாப அவசரம் இன்னும் தெளிவாகத் தெரியும். டிராபிக் ஜாம் என்பது ஒரு கிரைசிஸ் (crisis). பொறுமையை, வலிமையை, தாக்குபிடிக்கும் சக்தியை சோதனை செய்யும் தருணம் அது. மனத்துக்குள் இதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அது நிஜ வாழ்வின் ஓர் எதார்த்த தருணம். எப்படியும் இதில் இருந்து ‘கடந்து’விட வேண்டும். அந்தத் துன்பத்தை ‘அனுபவிக்க’ முடியாது; அதைத் ‘தொலைத்து’விட்டு, ‘கடந்துவிட்டு’, அடுத்த கட்டத்துக்கு ஓடிப் போய்விட வேண்டும்.

டிராபிக் ஜாம் ஆண்களுக்கு ஒருவிதமான கிரைசிஸ் என்றால், பெண்களுக்கு அது வேறுவிதமான கிரைசிஸ். துரியோதன, துச்சாதன கூட்டத்துக்கு நடுவே சிக்கிக்கொண்டுவிட்ட திரெளபதி தவிப்பு, அவர்கள் பார்வையில் தெரியும். சட்டென உடைகளை இழுத்து மூடிக்கொள்ளும் வேகத்தில் அது இன்னும் தெளிவாகத் தெரியும். கிடைக்கும் சந்துக்குள் புகுந்து வெளியேறிவிட வேண்டும் என்ற அவசரம் மிக அதிகமாக இருக்கும்.

இதுபோன்ற தருணங்களில்தான் ஹாரன் அலற ஆரம்பிக்கும். எனக்கு வழிவிடு, நான் தப்பித்துப் போய்விடுகிறேன் என்ற அலறல் அது.

வளர்ந்த பண்பாடு நிறைந்த சமூகங்களில் ஹாரன் என்பது ஒரு அநாகரிகம். நான் பார்த்த வெளிநாடுகளில் எல்லாம் காரில் செல்பவர்கள் ஹாரன் அடிக்கத் தயங்குவார்கள். முன்னே செல்பவனைத் தவறு செய்கிறாய் என்று சொல்லாமல் சொல்கிறது நம் ஹாரன். அதனால், அதை அடித்து அவனைக் கொச்சைப்படுத்தக்கூடாது. அவனை இம்சை செய்யக் கூடாது. அவனது வண்டியோட்டும் அனுபவத்தைக் கெடுக்கக்கூடாது. அவனுக்கு அவனது தவறைச் சுட்டிக்காட்ட மட்டுமே ஹாரம் அடிக்க வேண்டும்.

ஆனால், நம்ம ஊரிலோ அதற்கு நேர் மாறாக எல்லாம் இருக்கிறது. ஹாரன் அடிப்பவர்களுக்கும் நாகரிகம் இல்லை. அதைக் கேட்டு ஒதுங்கவேண்டியவர்களும் அதைச் சட்டை செய்வதில்லை. ஹாரன் அடிப்பது போதைப் பழக்கம் மாதிரி. விரல்கள் தன்னால் ஹாரன் அருகே போய்க்கொண்டே இருக்கும். இன்னொரு வகையில் சொல்லப்போனால், அது ஓட்டுபவனின் பயத்தையே பெரும்பாலும் பிரதிபலிப்பதாக இருக்கும். என் மேல் மோதிவிடாதே, நான் வந்துகொண்டிருக்கிறேன் என்பதற்கான சமிக்ஞை ஹார்ன்.

வேறு வகையில் சொல்லவேண்டுமானால், இவர்கள் அடுத்தவர்களை நேசிக்கத் தெரியாதவர்கள். மனத்துக்குள் தனித் தீவுகளாகி இருப்பவர்கள். ஜோவெனப் பெய்யும் மழை கூட, இவர்களுக்கு ‘சனியன் பிடிச்ச மழை’தான். வெயிலை இயல்பாக மனத்துக்குள் வாங்கிக்கொண்ட இவர்களால், அருமழையை வாங்கிக்கொள்ளத் தெரியவில்லை. மழையில் ‘மாட்டி’க்கொண்டுவிட்டோம் என்றுதான் இதைச் சொல்வார்கள்.

இந்தக் குணங்கள் இவர்களை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. சிக்னல்களில் நிற்கும்போது, வேண்டுமென்றே பக்கத்தில் பேச்சு கொடுப்பேன். ‘இந்த ரோடுல ஐசிஐசிஐ பேங்க் ஏடிஎம் எங்க இருக்கு தெரியுமா?’ அல்லது ‘இந்த ரோடுல போனா மெரினா பீச் வருமா?’ என்று கேட்பேன். பத்தில் ஒன்பது பேர் தெரியாது என்று உதட்டைப் பிதுக்குவார்கள். அவர்களுக்கு சாலை தெரியும். இரண்டு பக்கமும் இருக்கும் கடைகளோ, கோவில்களோ இன்னபிற முக்கிய இடங்களோ அவர்கள் மனத்தில் பதிந்தே இருக்காது. அழகைப் பருகத் தெரியாதவர்கள்.

சாலையும் வாகனமும் அவர்களைப் பொறுத்தவரை, உபயோகப் பொருள்கள். அதன் உபயோகம்தான் அவர்களின் நினைவில் பதிந்திருக்குமே தவிர, இந்த உபகரணங்களைக் கொண்டு வாழ்வை ரசிக்க முடியும், அனுபவிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

நகரம் நிறைய விஷயங்களை இழக்க வைத்திருக்கிறது. அதில் முக்கியமானது, நமது ரசனை.