உள்ளடக்கமும் விலையும் – கடிதம்
புதிய தலைமுறை வாங்கிப் படித்தேன். ஏமாற்றமே அடைந்தேன். தலைப்பைத் தவிர எதுவும் புதிதில்லை. அரைச்ச மாவே எங்கும். அது வியாபாரமானால் அதன் குறைந்த விலைக்காகத்தானே தவிர அதன் உள்ளடக்கத்திற்காக அல்ல. நொந்தசாமி படம் போல பல பத்திரிகைகளின் கதம்பம்தான் இது. இது என் ஆழ்ந்த கருத்தை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது. அது – அனுபவம் (அதிக அனுபவம்) புதுமையை தர முடியாது என்பது. ஆசிரியர் குழுவில் உள்ள அனைவரும் பழுத்த அனுபவம் உள்ளவர்கள். அவர்களால் புதுமையை தர முடியாது என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
புதிய தளைமுறை நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் அதன் குறைந்த விலையாலும், வியாபாரத் தந்திரத்தினாலும்தான்.
இந்தியாவின் சாபமான பழுத்த அனுபவத் தேவை இதிலும் குறை சேர்க்கிறது.
Regards,
Kumar…
அனுபவம் வேறு;சிந்தனை வேறு.
விகடன், குமுதம், டி.வி. சானல்கள் அனைத்திலும் அனுபவம் மிக்கவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள். அங்கும் அரைத்த மாவைத்தான் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். பானை காலி; அகப்பையில் எப்படி வரும்?
கல்கியை எடுத்துக்கொள்ளுங்கள். கல்கியின் பழைய எழுத்துக்களையும் பரமாச்சார்யர் சொன்னவற்றையும் மீண்டும் மீண்டும் பரிமாறுகிறார்கள்.
நவநவமான சிந்தனைகள் வறண்ட நிலத்தில் முளைக்கும் என்று எதிர்பார்ப்பது நமது அறிவீனம்.
அத்தி பூத்தாற்போல எப்போதாவது மலரும் புதிய சிந்தனைக் குருத்துக்களை அனுபவித்து ஏக்கத்தைத் துடைத்துக்கொள்ளவேண்டியது தான்.