மாணவர்களுக்குக் காத்திருக்கும் பொக்கிஷம்
டி.ஆர்.சந்தானக்கிருஷ்ணன் என்ற டி.ஆர்.எஸ். என் மெண்டர்களில் ஒருவர். சிஃபி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர். பின்னர் சதர்லேண்ட் குளோபல் லிமிடெட்டின் தலைமை நிதி அதிகாரி. இப்போது அவர் டாரஸ்குவெஸ்ட் நிறுவனத்தின் சேர்மன். நிதி, பொருளாதாரம், கணக்கியல் என்று பல துறைகளில் புலி. சார்ட்டெட் அக்கவுன்டண்ட். அவருடைய அருகாமையே அடுத்தவர்களுக்கு உற்சாகத்தைத் தரும்.
புத்தகங்கள் வாசிப்பதில் தணியாத ஆர்வம் உடையவர். தமிழ் புத்தகங்கள் என்றால் இன்னும் உயிர். பல தமிழ்க் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்லுவார். மேடைப் பேச்சில் திறமையானவர். அவருடைய புத்தக ஆர்வத்தை இப்போது இன்னும் பயனுடைய ஒரு முயற்சியாக மாற்றியிருக்கிறார். புக்ஸ் டு கிட்ஸ் (http://bookstokids.blogspot.com) என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கிறார் டி.ஆர்.எஸ். பத்தாயிரம் புத்தகங்களை பத்தாயிரம் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் அவர் குறிக்கோள். இலவசமாக அல்ல. மாணவர்கள் அந்தப் புத்தகங்களைப் பெற தங்கள் திறன்களை வெளிப்படுத்த வேண்டும். அந்தத் திறமைகளுக்கு வெகுமதியாக, அவர்கள் புத்தகங்களைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் குறித்தும், அதன் நடைமுறைகள் குறித்தும் ஒரு மினி இமெயில் பேட்டி இதோ:
1. ஒரு சிறுவனுக்கு ஒரு புத்தகம் (Books To Kids) என்ற இந்தக் கருத்து எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது?
பதில்: இந்தியாவைப் பற்றி எவ்வளவோ புத்தகங்கள் வந்திருந்தாலும், இரண்டு வருடங்களுக்கு முன் ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு – காந்திக்குப் பின்” புத்தகத்தை படித்த போது நமது அண்மைக்கால முன்னேற்றம் பற்றிய ஒரு புதிய வியப்பு ஏற்பட்டது. இதைப்பற்றி மே 2007ல் என்னுடைய “Top Rack ” மின்பதிவில் எழுதும்போது, ஒவ்வொரு இந்திய சிறுவனும் சிறுமியும் படிக்க வேண்டிய புத்தகம் என்று எழுதி இருந்தேன். மீண்டும் இதைத் தமிழில் படிக்க நேரிட்ட போதும் இதே எண்ணம் தோன்றியது. ”Books To Kids “ம் தோன்றியது.
2. இந்தப் புத்தகங்களை எந்தச் சிறுவர்களிடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறீர்கள்? எப்படிச் சேர்க்கப் போகிறீர்கள்? இதில் அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் எங்கே நடைபெறுகின்றன? மாணவர்கள் எப்படி இதில் பங்கேற்பது?
பதில்: பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர் மாணவியர்க்கு. பங்கேற்கும் பள்ளிகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் கட்டுரை அல்லது பேச்சுப் போட்டிகள் நடத்தி, பள்ளி ஆசிரியர்கள் முடிவின் படி சிறந்த உரைகளுக்கு பரிசாக. (இதனால் இது ஒரு அன்பளிப்பாக இல்லாமல், விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதப்படும்). பங்கேற்கும் பள்ளிகளில் வெளியிடப்படும் அறிவிப்பைத் தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் பள்ளிகள் எங்களை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.
3. பதிப்பாளர்கள் இந்தத் திட்டத்தில் எப்படிப் பங்கேற்பது?
பதில்: புத்தகங்களை வாங்கித் தருபவர்கள் தேர்வு செய்கிறார்கள். நாங்களே பதிப்பாளரை நாடி சில சலுகைகளோடு வாங்க ஏற்பாடு செய்வோம். ஒரு உதாரணம்: குஹாவின் நூலை வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் எங்களுக்கு விலை குறிப்பும் கொடுத்து, பள்ளிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து, புத்தகங்களை நேரடியாகக் கொண்டு சென்றுக் கொடுத்து பெரும் உதவி செய்துள்ளனர்.
4. புத்தகங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினர் மேல் ஆர்வம் கொண்டவர்கள், இந்தத் திட்டத்துக்கு எப்படி உதவிகரமாக இருக்க முடியும்?
பதில்: எங்களை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம். என்ன புத்தகம், எவ்வளவு பேருக்கு என்று தெரிவித்தால் நாங்கள் பதிப்பகத்தாருடன் தொடர்பு கொண்டு எவ்வளவு விலை என்று கண்டறிந்து யார் பெயருக்கு எவ்வளவு காசோலை தர வேண்டும் என்று தெரியப்படுத்துவோம். (கிழக்கு பதிப்பகம் புத்தகங்கள் என்றால் சிறிது வசதி). புக்ஸ் டு கிட்ஸ் ஒரு தொண்டு. இதற்கு வங்கிக் கணக்கு கிடையாது. இதற்கு பதிப்பகத்தினருடன் கமர்ஷியல் தொடர்பு கிடையாது.
பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை பொக்கிஷமாக வழங்க விரும்புவோர், டி.ஆர்.சந்தானக்கிருஷ்ணனை தொடர்புகொள்ளலாம். இமெயில்: bookstokids@gmail.com.

TR Santhanakrishnan