இந்த ஆண்டு (2009) தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில், ஒரு மாதம் நடைபெற்று, 12 ஆகஸ்டு அன்று முடிவு பெற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதெல்லாம் அரசு கோட்டா என்று சொல்லப்படும் சீட்டுகளுக்கு நடந்த கலந்தாய்வு. 35% சீட்டுகளை, கல்லூரிகளை நடத்தும் நிர்வாகங்களே மேனேஜ்மெண்ட் கோட்டாவில் நிரப்பிக்கொண்டன. இந்தக் கலந்தாய்வின் முடிவில் கிட்டத்தட்ட 30,199 சீட்டுகள் நிரப்பப்படாமல் தேங்கிப் போயின. தமிழ்நாட்டில், 440 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதில் 6 கல்லூரிகளில் 10 % சீட்கள் கூட நிரம்பவில்லை. 20% சீட்டுகள் நிரம்பிய கல்லூரிகள் எண்ணிக்கை 26, 30% சீட்டுகள் நிரம்பிய கல்லூரிகள் எண்ணிக்கை 34.
சீட்டுகள் நிரம்பாமல் போனதைப் பற்றி பல கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். ஓவர் சப்ளையே முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. 1980களில் பொறியியல் படிக்க வந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்லூரிகள் இல்லாமல் இருந்தன. அப்போதுதான், கர்நாடகத்தைப் பின்பற்றி, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியை எம்.ஜி.ஆர். அரசு வழங்கியது. 1990 களில் நடந்த முக்கிய மாற்றங்களில் ஒன்று சந்தைப் பொருளாதாரம், தனியார் பங்கேற்பு, திறந்த வணிகம். கல்வி, குறிப்பாக பொறியியல்/ மருத்துவக் கல்வி, இந்தச் சந்தைப் பொருளாதாரத்தின் கருத்தை அடியொற்றி உருவாயின.
இன்றைக்கு இவ்வளவு சீட்டுகள் நிரப்பப்படாமல் தேங்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது, சந்தைப் பொருளாதாரத்தின் மகிமை புரிபடத் தொடங்குகிறது. அப்படியென்ன பெரிய மகிமையைக் கண்டுவீட்டீர்கள் என்று கேட்பவர்களுக்கு, இன்னொரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு இதைச் சொன்னால் இன்னும் தெளிவாக விளங்கும்.
தூரதர்ஷன் மட்டுமே ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்று இருந்தபோது, அவர்கள் போட்டதுதான் நிகழ்ச்சிகள், அவர்கள் காண்பித்ததுதான் திரைப்படங்கள், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள். வெரைட்டி என்பது மருந்துக்கும் இருந்ததில்லை. பார்வையாளர்கள், பயனர்கள் தேர்வு என்பது இருந்ததே இல்லை. தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வருகை இந்த நிலையில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. ஒரு சில நொடிகளில், உங்கள் நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவரவில்லை என்றால், ரிமோட் முனையில் சானல் தாவல் நிச்சயம். இன்றைக்கு நிலைமையைப் பாருங்கள், சின்னதும் பெரியதுமாக ஜெனரல் எண்டர்டெயின்மெண்ட் சானல்களே ஒரு பத்து சானல்கள் இருக்கின்றன. விருப்பமானதைத் தேர்வு செய்யலாம். வேண்டியதைத் தேர்வு செய்யலாம். வேண்டாம் என்றால், அந்தச் சேனலை ஒரே தாவலில் தாண்டி அடுத்ததுக்கு ஓடிப் போய்விடலாம். திறந்த பொருளாதாரம், பயனர்கள் கையில் தேர்வை, சுதந்திரத்தை எடுத்துக் கொடுத்தது.
இப்போது ஒவ்வொரு நிகழ்ச்சியும் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த, ஆதாவது, பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கின்றன. இதைத்தான் நான் மகிமை என்று சொன்னேன்.
பொறியியல் கல்லூரியிலும் இதுதான் இப்போது ஏற்பட்டுவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி கல்வியை சேவையாக நினைக்கவில்லையோ, அதேபோல், எந்தப் பெற்றோரும் கல்விச்சாலைகளைக் கோவில்களாகக் கருதுவதில்லை. அது ஓர் வணிகம். கல்வி என்ற சேவை அங்கே விற்பனை செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பை உடனடியாக வழங்கும், அதிகம் பொருளீட்டக் கூடியப் படிப்புகளைச் சொல்லித் தரும் சேவையை இந்தச் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் செய்கின்றன.
கல்வி ஏன் விற்பனைப் பொருளாயிற்று, அதன் புனிதம் எங்கே போச்சு என்றெல்லாம் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அபத்தம். எதுவும் இலவசம் இல்லை, பொருள் நோக்கமற்ற சேவை என்று ஒன்று சாத்தியமே இல்லை. இதுதான் நவீன வாழ்வின் யதார்த்தம். கல்வி வணிகம்தான் என்பதை மனத்தில் வாங்கிக்கொண்டுவிட்டால் (பல பெற்றோர்கள் வாங்கிக்கொண்டுவிட்டார்கள்), இனி கேட்கவேண்டிய கேள்விகளே வேறு.
1. ஒழுங்காக உன்னால் சொல்லித் தர முடியுமா? அதற்குத் தகுதியான ஆசிரியர்களை நீ வைத்திருக்கிறாயா? போதிய ஆய்வுச் சாலைகள் அமைத்திருக்கிறாயா?
2. உன்னால், சர்வதேச அளவில் என் பையனை/பெண்ணைத் தகுதியுள்ளவாராக ஆக்க முடியுமா?
3. சர்வதேச அங்கீகாரம், அக்கிரெடிஷன், அசோசியேஷன் ஏதும் உண்டா?
4. உன்னிடம் பெரிய நிறுவனங்கள் ஆளெடுக்க வருகிறார்களா? கடந்த ஆண்டுகளில் படித்தவர்களில் எத்தனை பேரை இப்படி நீ வேலையில் அமர்த்த உதவியிருக்கிறாய்? என்னென்ன பெரிய நிறுவனங்களின் உன் மாணவர்கள் வேலை செய்கிறார்கள்? எந்த மட்டத்தில் அவர்கள் வேலை செய்கிறார்கள்?
5. கேம்பஸில் என்ன மினிமம் சம்பளம் தர ஒத்துக்கொள்கிறார்கள்? மேக்சிமம்?
அதாவது என் பையனை/பெண்ணை எவ்வளவு திறமையானவனாக அல்ல, எவ்வளவு எம்ப்ளாயபிளாக மாற்றி நீ அனுப்புவாய் என்பதுதான் முக்கியமான கேள்வி.
மேற்படிப்பு பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் முற்றிலும் மாறிப்போன பின்பு, அதாவது அதன் உடனடி யுடிலிட்டிதான் முக்கியம், நீண்டகால ஞானம் அல்ல, என்றான பின்பு, பெற்றோர்கள், பிள்ளைகள் பொறியியல் கல்லூரிகளை அணுகும்விதமும் மாறிப்போய்விட்டது. அதனால், பொறியியல் கல்லூரிகள் கொடுக்கும் விளம்பரங்களின் தன்மையும் மாறிப் போய்விட்டன.
இன்றைக்குப் பெற்றோர்களும் பிள்ளைகளும் மேலே உள்ள கேள்விகளைத்தான் கேட்கிறார்கள். சரியான பதில் வராத கல்லூரிகள்தான் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய ஊர்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாகவோ, 90% மேலோ இருக்கின்றன. வேறு பல ஊர்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை 50% கூட இல்லை.
இந்த ஆண்டு மட்டும் 90 புதிய சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அத்தனை இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில்தான் தேக்கம். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் செய்த ஒரு தவறுதான், இந்தத் தேக்கத்துக்குக் காரணம். பொதுவாக, கட்டடம் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட வசதிகளை மட்டும் செய்துவிட்டு, கல்லூரிகளைத் தொடங்கும் போக்கு இருக்கிறது. மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு உயர, மெல்ல மெல்ல மாணவர்களுக்குத் தேவையான வசதிகளையும் தகுதியான ஆசிரியர்களையும் கொண்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருக்கும் உலகப் பொருளாதாரத் தேக்கம், அதனால் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, புதிய வேலைவாய்ப்பின்மை ஆகியவை, ஒரு சில குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளின் மேல் இருந்த மோகத்தை முற்றிலும் துடைத்தெறிந்துவிட்டன. விளைவு, வசதிகள் அற்ற பல கல்லூரிகளில் மாணவர்கள் சேரத் தயக்கம்.
மேலும், இன்று காலம் கடந்துவிட்டது. இன்று பொறியியல் கல்லூரி தொடங்கும் ஒருவர், இந்தச் சுயநிதிக் கல்லூரிகளிலேயே மிகச் சிறப்பாக இருக்கும் கல்லூரியோடு தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, அங்கே கொடுக்கப்படும் அதிகபட்ச வசதிகளுக்கு இணையாக தானும் செய்ய வேண்டிய நிலைமை. அதாவது நதி ஓடிக்கொண்டு இருக்கிறது. அது சுற்றிச் சுழன்று ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஓடுகிறது. அதன் வேகத்தின் இடையே இறங்கும் ஓர் படகு தானும் அதற்கு இணையாக நகர வேண்டும். அங்கே போய் தள்ளாடினால், மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை.
திறந்த பொருளாதாரம், மதிப்பீடுகளில் தெளிவை உருவாக்கியிருக்கிறது. அதைக் கறாராகப் பெறவேண்டும் என்ற உறுதியைக் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட வேல்யூவைக் கொடுக்காத ஒன்றை சட்டென இடக்கையால் புறமொதுக்கிவிடவும் அது தயங்காது. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் இதுதான் நடக்க இருக்கிறது.
ஓட்டத்தோடு கலக்காத கல்லூரிகள் மெல்ல கரை ஒதுங்கவேண்டியதுதான். நடத்த முடியும் படிப்புகளை நடத்த வேண்டியது, முடியாதவற்றை மூடிவிட வேண்டியது. மொத்தமாக மூட வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தகுதியானவை மட்டுமே தங்கும்.

Tags: Engineering Admission, பொறியியல் கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கை
/மொத்தமாக மூட வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தகுதியானவை மட்டுமே தங்கும்./
உங்களுடைய நம்பிக்கை என்னை அசர வைக்கிறது! எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?
கல்வி என்பது வணிகமாகவும், வணிகம் என்பது அரசியலாகவும் கலப்படமாய் இருக்கிற இன்றைய சூழலில்,அதுவும் பாதிக்கு மேலான கல்லூரிகளை அரசியல் வாதிகளே, பெரும்புள்ளிகளே நடத்திக் கொண்டிருக்கும்போது, இப்படி கற்பனை செய்வது கூட இயலாத காரியம்தான்!
சீட்டுக்குப் பேரம் பேசின மந்திரியின் கல்லூரி விவகாரம் என்ன ஆயிற்று? இன்னொரு மருத்துவக் கல்லூரி இன்ன விலைக்குத் தான் சீட் என்று பேரம் பேசினதை ஒளிபரப்பினார்களே என்ன ஆயிற்று?
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி!
முதலில் பேயோட்ட வேண்டும்! அப்புறம் தான் கனவு கூட, நிம்மதியாகக் காண முடியும்!
கல்வி ஏன் விற்பனைப் பொருளாயிற்று, அதன் புனிதம் எங்கே போச்சு என்றெல்லாம் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அபத்தம். எதுவும் இலவசம் இல்லை, பொருள் நோக்கமற்ற சேவை என்று ஒன்று சாத்தியமே இல்லை. இதுதான் நவீன வாழ்வின் யதார்த்தம். கல்வி வணிகம்தான் என்பதை மனத்தில் வாங்கிக்கொண்டுவிட்டால் (பல பெற்றோர்கள் வாங்கிக்கொண்டுவிட்டார்கள்), //
You mean to say we dont need to ask these questions at all. It is foolish to ask these question. But worth question, no answer. These analysis taking care of middle and upper middle class segments only which is high aspirational group..
/1. ஒழுங்காக உன்னால் சொல்லித் தர முடியுமா? அதற்குத் தகுதியான ஆசிரியர்களை நீ வைத்திருக்கிறாயா? போதிய ஆய்வுச் சாலைகள் அமைத்திருக்கிறாயா?
2. உன்னால், சர்வதேச அளவில் என் பையனை/பெண்ணைத் தகுதியுள்ளவாராக ஆக்க முடியுமா?
3. சர்வதேச அங்கீகாரம், அக்கிரெடிஷன், அசோசியேஷன் ஏதும் உண்டா?
4. உன்னிடம் பெரிய நிறுவனங்கள் ஆளெடுக்க வருகிறார்களா? கடந்த ஆண்டுகளில் படித்தவர்களில் எத்தனை பேரை இப்படி நீ வேலையில் அமர்த்த உதவியிருக்கிறாய்? என்னென்ன பெரிய நிறுவனங்களின் உன் மாணவர்கள் வேலை செய்கிறார்கள்? எந்த மட்டத்தில் அவர்கள் வேலை செய்கிறார்கள்?
5. கேம்பஸில் என்ன மினிமம் சம்பளம் தர ஒத்துக்கொள்கிறார்கள்? மேக்சிமம்?
அதாவது என் பையனை/பெண்ணை எவ்வளவு திறமையானவனாக அல்ல, எவ்வளவு எம்ப்ளாயபிளாக மாற்றி நீ அனுப்புவாய் என்பதுதான் முக்கியமான கேள்வி./
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகிடைத்துவிடுமா என்ன?
அது என்ன திறந்த நிலைப் பொருளாதாரம்? வேறு வழியே இல்லாமல், நரசிம்மராவ்கள் பிரதமராகவும், மன்மோகன் சிங்குகள் நிதியமைச்சராகவும் இருந்தபோது வந்தது. இப்போது, இலவச கலர் டீவீக்களாகவும், இன்னபிற சலுகைகளாகவும் ஆகிவிட்ட நிலையில் திறந்தநிலை எங்கே இருக்கிறது என்பதைக் கொஞ்சம் சொல்ல முடியுமா?