தமிழ் பதிப்புலகம் – கடிதம் 1

அன்புள்ள நண்பருக்கு,
இது நீங்கள் எனக்கு அனுப்பும் இரண்டாவது இதழ்.
முந்தைய இதழை படித்தவுடனேயே உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து நேரமின்மையால் தள்ளிப்போட்டு பிறகு மறந்தே போனேன்.  இந்த இதழைப் படித்து முடித்தவுடனே உடனே பதில் எழுத வேண்டும் என்று தோன்றியது.
தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்:
உங்களுடைய அனைத்து கருத்துகளுடன் உடன்படுகிறேன். என்னுடைய எண்ணமும் அதுவேதான். நானும் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு புத்தக வினியோக நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறேன் (Higginbothams). அப்போதே நீங்கள் கூறியவற்றை நேரிலேயே உணர்ந்திருக்கிறேன். இன்றும் அதே நிலை நீடிப்பதை காணும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. புத்தக வினியோகத்தில் ஆங்கில புத்தகங்களுக்கு இணையாக நம்மால் வரவே முடியாது போலிருக்கிறது.
நானும் ஒரு புத்தகத்தை எழுதி கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறேன். ஆனால் இன்றும் பல கடைகளிலும் ஸ்டாக்காகவே இருக்கின்றன. நான் பணியாற்றிய அதே வினியோக நிறுவனத்தினரின் கடைக்கும் சில நாட்களுக்கு முன்பு செல்ல நேர்ந்தது. ஆங்கில புத்தகங்கள் எல்லாம் பார்த்தவுடனே புரட்டிப் பார்க்க தூண்டும் வகையில் காட்சிக்கு வைத்திருக்கப் பட்டிருக்க தமிழ் புத்தகங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு வாங்க நினைப்போரையும் வெறுப்படைய செய்யம் வகையில்…. எத்தனை ஆண்டுகளானாலும் இந்த நிலை மாறவே மாறாது போலிருக்கிறது.
இறுதி கட்டுரையான வழி சொல்லுங்க. இதிலும் உங்களுடைய அனுபவத்தை மிக நேர்த்தியாக கூறியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
என்னுடைய மன ஆறுதலுக்காக (நிச்சயம் பொழுதுபோக்கு அல்ல) நானும் வலைப்பூக்களில் கடந்த சில ஆண்டுகளாக எழுதுகிறேன். சில மாதங்களாக அதிகம் எழுத முடிவதில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுத வேண்டும் என்று ஆவல். இறைவன் சித்தம்.
அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்

Leave a Reply