ஹாரன் – கடிதங்கள் 1
வணக்கம். தங்கள் நேசமுடன் மடல் இதழ் கண்டேன்.படைப்புகள் நன்றாக உள்ளன. குறிப்பாக ஹார்ன்அடிப்பவர்கள் சில குறிப்புகள் நன்றாக உள்ளது.இதழை தொடர்ந்து கொண்டுவாருங்கள்.
கி.சார்லஸ்
காரப்பிடாகை
நாகப்பட்டினம்(மாவட்டம்)
============
> ஒருவகையில், இந்த நேசமுடனும் என்னுடைய 21
> நாள் பயிற்சியின் தொடர்ச்சிதான்.
அந்த ஹார்ன் விவகாரத்தின் நீட்சி எங்கெங்கோ பறக்கின்றது. air-horn என்று நமது வண்டியோட்டுனர்களால் அழைக்கப்படும் எலக்ட்ரானிக் ஹார்ன் வந்ததிலிருந்து பேருந்துகளின் அட்டகாசமும் ஹைவேக்களில் தாங்க முடியாது.
நான் ஒரு ஹார்ன் விரும்பி
ஜித்தாவில் என்னுடன் இருந்த பஞ்சாபி நண்பர் வேடிக்கையாகக் குறிப்பிடுவார், ‘ஆசாத்தால் ஸ்டீரிங்கே இல்லாமல் வண்டி ஓட்ட முடியும், ஆனால், ஹார்ன் இல்லாமல் முடியாது’. இப்போது துபாயில் ஹார்ன் வழக்கத்தைக் குறைத்துவிட்டேன். சென்னை வருகையில் டூவீலர் தொட்ட மறுநொடி ஹார்னை அழுத்திப் பார்த்த பின்னரே வண்டி நகரும், அது ஒரு பழக்கம்…சல்தாஹை!
அன்புடன்
ஆசாத்
===========
‘நேசமுடன்’ நன்றாக இருக்கிறது. ஹாரன்பற்றிய கட்டுரை நான் எண்ணி வெளிக்காட்ட முடியாத பல விஷயங்களைக்கொண்டுள்ளது. என்னைப்போல் பலரும் படித்து மகிழ்ந்திருக்கவேண்டும். “21 நாட்கள்” உண்மையில் தேன்தான். வாழ்த்துக்கள்.
பிரியமுடன்,
பிரபாகரன்.
===========
ஹார்ன் அடிப்பவர்கள்: சில குறிப்புகள் – கலக்கல்.
கடைசி வரி ரொம்பவே சரி. வெளிநாடுகளைப் போல முன்னால் போவரின் மேல் தப்பிருந்தால் ஒழிய ஹார்ன் அடிக்க கூடாது என்று எழுதாத சத்தம் வந்தால் சுகம்.
- சுப்புடு