பதிலற்ற கேள்வி – எதிர்வினை 3
அன்புள்ள வெங்கடேஷ்
உங்கள் பதிலற்ற கேள்விகள் படித்தேன் மிகவும் சிறப்பானதாக இருந்தது. சில கேள்விகளுக்கு பதில் தேவைபடுகிறது. மத்திய அரசோ மாநில அரசுகளோ ஏழைகளுக்குப் பயன்படும் விவசாய, உர மானியங்களை வழங்கக்வேண்டும் என்பதற்கு ஏதேனும் வரை முறைகள் உள்ளனவா. இன்றளவில் ஏழை விவசாயிகள் யார். எல்லோரும் விவசாய கூலி தொழிலாளிகள்தானே. அரை ஏக்கர் முக்கால் ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகள் யார். சிறு விவசாயிகளை சுறா மீன்கள் விழுங்கி ஏப்பம் விட்டாயிற்று. விவசாயம் இன்று கார்பொரட் தொழில் ஆகி விட்டது. கலர் டிவி இலவசம், படங்களுக்கு தமிழில் பெயர்வைத்தால் மானியம் இப்டியே போய்கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் என்னாவது. வேறு எந்த நாடாவது இந்தளவுக்கு மானியம் கொடுக்கிறதா. என்னை பொறுத்தவரை மானியம் கொடுப்பது தவறில்லை அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை கேள்வி.
பாலாஜி
நைஜீரியா
பாலாஜி,
மானியம் கொடுப்பதில் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டதற்கு முதல் நன்றி. நீங்கள் எழுப்பியிருக்கும் அடிப்படைக் கேள்விக்கு வருவோம். யாருக்குக் கொடுப்பது? நமது நாடு, சிங்கப்பூர் மாதிரி சின்ன நாடு அல்ல. சிங்கப்பூரில் பிறக்கும் குழந்தைகளை தொடர்ந்து டிராக் செய்ய முடியும். அது வளர்ந்து பெரியவனாகி, வேலைக்குப் போய், தொழில் செய்து, திருமணம் செய்துகொள்வது போன்று பல்வேறு காலகட்டங்களில் அந்தக் குடிமகனுக்கு என்னாயிற்று என்று அரசினால் சொல்ல முடியும். உதவிகள் செய்ய முடியும். பாதுகாக்க முடியும். அமெரிக்காவில் சோஷியல் செக்கியூரிட்டி கருத்து உண்டு. வேலை இல்லை என்றால், அரசிடம் போய் உபகாரத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதெல்லாம், தகவல்களைக் கணினிமயப்படுத்துதல், சென்சஸ், நிர்வாகம் போன்ற துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியின் பயன்கள்.
இந்தியாவோ வளரும் நாடு. இங்கே இப்போதுதான் ஒவ்வொரு துறைக்குள்ளும் கணினி புக ஆரம்பித்திருக்கிறது. சென்னை மாநகராட்சியில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை நீங்கள் ஆன்லைனிலேயே டவுன்லோட் செய்துகொள்ளலாம். என் முதல் மகள் பிறந்தபோது, அவளது பிறப்புச் சான்றிதழ் இரண்டு காப்பி வாங்க, லஞ்சம் கொடுத்தது நினைவு இருக்கிறது. இன்றைக்கு, பிடிஎஃப் கோப்பாக தரவிறக்கம் செய்துகொண்டு எத்தனை பிரிண்ட் அவுட்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். வருமானவரியை கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஒரு டேக்ஸ் கண்சல்டண்ட்டையும் அணுகாமல், ஆன்லைனிலேயே பூர்த்தி செய்து, தாக்கல் செய்திருக்கிறேன். பத்திரப் பதிவுத் துறையில், இ.சி. எனப்படும் என்கம்பரன்ஸ் சர்டிபிகேட்டுக்கு நீங்கள் ஆன்லைனிலேயே அப்ளை செய்ய முடியும். கடந்த ஐந்து மாதங்களாக, மின்சார பில்லை ஆன்லைனில்தான் நான் கட்டி வருகிறேன். தமிழ்நாடு மின்சார வாரியம் அதற்கென மிக எளிமையான, உபயோகமான வலைதளத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது.
இதுதான் ஆரம்பம். இந்தியக் குடிமகனின் ஒவ்வொரு தேவையும் ஏதோ ஒரு நிரலில் போய் பதிவு ஆகவேண்டும். ஆகும். ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. அது கிரெடிட் கார்டாக இருக்கலாம். ரேஷன் கார்டாக இருக்கலாம். பாஸ்போர்ட்டாக இருக்கலாம். ஃபாரம் 16 ஆக இருக்கலாம். தொலைபேசி பில்லாக இருக்க்லாம். நிலம் வாங்கும், விற்கும் பத்திரமாக இருக்கலாம். வீட்டு வரி, தண்ணீர் வரியாக இருக்கலாம், டிரைவிங் லைசென்ஸாக இருக்கலாம். தனித்தனியாக இறைந்து கிடக்கும் இதுபோன்ற பல்வேறு தகவல்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஒன்றிணைந்த தகவல்களை எல்லாம் சின்ன சிப்பில் சேமித்து, உங்களுக்கு என்று, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஓர் எண்ணும், ஓர் அடையாள அட்டையும் வழங்கப்பட வேண்டும். இதைத்தான் இப்போது நந்தன் நீலகேனி யுனீக் ஐடெண்டிபிகேஷன்ஆஃப் இந்தியாவில் செய்ய இருக்கிறார். 2011க்குள் இதைச் செய்து முடிக்கவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை. சரியான வழியில் எடுக்கப்பட்டிருக்கும் சரியான முன்முயற்சி இது.
சரி, இந்த அடையாள எண் / அட்டை வந்துவிட்டால் என்னாகும்? நீங்கள் மேலே கேட்ட கேள்வியான “யாருக்குக் கொடுப்பது?” என்பதற்கு விடை கிடைக்கும். எனக்கு மானியம் கொடு என்றோ, எனக்குச் சலுகை தா என்றோ எல்லோராலும் போய் அரசிடம் நிற்க முடியாது. உங்கள் ஜாதகமே உங்கள் அடையாள எண்ணில் / அட்டையில் பொதிந்திருக்கும்போது, உங்கள் கோரிக்கையின் உண்மை துலங்கிவிடும்.
இத்தனை ஆண்டுகள் நாம் ஏன் இதைச் செய்யவில்லை? நாம் ஏன் பின்தங்கி இருக்கிறோம், எவ்வளவு பொருளாதார நஷ்டம் தெரியுமா என்றெல்லாம் கேள்விகள் கேட்பதில் அர்த்தமில்லை. வளர்ச்சி, சமூகத்துக்குச் சமூகம் வேறுபடும். அது மெல்லத்தான் வரும். வந்தபின், அதன் பயன்கள் புரிந்தபின், நாம் வந்த பாதையை முழுவதும் மறந்தே போய்விடுவோம். மற்றதெல்லாம் சரித்திரமாகிவிடும்.
நேசமுடன்
வெங்கடேஷ்

===========

//இந்த அடையாள எண் / அட்டை வந்துவிட்டால் என்னாகும்? நீங்கள் மேலே கேட்ட கேள்வியான “யாருக்குக் கொடுப்பது?” என்பதற்கு விடை கிடைக்கும். எனக்கு மானியம் கொடு என்றோ, எனக்குச் சலுகை தா என்றோ எல்லோராலும் போய் அரசிடம் நிற்க முடியாது. உங்கள் ஜாதகமே உங்கள் அடையாள எண்ணில் / அட்டையில் பொதிந்திருக்கும்போது, உங்கள் கோரிக்கையின் உண்மை துலங்கிவிடும்//
வெங்கடேஷ் சார்,
இது நல்ல திட்டம் தான். ஆனால் பொய்யான ஜாதகம் அளிப்பதில் – வருமானம், ஜாதி என எல்லாவற்றையும் மறைத்து ஜாதிக்காக, சலுகைக்காக தவறான தகவல்கள் அளிப்பதில் – நம்மவர்கள் தேர்ந்தவர்கள். எத்தனை போலி ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. அது போலத் தான் இதுவும் அமையும். அடையாள அட்டையில் சம்பந்தப்பட்டவரின் போட்டோ இருக்கலாம். ஆனால் தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்டு, அதன் பின்னர் அடையாள அட்டை வழங்கப்பட்டால் மட்டுமே அது நீடித்த வகையில் எதிர்காலத்துக்குப் பயன் உள்ளதாய் அமையும். அது அரசியல்வாதிகளின் குறுக்கீடற்று அமைந்தால் நல்லது, அமையுமா?
இங்கே அரவிந்த் ஒரு நல்ல கேள்வியை, அச்சத்தை, நடைமுறையில் இருந்துவருவதைச் சொல்லியிருக்கிறார். வெங்கடேஷ், நீங்கள் எந்த உலகத்தில், என்ன தளத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை, அதனால் உங்களுடைய பதிலில்,
/சரி, இந்த அடையாள எண் / அட்டை வந்துவிட்டால் என்னாகும்? நீங்கள் மேலே கேட்ட கேள்வியான “யாருக்குக் கொடுப்பது?” என்பதற்கு விடை கிடைக்கும். எனக்கு மானியம் கொடு என்றோ, எனக்குச் சலுகை தா என்றோ எல்லோராலும் போய் அரசிடம் நிற்க முடியாது. உங்கள் ஜாதகமே உங்கள் அடையாள எண்ணில் / அட்டையில் பொதிந்திருக்கும்போது, உங்கள் கோரிக்கையின் உண்மை துலங்கிவிடும்./
என்பதை உண்மையென்றே நம்பி எழுதியிருக்கிறீர்களா, நையாண்டி செய்து எழுதியிருக்கிறீர்களா அல்லது புரிந்துகொள்ளாமலேயே எழுதியிருக்கிறீர்களா என்பதை அனுமானிக்க முடியவில்லை.
இங்கே ரெட்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள், கொண்டா ரெட்டி என்று போலியான சாதிச் சான்றிதழ் பெற்று அரசின் சலுகைகளை நிறையவே அனுபவித்துக்கொண்டிருப்பது ஊரறிந்த ரகசியம். அதே மாதிரி, நாயக்கர் காட்டு நாயக்கர் ஆகி விடுவதும்!
தெரிய வந்த விஷயங்களிலேயே நடவடிக்கை எடுக்க, இது வரை எந்த ஆட்சியாளர்களுக்குமே அக்கறை இருந்ததில்லை. தகவல்களைச் சேகரிப்பதிலேயே ஏகப்பட்ட குளறுபடிகள், அதை சரிபார்ப்பது என்ற பேச்சே இது வரை இருந்ததில்லை. சரிசெய்ய, சம்பந்தப்பட்டவர்களே போய் முறையிட்டாலும் திருத்துவதற்கான வழிமுறைகள் இங்கே இருந்ததே இல்லை.
காலம் மாறும், அப்போது காட்சிகளுமே மாறும் என்பது உண்மைதான்! எந்தத் திசையில் என்பது இன்னொரு ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரிக் கேள்விதான்!
விடுதலை அடைந்து இந்த அறுபத்து இரண்டாண்டுகளில், சுதந்திரம் என்பது பெரும்பான்மையான மக்களுக்கு இலவசமாகக் கலர் டி வீ, அவ்வப்போது ரேஷன் கடையில் சில இலவசங்கள், இடைத் தேர்தல் வந்தால் கொஞ்சம் அதிக அன்பளிப்பு, பொதுத் தேர்தல் வந்தால் கொஞ்சம் கம்மி என்று மட்டுமே ஆகிப்போன ஒரு அரசியல் வியாதி பிடித்து ஆட்டுகையில், உங்கள் கேள்விகள், வெறும் கனவாகவே நின்று விடுகின்றன என்பது ஒரு யதார்த்தமான சோகம்.
அதனால் என்ன? கனவிலாவது சந்தோஷமாக இருக்கக் கூடாதா என்ன?
வெங்கடேஷ் அவர்களுக்கு,
தங்கள் பதிலுக்கு நன்றி. சிங்கப்பூரை போல் இந்திய சிறிய நாடு கிடையாது ஆனால் பங்களாதேஷ் சிங்கப்பூரை போல் சிறிய நாடுதான். ஊழலில் முதல் இடம். வறுமை கோட்டிற்கு கிழ வாழும் மக்கள் 60% மேல். மக்கள் இந்தியாவிற்கு இடம் பெயர்கிறார்கள் (கல்கத்தவில் வங்காள அகதிகள் முகம் இருக்கிறது, அதனால் பல பிரச்சினைகள் எழுகிறது). ஜப்பானை, ஜெர்மனி ஆகிய நாடுகளை எடுத்துக்கொள்ளுங்கள் நாலாட்சி (Good Governance) நடக்கிறது. அம்பேத்கர் 10% ஆரம்பித்த இட ஒதுக்கிடு. இன்று 65% மேல் போய்விட்டது (அம்பேத்கர். 10 ஆண்டிற்கு பிறகு இட ஒதுக்கீடு கொள்கையை ஒழிக்கும் படி சொன்னார்) பத்திரப் பதிவுத் துறையில், இ.சி. எனப்படும் என்கம்பரன்ஸ் சர்டிபிகேட்டுக்கு நீங்கள் ஆன்லைனிலேயே அப்ளை செய்ய முடியும் ஆனால் இ.சியை பெற முடியுமா. மின்சார பில்லை ஆன்லைனில் கட்டலாம் என்னும் சேவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது ஆனாலும் கடைசி நாளில் ஏன் இந்த கூட்டம். வாக்காளர் அட்டை லட்சக்கணக்கில் குப்பை தொட்டியில் கிடந்தது. வாக்காளர் அட்டை கொடுக்க பட்டதால் கள்ள ஓட்டுகள் குறைந்தனவா?. சரி உங்கள் கூற்றுப்படி பார்த்தால் யுனீக் ஐடெண்டிபிகேஷன் அட்டை கொடுத்து விட்டால் “யாருக்குக் கொடுப்பது?” என்பதற்கு விடை கிடைக்குமா?