கொஞ்சம் விளக்கம்; கொஞ்சம் அறிமுகம்

கொஞ்சம் விளக்கம்; கொஞ்சம் அறிமுகம்
==============================
நேசமுடன் மடல் இதழ் உங்களில் பலருக்கு புதிதாக இராது. ஒரு சிலருக்குப் புதிதாக இருக்கலாம். 2003, 2004 ஆண்டுகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் நான் இந்த நேசமுடன் மடல் இதழ்களை உங்களுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட 34 இதழ்கள் வெளிவந்தன. ஒவ்வொரு இதழிலும் 4 கட்டுரைகள் வரை எழுதி, என் கருத்துகளை, கற்பனைகளை, எதிர்பார்ப்புகளை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த காலகட்டம் அது.
அந்தச் சமயத்தில், மூத்த எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றோர் எழுதிய அனுசரணையான மின்னஞ்சல்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தன. மின்னஞ்சல் மூலமே எண்ணற்ற புதியவர்களோடு நட்பு பாராட்ட முடிந்தது. நேரில் சந்தித்தபோதும் நல்ல உறவைத் தொடர முடிந்தது. இலக்கியமும் நட்பும் அற்புதமான இணை. ஒன்றை ஒன்று மேம்படுத்தும் இணை.
இப்போது மீண்டும் நேசமுடன் மடல் இதழோடு உங்களைச் சந்திக்கிறேன். இதற்குள் இணைய உலகில் பல முன்னேற்றங்கள். சென்ற முறை நேசமுடன் நடத்தும்போதே தமிழில் வலைப்பதிவுகள் தொடங்கிவிட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக டிவிட்டர். இது நடுவே பாட்காஸ்டிங். மிகப் பெரிய அளவில் சமூக வலைப்பின்னல் தளங்கள் வளர்ந்திருக்கின்றன.
அடிப்படையில் இன்னும் எனக்கு மின்னஞ்சல் தான் பிடித்திருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்ப விஷயங்களிலேயே மனத்துக்கு நெருக்கமானது மின்னஞ்சல்தான். உங்கள் வீட்டுக்கு வந்து விழும் கடிதத்தைப் போல், உங்கள் தோட்டத்தில் சிதறிக்கிடக்கும் பன்னீர்ப் பூக்களைப் போல, உங்கள் அம்மாவின் இளஞ்சூட்டு மடி போல, எனக்கு மின்னஞ்சல்கள். நான் மின்னஞ்சல்களை அழிக்க விரும்புவதில்லை. முடிந்தவரை எனக்கு மற்றவர்கள் எழுதிய கடிதங்களையும் நான் எழுதிய பதில்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். திரும்பப் படிக்கும்போது, காலத்தை மீட்டும் அற்புத வீணை, கடிதங்கள்.
மற்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் கூடவே அவசரம் என்ற ஒன்றைக் காலில் கட்டிக்கொண்டு வருகின்றன. Immediacy. உடனே உடனே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வேகம் அதன் மையம். மின்னஞ்சல்கள் அப்படி அல்ல. இன்று நீங்கள் இதைப் படிக்கவில்லை என்றாலும், என்றேனும் நேரம் கிடைக்கும்போது, மனம் தோதுப்படும்போது படித்துக்கொள்ளலாம்.
மீண்டும் நேசமுடன் மடல் இதழை ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சில ஆண்டுகளாகவே எண்ணம் இருந்தது. முதிர்ச்சியும் பக்கும்வமும் பல செய்திகளை வேறு மாதிரி அணுகச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. ஒரு வித நிதானம் கைகூடியிருக்கிறது. இதையெல்லாம் உங்களோடு தொடர்ந்து பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மீண்டும் நேசமுடன் தொடங்கப்பட்டிருக்கிறது.

  1. வாழ்த்துகள் வெங்கடேஷ். மீண்டும் தொடங்கியது மகிழ்ச்சிதான். மின்னஞ்சல் பெட்டிகள் நிரம்பிவிடும்போது என்ன செய்வது? எனக்கு இப்போது அடிக்கடி இம்மாதிரி ஆகிறது. ஆயினும் உங்கள் ஆக்கங்களை இந்த வலைத்தளத்தில் படிக்க முடியும். முழுப் படைப்பையும் மின்னஞ்சலில் அனுப்புவதை விட, வால் போல் சில வரிகளை அனுப்புவது, இதற்குத் தீர்வாகுமா?

Leave a Reply