2009ல் வெளியான நாவல்கள்

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகங்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 2 Comments

சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ள புதிய நாவல்களின் பட்டியல் இது. இப்பட்டியலில் குறுநாவல்கள் தொகுப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை எல்லா பதிப்பகங்களிலும் கேட்டுப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபட்டவை இருக்கலாம். கண்காட்சிக்கு வராத பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் நாவல்களை வெளியிட்டிருக்கலாம். நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புதிய நாவல்களைத் தெரிவியுங்கள். இந்தப் பட்டியல் அப்போதுதான் நிறைவடையும்.

கரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகங்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 1 Comment

என்னை மிகவும் கவந்த ஒரு அம்சம், கதையின் தொடக்கம்தான். கதை தொடங்கப்படும் இடம் பளிச்சென்று இருக்கவேண்டும். கட்டிப்போடுவது போல் இருக்கவேண்டும். நாவலுக்குள் இழுத்துப் போடுவதாக இருக்கவேண்டும். உஷா அதைச் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறார். பிரச்னையின் மையத்தில் இருந்து நாவலைத் தொடங்கியிருக்கிறார். கவனத்தைக் கவரும் இடம் அது.

பேசாத சொற்கள்

Posted in சமூகம், பொது on January 21st, 2010 by வெங்கடேஷ் – 2 Comments

பல பேர்கள் வாய்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பதைச் சென்னை மாநகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், தத்தமது சொந்த உலகத்துக் கவலைகளை, யாரிடம் சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியாமல், பேசிக்கொண்டே செல்வார்கள். முகத்தில் கோபம், உக்கிரம், வேகம் எல்லாம் பீறிட்டுக்கொண்டு இருக்கும்.

வலி நிரம்பிய சரித்திரம்

Posted in சமூகம், மாணவர்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 2 Comments

வாழ்க்கையில் டாக்டரேட் வாங்குவதும் ரேங்க் வாங்குவதும் இவ்வளவு கவர்ச்சிகரமான விஷயங்கள், உணர்ச்சிபூர்வமான தருணங்கள் என்று எனக்குத் தோன்றியதில்லை! வீட்டுக்கு வந்து பெட்டிக்குள் பூட்டிவைத்துள்ள என் பட்டங்களை எடுத்துப் பார்த்தேன். அதன் பின்னே தெரிந்தது, என் அப்பாவின் முகம். உழைப்பும் களைப்பும் வலியும் உற்சாகமும் ஆர்வமும் கலந்துகட்டிய முகம்.

நேசமுடன் 2009 – ஒரு ரெவியூ

Posted in நேசமுடன் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 1 Comment

புத்தாண்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்துவிட்டது. புத்தாண்டின் முதல் நேசமுடன் இதழ் 6ஆம் தேதி புதன்கிழமை அன்று வந்திருக்கவேண்டும். வெளிவரவில்லை. புதிய பணி, வேலை அழுத்தம் என்று எந்தக் காரணத்தையும் என் மனம் ஏற்க மறுக்கின்றது.

2010 – செய்ய நினைக்கும் விஷயங்கள்

Posted in பொது on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

2010 தீர்மானங்கள் என்று நான் இதைப் போடவில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் கஷ்டம்தாம். அதனால், இதையெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதை எழுதி வைக்கிறேன்.

2009 – மறக்க முடியாத ஆண்டு 4 : நானும் நண்பர்களும்

Posted in அனுபவம், பொது on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

நேசமுடன் மடல் இதழை மீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்ய முடிந்தது. 21 இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இதழுக்கு 3 கட்டுரைகள் என்றாலும் தோராயமாக 63 கட்டுரைகள் எழுத முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. எழுதுவதை விட எழுத்தாளனுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

2009 – மறக்க முடியாத ஆண்டு 3 : பொருளாதாரம்

Posted in பொருளாதாரம் on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

2009 தொடங்கியபோது, விலைவாசி உயர்வு கடுமையாக இருந்தது. அக்டோபர், நவம்பர் 2008ல் இருந்தே விலைவாசி கடுமையாக உயரத் தொடங்கியிருந்தது. 2009 இறுதி வரை விலைவாசி இறங்கவே இல்லை. காய்கறிகள், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள் எல்லாம் கீழ் மத்திய வர்க்கமும் மத்திய வர்க்கமும் வாங்க முடியாத உயரத்துக்குப் போய்விட்டது. எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

2009 – மறக்க முடியாத ஆண்டு 2 : பத்திரிகை

Posted in இதழியல் on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

புதிய தலைமுறை: இதழாளர், எழுத்தாளர் மாலனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். ரூ.5 என்ற விலை ஒரு பெரிய அட்ராக்‌ஷன். நல்ல விளம்பரம் இன்னொரு அட்ராக்‌ஷன். இதழ் மிகவும் தரமாக இருக்கிறது. வழக்கமான பத்திரிகை ஃபார்மேட்டில் இல்லாமல், வேறு ஒரு பாதையை உருவாக்குகிறது புதிய தலைமுறை. ஆங்கில டைம் இதழின் சாயல் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் நிறைய உண்டு. இளைஞர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய ஆர்வங்கள் இப்படித்தான் என்று வெகுஜன மனத்தில் ஒரு ஸ்டீரியோடைப்பிங் இருக்கிறது. அதை முற்றிலும் மாலன் உடைத்திருக்கிறார்.

2009 – மறக்க முடியாத ஆண்டு 1 : பதிப்பகம்

Posted in பதிப்பகம் on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

திரிசக்தி பதிப்பகம், உயிர் எழுத்து வெளியீடு, அகநாழிகை பதிப்பகம் ஆகியவை இந்த ஆண்டு என் கண்ணுக்குத் தெரிந்த புதிய அறிமுகங்கள். திரிசக்தி 27 நூல்களை வெளியிட்டிருக்கிறது. உயிர் எழுத்து 30.12.2009 அன்று வெளியீட்டு விழா வைத்திருக்கிறது. அகநாழிகை பத்திரிகை நூல்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.